Categories: சினிமா

இதயம் நொறுங்கி சொல்றேன் – கண்ணீர் ததும்ப நடிகர் வடிவேலு இரங்கல்!

Published by
கெளதம்

இளையராஜாவின் மகளும், பிரபல பாடகியுமான பவதாரிணி நேற்று ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். இவருடைய மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், பவதாரிணி மறைவுக்கு நடிகர் வடிவேலு கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து ஆடியோ வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளிவந்த ஆடியோவில், “மாரிசன் திரைப்படத்தின் இரவு ஷூட்டிங் முடிந்து வந்ததுமே, இசைஞானியின் தங்க மகள் பவதாரிணி மறைந்த செய்தியை கேட்டு, எங்கள் நெஞ்சமெல்லாம் நொறுங்கிவிட்டது.

அருமை அண்னன் தங்க மகள், செல்ல புள்ள, கள்ளம் கபடம் இல்லாத தெய்வ குழந்தை.  47 வயது அந்த பொண்ணு, எங்க குடும்பத்தில் என்ன செய்தன்று தெரியவில்லை. சாதராண குழந்தை இல்லங்க அது. தன்னுடைய குயில் குரலில் எத்தனையோ வெற்றிப் பாடல்களை பாடியிருக்கிறாள். அவரது மறைவுக்கு உலக தமிழர்கள் அனைவரும் நொறுங்கி இருப்பார்கள்” என கண்ணீர் ததும்ப தெரிவித்துள்ளார்.

மறைந்த பாடகி பவதாரிணி கடைசியாக பாடிய பாடல்! உருக்கமாக இரங்கல் தெரிவித்த சிம்பு!

கடந்த சில ஆண்டுகளாக இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,இலங்கையில் சமீபத்தில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று (ஜனவரி 25)-ஆம் தேதி இலங்கையில் காலமானார். இன்று அவருடைய உடல் இந்தியாவிற்கு கொண்டுவரப்படவுள்ளது.

Recent Posts

Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…

30 minutes ago

ஆபரேஷன் சிந்தூர் : 80 பயங்கரவாதிகள் உயிரிழப்பு! பழிதீர்த்த இந்திய ராணுவம்!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

55 minutes ago

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர்., 9 இடங்களில் அட்டாக்! பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…

3 hours ago

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

9 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

11 hours ago