atlee trisha and samantha [File Image]
Atlee : தன்னுடைய அடுத்த படத்தில் த்ரிஷாவை நடிக்க வைக்கலாமா அல்லது சமந்தாவை நடிக்க வைக்கலாமா? என அட்லீ குழப்பத்தில் இருக்கிறாராம்.
இயக்குனர் அட்லீ தற்போது ஜவான் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து புது படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. அதற்கு காரணம் அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து வருவது தான்.
புஷ்பா 2 படத்தில் நடித்து முடித்த பிறகு அவர் அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக எந்த ஹீரோயினை நடிக்க வைக்கலாம் என்ற பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஒரு பக்கம் படத்தில் ஹீரோயினாக த்ரிஷா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
அதனை தொடர்ந்து நேற்றிலிருந்து படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக சமந்தாவை நடிக்க வைக்கலாம் என்ற பேச்சுவார்தையும் அடிபட்டு கொண்டு இருக்கிறது. சமந்தா ஏற்கனவே அட்லீ இயக்கத்தில் வெளியான தெறி படத்தில் நடித்திருந்தார். எனவே, அவரை நடிக்க வைக்கலாமா? அல்லது த்ரிஷாவை நடிக்க வைக்கலாமா? என அட்லீ சற்று குழப்பத்தில் இருக்கிறாராம்.
த்ரிஷாவின் மார்க்கெட் இப்போது எப்படி இருக்கிறது என்பதை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். ஏனென்றால், அஜித்திற்கு ஜோடியாக விடாமுயற்சி மற்றும் கமல்ஹாசனின் தக்லைஃப் படத்திலும் கூட த்ரிஷா நடித்து வருகிறார். அதைபோல் மற்றோரு பக்கம் தரமான கம்பேக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு சமந்தாவும் இருக்கிறார். இருவரில் யார் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்தாலும் படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. யார் நடிக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…
கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…
பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…
சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…
சென்னை : 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர்…