வெற்றி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்? – இன்று பெங்களூருடன் மோதல்.!
இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு அணியை சென்னை அணி எதிர்கொள்ள உள்ளது.

பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும் மோதுகின்றன. சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
முதல் அணியாக வெளியேறிய சிஎஸ்கேவுடன் பிளே ஆஃப் வாய்ப்பை நெருங்குவதற்காக பெங்களூரு கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த மேட்ச் போட்டி நிறைந்தது, இந்தப் போட்டியானது அணிகளுக்கானது மட்டுமின்றி, இரு அணி ரசிகர்களுக்கும் இடையிலானது என்பதை ஸ்டேடியத்தில் இன்று காணலாம் என விராட் கோலி கூறியுள்ளார்.
ஆர்சிபி அணி வெற்றிப் பயணத்தில் உள்ளது, கடைசி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த போட்டியில், ஆர்சிபி அணி டெல்லி அணியை அதன் சொந்த மைதானத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. சின்னசாமி மைதானத்தில் முதல் மூன்று போட்டிகளில் தோல்வியடைந்த ஆர்சிபி, இறுதியாக ராஜஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போது ஆர்சிபி அணி, சிஎஸ்கே -வை தோற்கடிப்பதன் மூலம் தங்கள் வெற்றிப் பயணத்தைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பு கிறார்கள். இன்று நடைபெறும் சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, பெங்களூர் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும். அது மட்டுமில்லாமல், பிளேஆஃப்களுக்குத் தகுதி பெறும் முதல் அணியாக மாறும்.
சிஎஸ்கே அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, அதே நேரத்தில் 8 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இந்த அணி 4 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் ஆர்சிபி 10 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது, மேலும் இந்த அணி 14 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது.