indian 2 [File Image]
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் இந்தியன். இந்த திரைப்படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக ஹிட் ஆன நிலையில், படத்திற்கான இரண்டாவது பாகத்தையும் கமல்ஹாசனை வைத்து ஷங்கர் இயக்கி இருக்கிறார்.
இந்த இரண்டாவது பாகத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, குல் ப்ரீத் சிங், டெல்லி கணேஷ், பாபி சிம்ஹா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், படம் விரைவில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், ‘ இந்தியன் 2 ‘ திரைப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், ரசிகர்கள் அனைவரும் படத்திற்காகவும், படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் படத்தின் பாடல்கள், டிரைலர் ஆகியவற்றிற்கு ஆவலுடன் காத்துள்ளனர்.
இதற்கிடையில், படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என முன்னதாக போஸ்டர் ஒன்றை வெளியீட்டு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அப்டேட் படத்திற்கான ரிலீஸ் தேதியாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் இருந்து ரிலீஸ் தேதி அப்டேட் வருகிறதா அல்லது ட்ரைலர் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வருகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…