Janhvi Kapoor [file image]
ஜான்வி கபூர் : பிரபல நடிகரை திருமணம் செய்துகொள்வதாக பரவும் வதந்திகளுக்கு நடிகை ஜான்வி கபூர் விளக்கம் அளித்துள்ளார்.
சினிமாவில் இருக்கும் நடிகைகள் எல்லாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய விஷயங்களில் திருமணம் குறித்த வதந்தி செய்திகளும், திருமணம் குறித்த கேள்விகள் என்று கூறலாம். திருமணம் குறித்த வதந்திகள் பரவியவுடன் நடிகைகள் சற்று டென்ஷனுடன் விளக்கம் கொடுப்பது உண்டு. அப்படி தான் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தனது திருமண வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை ஜான்வி கபூர் பிரபல நடிகர் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த தகவல் பற்றி ஜான்வி கபூர் எதுவும் சொல்லாமல் இருந்த காரணத்தால் பலரும் உண்மையில் ஜான்வி கபூர் திருமணம் செய்யபோகிறார் என்று தகவலை பரப்ப தொடங்கினர்.
இந்த நிலையில், சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நடிகை ஜான்வி கபூர் தன்னுடைய திருமண வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து பேசிய ஜான்வி கபூர் ” சமீபத்தில் நான் என்னுடைய திருமண வதந்தி செய்திகளை பற்றி படித்தேன். நான் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று பலரும் செய்திகளை எழுதி கொண்டு இருக்கிறார்கள்.
நான் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், இரண்டு மூன்று கதைகளைக் பரப்பி கொண்டு இருக்கிறார்கள். எனக்கு தெரியாமல்.. ஒரு வாரத்தில் திருமணம் நடந்து முடிந்துவிட்டது என்று எழுதி திருமணம் கூட செய்து விடுவார்கள் என்று தோணுகிறது.ஆனால் தற்போது எனது தொழிலில் கவனம் செலுத்தி வருகிறேன்.
என்னுடைய ஆர்வம் எல்லாம் சினிமா பக்கம் மட்டுமே இருக்கும் காரணத்தால் எனக்கு இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை” என்றும் நடிகை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். மேலும், ஜான்வி கபூர் ஹீரோயினாக நடித்துள்ள ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி’ ஹிந்தி படம் வரும் மே 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…