”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்றும் ஜனநாயகம் என்பது ஒரு அமைப்பு அல்ல, அது ஒரு கலாச்சாரம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

PMModi - Ghana India

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல் 9-ம் தேதி வரை 8 நாள் அரசுமுறைப் பயணமாக கானா, ட்ரினிடாட் மற்றும் டொபாகோ, அர்ஜென்டினா, நமீபியா, மற்றும் பிரேசில் ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

முதலில், கானா நாட்டிற்கு அரசு முறை பயணமாக முதலில் சென்றுள்ளார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு, கானா நாட்டிற்கு செல்லும் பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி ஆவார். அங்கு, கானா அதிபருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகாவின் பாரம்பரிய முறையில் உருவாக்கப்படும் அழகான குவளைகளை பரிசாக அளித்துள்ளார்.

கானாவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் உரையாற்றி உள்ளார். ‘இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்றும் ஜனநாயகம் என்பது ஒரு அமைப்பு அல்ல, அது ஒரு கலாச்சாரம்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ”இந்தியாவின் பன்முகத்தன்மை சவால் அல்ல, மாறாக அது இந்தியாவின் பலம், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா ஒரு பெரிய மாற்றத்தைக் கண்டுள்ளது. இந்தியா மற்றும் கானாவின் வரலாறுகள் காலனித்துவ ஆட்சியின் வடுக்களைத் தாங்கி நிற்கின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவாக்கப்பட்ட உலக ஒழுங்கு வேகமாக மாறி வருகிறது.

கானா நாட்டின் நாடாளுமன்றத்தில் முதல் இந்திய பிரதமராக உரையாற்றுவதில் பெருமை கொள்கிறேன். ஜனநாயகத்தை நிலைநாட்டும் ஆட்சி கானாவில் நடைபெற்று வருகிறது ஆப்பிரிக்க கண்டத்தின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது கானா, ஜனநாயகத்தின் தாயாக இந்தியா உள்ளது.

இந்தியாவில் 2,500-க்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன, 20 வெவ்வேறு கட்சிகள் இந்திய மாநிலங்களை ஆள்கின்றன. தெற்குலக நாடுகளுக்கு குரல்கொடுக்காமல், உலக அளவிலான முன்னேற்றத்தை எட்ட முடியாது என்றும், இதைக்கருத்தில் கொண்டே ஒரே உலகம்-ஒரே குடும்பம்-ஒரே எதிர்காலம் என்ற தொலைநோக்கு பார்வையை இந்தியா வலியுறுத்தி வருவதாகவும்” கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்