#image_title
GOATfirstSingle : விஜய் நடித்துள்ள கோட் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த கோட் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஏப்ரல் 14 மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த கோட் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். கடைசியாக விஜய் மற்றும் யுவன் கூட்டணியில் புதிய கீதை படம் தான் வெளி வந்து இருந்தது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நீண்ட வருடங்களுக்கு பிறகு யுவன் மற்றும் விஜய் கூட்டணி இந்த கோட் படத்தின் மூலம் இணைந்துள்ள காரணத்தினாலே இந்த திரைப்படத்தின் பாடல்கள் மீது இருக்கும் எதிர்பார்ப்பும் மிகவும் அதிகமாக இருக்கிறது என்றே கூறலாம். இந்த சூழலில் தான் படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.
யுவன் சங்கர் ராஜாவின் மிரட்டலான இசையுடன் விஜய் ஸ்டார்ட் மியூசிக் என சொல்லும் அந்த பாடலுக்கான ப்ரோமோவும் வெளியாகி பாடலின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. இந்த பாடலை மதன் கார்க்கி எழுதி இருக்கிறார். பாடலை விஜய் தனது குரலில் பாடி இருப்பதாகவும் ப்ரோமோவின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக விஜய் தான் நடிக்கும் படங்களின் முதல் பாடலை பாடுவது வழக்கமான ஒன்றாக ஆகிவிட்டது. எனவே, இந்த கோட் படத்திலும் விஜய் பாடியுள்ள அந்த பாடல் கண்டிப்பாக பெரிய அளவில் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கோட் திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். படத்தில் விஜய்யுடன் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் அமீர், மாளவிகா சர்மா, மோகன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…