மதுரை சித்திரை திருவிழா 2024.! திக் விஜயத்தின் சிறப்புகளை தெரிஞ்சுக்கோங்க .!

Published by
K Palaniammal

மதுரை சித்திரை திருவிழா – சித்திரை திருவிழாவின் 9 ம் நாளான, நாளை நடைபெறும் திக் விஜயத்தின் சிறப்புகளை இப்பதிவில் காணலாம்.

மதுரை சித்திரை திருவிழா கோலா கோலமாக  கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாமதுரையின் அரசியான மீனாட்சி ஒவ்வொரு நாளும் விதவிதமான பல்லக்கில்  பவனி வருவார்.

மதுரையின் பட்டத்தரசியாக முடி சூட்டிக்கொண்டவுடன் எட்டுத்திக்கும்சென்று  வென்று வர அம்மன் செல்வதே திக் விஜயம் ஆகும்.

திக் விஜயம்:

சித்திரை திருவிழாவின் ஒன்பதாம் நாளான திக் விஜயம், சித்திரை 7, ஏப்ரல் 20ஆம் தேதி நாளை நடைபெற உள்ளது. காலை ஏழு மணிக்கு அம்மன் நான்கு மாசி வீதிகளிலும் மரவர்ண சப்பரத்தில் எழுந்தருளுவார்.

பிறகு 9:30 மணிக்கு வீதி உலா நிறைவு பெறும். மேலும்  மாலை 6:00 மணி அளவில் மீண்டும் இந்திர விமானத்தில் மாசி வீதிகளில் வலம் வந்து 11:30 மணிக்கு கோவிலுக்குள் அம்மன் வந்து சேர்வார்.

திக் விஜயத்தின் சிறப்பு:

மாமதுரையின் பேரரசியான மீனாட்சி அம்மை ஆணுக்கு நிகராக  அனைத்துப் போர் கலைகளையும் கற்றுத் தெரிந்தவர். பட்டத்தரசி ஆனவுடன் இவர் ஒவ்வொரு  திக்குகளுக்கும் சென்று போர் தொடுத்து வெல்கிறார்.

பிறகு கைலாயத்தின் மீது போர் தொடுக்கிறார். அங்கு சிவபெருமானோ  மீனாட்சி யார் என அறிந்தவர் ,ஆதலால் போர் தொடுக்க உற்சாகத்துடன் அன்னையை எதிர்கொள்ள செல்கிறார்.

ஆனால் மீனாட்சி அம்மனோ சிவபெருமானை பார்த்தவுடன் நாணத்தில்  தலை குனிகிறார். தன் மணவாளனை கண்டுவிட்டதை புரிந்து கொள்கிறார். இதனைத் தொடர்ந்து தான் மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வரருக்கும் திருமணம் நடைபெற்றது. இதுவே திக் விஜயத்தின் சிறப்பாகும்.

Recent Posts

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

7 minutes ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

2 hours ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

2 hours ago

முதலாம் ஆண்டு நினைவு தினம்: ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை திறப்பு.!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…

3 hours ago

குரோஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்.!

ஐரோப்பா :  உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…

3 hours ago

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

3 hours ago