கண்ணாடி டம்ளரில் எலுமிச்சை போட்டு வைப்பது எதற்காக தெரியுமா?

Published by
K Palaniammal

Evil eye-கண்ணாடி டம்ளரில் எலுமிச்சையை போட்டு வைப்பதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று இப்பதிவில் காணலாம்.

ஒவ்வொரு நாளும் மனிதர்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்காக பல வித பரிகாரங்களையும் பூஜைகளையும் செய்து வருகின்றார்கள். அதில் இந்த எலுமிச்சையை டம்ளரில் போட்டு வைக்கும் முறையும் ஒன்று. இதை வீடு மற்றும் வியாபார இடத்தில் வைத்து பின்பற்றப்படுகிறது.

பலன்கள்:

பொதுவாக எலுமிச்சை பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. இது நம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.

ஆன்மீக ரீதியாக கூற வேண்டும் என்றால் எலுமிச்சைக்கு தன்னை சுற்றி இருக்கும் இடத்தில் உள்ள  எதிர்மறை ஆற்றலை நீக்கி நேர்மறை ஆற்றலை கொடுக்கும் பண்பை கொண்டுள்ளது.

நீருக்கும் ஒரு தன்மை உண்டு தண்ணீரானது தன்னைச் சுற்றி உள்ள ஆற்றலுக்கு தகுந்தாற்போல் மாறும் தன்மை உண்டு .கோவில்களில் தீர்த்தமாகவும் விளங்குகிறது, மற்றவர்களை சபிக்கவும் இந்த தண்ணீர் உபயோகப்படுத்தப்படுகிறது.

அதாவது ஒருவரை சபிக்க வேண்டும் என்றால் தண்ணீரை ஒரு சிலர் மேலே ஊற்றிக் கொள்வார்கள். அதனால்தான் தண்ணீரானது பரிசுத்தமாகவும், சபிக்க கூடியதாகவும் விளங்குகிறது. ஆனால் அதில் எலுமிச்சம் பழத்தை போடும் பொழுது அந்த இடத்தில் உள்ள தீய எண்ணங்களையும் கண் திருஷ்டிகளையும் போக்கி நேர்மறை எண்ணத்தை கொடுக்கிறது.

தீய எண்ணத்தோடு நம் வீட்டிற்குகோ  அல்லது வியாபார இடத்திற்கோ வரும்பொழுது அந்த எண்ணங்களை மாற்றக்கூடிய சக்தி கூட இந்த கண்ணாடி கிளாசில் போடப்பட்ட எலுமிச்சைக்கு உள்ளது.

வைக்கும் முறை:

இந்த கண்ணாடி டம்ளரில் எலுமிச்சையை போடும் முறையை வெள்ளிக்கிழமையில் செய்வது சிறப்பாக கருதப்படுகிறது. மேலும் இந்த தண்ணீரை ஒரு வாரம் வைத்து அடுத்து வரும் வெள்ளிக்கிழமையில் மாற்றிக் கொள்ளலாம்.

மேலும் அந்த பழைய தண்ணீரை கொட்டும் பொழுது மற்றவர்களின் கால்கள் படாத இடத்தில் கொட்டிவிட்டு  புதிய தண்ணீரில் எலுமிச்சையை போட்டு வைத்துக் கொள்ளலாம். இதனால் கண்திருஷ்டியும் கழியும் ,பொருளாதார முன்னேற்றம், வியாபார விருத்தியும் உண்டாகும்.

கண் திருஷ்டிக்கு என்று ஆன்மீகத்தில் பல வழிமுறைகளும் பூஜைகளும் இருந்தாலும் இந்த எளிமையான முறையான எலுமிச்சை மற்றும் தண்ணீர் பரிகாரம் அனைவராலும் செய்யக் கூடியது தான். இந்த பரிகாரத்தை செய்வதோடு நிறுத்தி விடாமல் அன்றன்றைக்கான உங்களுடைய முயற்சியையும் செய்து கொண்டு இருக்க வேண்டும்.இந்த எலுமிச்சை பரிகாரம் உறுதுணையாக மட்டுமே செயல்படும்.

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

52 minutes ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

57 minutes ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

1 hour ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

3 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

3 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

4 hours ago