rekha tamil actress sad [File Image]
சினிமாவில் 1980,90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்த நடிகைகளுக்கு பெரிதாக இந்த காலத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கூட வாய்ப்புகள் வருவதில்லை. ஒரு சில நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைத்தாலும் கௌசல்யா, ரேகா, தேவயானி, சிம்ரன், உள்ளிட்ட நடிகைகளுக்கு எல்லாம் பெரிய அளவில் சொல்லும் படி வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த சூழலில் நடிகைகளுக்கு 40 வயசு ஆனாலே கருவேப்பிலை மாதிரி தூக்கி போட்டறாங்க என நடிகை ரேகா கூறியுள்ளார்.
ரேகா தற்போது மிரியம்மா என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில், அந்த இசைவெளியீட்டு விழாவில் தான் நடிகை ரேகா வருத்தத்துடன் முன்னணி நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் இல்லை என்று பேசி இருக்கிறார்.
மேடையில் பேசிய அவர் ” சினிமா என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் எனவே சினிமாவில் எல்லா விதமான கதாபாத்திரத்திலும் நடிக்கவேண்டும் மற்றபடி பணம் எல்லாம் எனக்கு முக்கியமே இல்லை. வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்றால் சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் சரி பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும் சரி நான் நடித்துக்கொடுப்பேன்.
இப்போது இருக்கும் சினிமாவே வேறு மாதிரி இருக்கிறது. ஏனென்றால், படத்தில் நடிக்கவேண்டும் என்றால் இரண்டு நாட்களுக்கு முன்பு கால் செய்து படப்பிடிப்பு இருக்கு வருகிறீர்களா? என்று கேட்கிறார்கள். ஆனால், அந்த சமயத்தில் எல்லாம் எங்களுக்கு முதலில் போனில் படத்தின் கதையை சொல்வார் ஹீரோ ஹீரோயினுக்கு சமமான கதாபாத்திரம் கொண்ட காட்சிகள் படத்தில் இருக்கும்.
ஆனால், இப்பொது எல்லாம் அப்படி இல்லை கமர்ஷியல் அதிகமான காரணத்தால் ஹீரோயின்களுக்கான காட்சிகள் குறைந்துவிட்டது. நன்றாக நடிக்க தெரிந்த நடிகைகளுக்கு கூட இப்போதெல்லம் வாய்ப்புகள் கிடைக்கமாட்டிக்கிறது. என்னை விட திறமை வாய்ந்த நடிகைகள் பலர் இருக்கிறார்கள். குறிப்பாக ஊர்வசி போன்ற நடிகைகள் எல்லாம் எதற்காக தொடர்ச்சியாக படங்களில் நடிக்கமாட்டிக்கிறார்கள் என்ற கேள்வியும் எனக்கு இருக்கிறது.
நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க பல நடிகைகள் தயாராக இருக்கிறோம் நாங்களா வாய்ப்பு கேப்டத்தை விட நீங்களா வந்து தருவது தான் நன்றாக இருக்கும். வயது என்பது வெறும் நம்பர் என்று தான் நான் சொல்வேன் என்றென்றால் வயதானாலும் கூட நடிகைகள் நடிக்க முடியும். யோகோ செய்து கொண்டு உடலை சரியாக வைத்து கொண்டாலே போதும்.
இப்போதெல்லாம் நடிகைகளுக்கு 40 வயசு ஆனாலே கருவேப்பிலை மாதிரி தூக்கி போட்டறாங்க அப்படி செய்யாமல் நன்றாக நடிக்க தெரிந்த நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும். என்னை பொறுத்தவரை சினிமாவில் நான் தொடர்ச்சியாக நடித்துக்கொண்டே இருக்கவேண்டும். என்னுடைய உயிர் இருக்கும் வரை சினிமாவில் நடித்து கொண்டே இருக்கவேண்டும் சென்னையில் இருக்கவேண்டும்” எனவும் நடிகை ரேகா தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…