vashtu home
வாஸ்து என்பது ஒரு கட்டிடத்திற்கான உயிரோட்டமாகும். முந்தைய காலத்தில் வீடு கட்டுவதற்காக ஜாதகம் எழுதி அதற்கான ஆயுட்காலமும் எழுதப்பட்டது இது காலப்போக்கில் மாறி வாஸ்து மட்டுமே பார்க்கப்படுகிறது.
பஞ்சபூதங்களின் சரியான சேர்க்கையே வாஸ்துவாக அமைகிறது. இந்த பஞ்சபூதங்களும் ஒரு வீட்டில் அமைந்து விட்டால் அந்த வீட்டில் அனைத்துமே சரியாக இருக்கும். இதில் ஒன்று சரியில்லை என்றாலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் உதாரணமாக நீரினால் ஒரு பிரச்சனை என்றால் அந்த வீட்டில் பண வரவு பாதிக்கப்படும். நீரை நாம் அதிகமாக செலவு செய்தால் அந்த வீட்டில் மகாலட்சுமி தங்க மாட்டார் என்பது ஐதீகம்.
வாஸ்துவின் வரலாறு
வாஸ்து என்பது ஒரு பூதம் .சிவ பெருமானின் வியர்வைத் துளியில் இருந்து இந்த பூமிக்கு கிடைத்த பூதமாகும். யாரெல்லாம் கட்டிடம் கட்டுகிறார்களோ அவர்கள் இந்த வாஸ்து பூதத்திற்கு மரியாதை செலுத்தி ஹோமம் பூஜை செய்தால் அந்த கட்டிடத்தை நீண்ட நாட்கள் நன்றாக வைத்துக்கொள்ள சிவபெருமானால் படைக்கப்பட்டது தான் இந்த வாஸ்து பூதம்.
நூற்றுக்கு 100% சதவீதம் வாஸ்து உடன் கட்டப்படுவது கோவில்கள் மட்டும்தான். மற்றபடி வீடுகள் 100% வாஸ்து முறைப்படி கட்டப்படுவதில்லை. அதனால்தான் கோவிலுக்கு செல்லும்போது நல்ல எனர்ஜி நமக்கு கிடைக்கிறது.
ஒரு வீடு என்றால் நல்ல அதிர்வலைகள் நிறைந்து இருக்க வேண்டும். சமீப காலத்தில் நிறைய மக்கள் இதற்காக எனர்ஜி மீட்டர் போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள் இதில் எந்த பலனும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது ஒன்றும் பிளட் பிரஷர் இல்லை. சிலருக்கு இந்த பொருளை வைத்தால் வாஸ்து பிரச்சனை நீங்கும் என நம்பினால் அதை நீங்கள் நிச்சயம் செய்ய வேண்டும். நமக்கு நம்பிக்கை எதில் இருக்கிறதோ அதை செய்வதில் ஒன்றும் தவறில்லை. நாம் நம்பிக்கை வைத்த ஒரு விஷயத்தில் பிரச்சனைகள் வந்தாலும் நமக்கு அது பெரிதாக தெரியாது.
ஒரு சிலருக்கு இந்த வாஸ்து பொருட்களை வைக்கலாமா வைக்க கூடாதா என்று கேள்வி இருக்கும். ஒரு பொருள் நம்மை காப்பாற்றும் என நம்புகின்ற போது அந்தப் பொருளை உருவாக்கியது ஒரு மனிதன் ஆனால் அந்த மனிதநேய இயக்குவது கடவுள் தானே அந்த கடவுள் நினைத்தால் அனைத்துமே சரியாகிவிடும் என்ற எண்ணம் நமக்குள் வந்து விட்டாலே வாஸ்து பிரச்சனைகள் சரியாகிவிடும்.
வாஸ்து பிரச்சனையை சரி செய்யும் முறை
பஞ்சபூதங்களுக்கு தலைவனான சிவபெருமானை சரணாகதி அடைவதே சிறந்த வழியாகும். மேலும் பஞ்சபூத ஆலயங்களான காஞ்சிபுரம் சிதம்பரம், திரு ஆனைக்காவல், திருகாளஹஸ்தி திருவண்ணாமலை போன்ற கோவில்களுக்கு செய்து வழிபாடு செய்து வந்தால் வாஸ்து தோஷம் நிவர்த்தி ஆகும்.
வீட்டில் காஸ்மிக் எனர்ஜி அதிகரிக்க செய்ய வேண்டியவை
வீடே இல்லாமல் தங்குவதற்கு இடம் இல்லாமல் பல கோடி மக்கள் உலகம் முழுவதும் அல்லாடி கொண்டிருக்கும் சூழலில் கடவுள் நமக்கு இருப்பதற்கு வீடு கொடுத்துள்ளார் என எண்ணினால் வாஸ்து தோஷங்களை பற்றி கவலைப்பட மாட்டோம் இருப்பதை மகிழ்வாக ஏற்றுக் கொண்டு வாழ கற்றுக் கொள்வோம்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…