Categories: சினிமா

படையப்பா படத்தை விட ‘விரலுக்கேத்த வீக்கம்’ தான் அதிக கலெக்சன்! உண்மையை உடைத்த லிவிங்க்ஸ்டன்!

Published by
பால முருகன்

ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1999 – ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘படையப்பா’ . இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும், மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த திரைப்படத்தில் சிவாஜி, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் , செந்தில், கவுண்டமணி, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர்  ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.அந்த சமயமே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த திரைப்படம் வெளியானது.  அதற்கு முக்கிய காரணமே படத்தினுடைய பட்ஜெட் தான். கிட்டத்தட்ட 5 கோடி பட்ஜெட்டில் இந்த திரைப்படம் அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட து. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த  படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர் என்று கூறலாம்.

படம் வெளியாகி இத்தனை வருடங்கள் ஆகிறது. இன்னும் இந்த திரைப்படத்திற்கென்று தனி  ரசிகர்கள் கூட்டம் தனியாகவே இருக்கிறது என்று கூறலாம். இப்போது தொலைக்காட்சியில் போட்டால் கூட படத்தை மக்கள் விரும்பி பார்ப்பார்கள். அந்த அளவிற்கு, ஒரு அருமையான படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கொடுத்திருந்தார்.

இந்த திரைப்படம் வசூல் ரீதியாக பெரிய ஹிட் ஆகி இருக்கும் நிலையில், இந்த படம் வெளியான அதே ஆண்டில் அதாவது படையப்பா வெளியான அடுத்த மூன்று மாதங்களில்  இயக்குனர் துரை இயக்கத்தில் லிவிங்ஸ்டன், குஷ்பூ, விவேக், வடிவேலு, கோவை சரளா, நாசர், ஊர்வசி உள்ளிட்டோர் நடிப்பில் ‘விரலுக்கேத்த வீக்கம்’  எனும் திரைப்படமும் வெளியானது.

இந்த திரைப்படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது. அதற்கு முக்கிய காரணம் படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் என்றே கூறலாம். அந்த அளவிற்கு படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் எல்லாம் மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இந்நிலையில் படையப்பா படத்தை விட இந்த திரைப்படம் தான் அதிக வசூல் செய்துள்ளதாகவும் அந்த  சமயம் செய்திகள் வெளியானது.

இதனையடுத்து, சமீபத்தில் பேட்டி ஒன்றில் இது பற்றி கேள்விக்கு நடிகர்  லிவிங்ஸ்டன் மனம் திறந்து பதில் அளித்துள்ளார். பேட்டியில் அவரிடம் படையப்பா படமும், விரலுக்கேத்த வீக்கம் படமும் முன்பு பின்பு ரீலிஸ் ஆனது. அந்த சமயம் இந்த இரண்டு படங்களையும்  ஒப்பிட்டு பேசுவது நடந்திருக்கும் அதனை பார்த்து நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு பதில் அளித்த லிவிங்ஸ்டன் ” எனக்கு சரியாக தெரியவில்லை ஆனால், ‘விரலுக்கேத்த வீக்கம்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. படத்தின் இயக்குனர் துறை என்னிடம் படையப்பா படத்தை விட இந்த திரைப்படத்திற்கு தான் வசூல் அதிகம் என கூறினார் என லிவிங்ஸ்டன் தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

“ரொம்ப குறைவான வரி”…இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக ஜூலை 1, 2025 அன்று…

2 minutes ago

30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதி அபுபக்கர் சித்திக்… ஆந்திராவில் அதிரடி கைது!

ஆந்திரா : 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதி அபுபக்கர் சித்திக், ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் தமிழ்நாடு காவல்துறையின்…

21 minutes ago

எத்தனை சீட் …விளக்கம் கொடுத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!

சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தங்கள்…

40 minutes ago

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

10 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

10 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

11 hours ago