நடிப்பில் மிரட்டிய விக்ரம்! தங்கலான் படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ!!

Published by
பால முருகன்

சென்னை : விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படம் கலவையான விமர்சனத்தையும், விக்ரம் நடிப்பு மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் இசை பெரிய அளவில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான ‘தங்கலான்’ திரைப்படம் ஆக 15-ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து, டேனியல் கால்டாகிரோன், பசுபதி மற்றும் முத்துக்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியான தங்கலான் படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தினை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் டிவிட்டரில் தெரிவித்துள்ள விமர்சனத்தை பற்றி பார்க்கலாம்.

படத்தினை பார்த்துவிட்டு நெட்டிசன் ஒருவர் ” தங்கலான் படத்தில் க்ளைமாக்ஸ் காட்சி வரை சர்வதேச அளவிலான மேக்கிங் & பெர்ஃபார்மன்ஸ். திரைக்கதை மெதுவாக சென்றது. ஆனாலும், படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் நன்றாக இயக்கியுள்ளார். என கூறிள்ளார்.

மற்றோருவர் ” தங்கலான் படம் சினிமா மாஸ்டர் பீஸ் கதை கொண்ட படம். படத்தின்  திரைக்கதை, வசனம், நடிப்பு ஜி.வி. இசை என எல்லாமே மிகவும் அருமை” என கூறியுள்ளார்.

மற்றோருவர் ” தங்கலான் படத்தின் முதல் பாதி கடந்து செல்லும் வகையில் இருக்கிறது. விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் நடிப்பு நன்றாக இருந்தது. ஜிவி பிரகாஷ் இசை நன்றாக இருக்கு. இடைவெளிக்குப் பின் கதை நகரவில்லை; உணர்வுபூர்வமான இணைப்பு இல்லை. பா ரஞ்சித் ஏமாற்றம் கொடுத்துவிட்டார்”  எனவும் தெரிவித்துள்ளார்.

மற்றோருவர் ” விக்ரம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார், ஆனால் மோசமான எழுத்து காரணமாக படம் சரிந்தது. உணர்ச்சி ரீதியாக தொலைவில் உள்ளது மற்றும் இணைக்க முடியவில்லை. VFX காட்சிகள் பரவாயில்லை. விக்ரமின் திறமையை முழுமையாகப் பயன்படுத்துவதற்கான இன்னொரு வாய்ப்பை இழந்தது ஏமாற்றமளிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.

 

Published by
பால முருகன்

Recent Posts

பால் வேண்டும், மோர் வேண்டும் ஆனா… “கால்நடை மனநிலை” பற்றி சீமான் பேச்சு!

மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…

59 seconds ago

ரொம்ப பேசுது அபராதம் போடணும்! Grok மீது போலாந்து அமைச்சர் புகார்!

வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…

30 minutes ago

INDvsENG : “ஆரம்பே அமர்க்களம்”..இங்கிலாந்தை திணற வைத்த நிதிஷ் குமார் ரெட்டி!

லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…

2 hours ago

அதிமுக – பா.ஜ.க. கூட்டணியால் முதல்வருக்கு காய்ச்சல்! நயினார் நாகேந்திரன் பதிலடி!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…

3 hours ago

ஈரான் கொடுத்த கொலை மிரட்டல்? டிரம்ப் சொன்ன பதில்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…

3 hours ago

எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் மாதிரி விஜய் அரசியல் செய்யணும்- ரோஜா அட்வைஸ்!

திருப்பதி : ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான ரோஜா, நடிகர் விஜய்யின் அரசியல்…

4 hours ago