இடமாற்றம் பற்றிய இனிய தகவல் வந்து சேரும் நாள். எடுத்த முயற்சி வெற்றி தரும். பயணத்தால் பால்ய நண்பர் ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள். தொலைபேசி வழித் தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணை புரியும். மேலும் தகவலுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். பொருளாதார நிலையில் இருந்த தடை அகலும். நாட்டுப்பற்று மிக்க நண்பர் ஒருவரால் உங்கள் வீட்டுக் காரியம் விரைவாக நடைபெறும். உடன்பிறப்புகள் வழியில் ஒரு சுபகாரிய செய்தியொன்று வந்து சேரலாம். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
மகிழ்ச்சி கூடும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மேலும் தகவலுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
மகிழ்ச்சி கூடும் நாள். உறவினர்களின் ஒத்துழைப்பு உண்டு. தொழிலில் அனுபவமிக்க பங்குதாரர்கள் வந்திணைவர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு கிட்டும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் மேலும் தகவலுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
தெய்வ நம்பிக்கை கூடும் நாள். வங்கிச்சேமிப்பை உயர்த்தும் எண்ணம் உருவாகும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். புதிய பொருள் சேர்க்கை உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் வந்து சேரலாம். மேலும் தகவலுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. அதற்கான நிகழ்ச்சிகள் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. அன்று விக்னேசுவர பூஜை, புண்யாகவாசனம், தனபூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. தினந்தோறும் பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. கும்பாபிஷேகத்துக்காக கோவில் வளாகத்தில் உள்ள நின்ற சீர் நெடுமாறன் அரங்கம் முன்பு யாகசாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 84 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நெல்லை தாமிரபரணி ஆற்றில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டு அங்கு […]
சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று இரவில் அம்மன் தங்க கமல வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை மாத தேர்த்திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. 17-ந் தேதி தேரோட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 20-ந் தேதி தெப்ப உற்சவம் நடைபெற்றது. தேரோட்டம் முடிந்து 8-ம் நாளான நேற்று காலை 10 மணிக்கு அம்மன் […]
சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை தசமியை வாசவி ஜெயந்தியாக மக்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர் தை அமாவாசைக்கு அடுத்து வரும் இரண்டாவது நாள் சுக்ல துவிதியை அன்று அக்னி குண்டத்தில் இறங்கியதால் அன்றைய தினத்தை அக்னி பிரவேச தினமாக அரிய வைசியர்கள் கொண்டாடுகின்றனர்.வாசவி தேவியை வணங்கி வந்தால், சர்ப்ப தோஷங்கள், மாங்கல்ய தோஷங்கள் அகலும். ஒருமுறை கயிலாயத்தில்சிவபெருமானுக்கும்,பார்வதிக்கும் காவலாக நந்தியம் பெருமாள் நின்று கொண்டிருந்தார் அப்பொழுது அம்மை அப்பனை தினமும் தரிசிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் சமாதி மகரிஷி […]
சிங்கப்பூரில் 164 ஆன்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷக விழா வெகு விமர்சையாக நடந்தது. சிங்கப்பூரின் லீட்டில் இந்தியா பகுதியில் 164 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் உள்ளது இந்த கோயிலை 1978ல் தேசிய சின்னமாக சிங்கப்பூர் அரசு அறிவித்தது கோவிலை 29 கோடி ரூபாய் செலவில் நான்காவது முறையாக சீரமைக்கும் பணி 2016 ஆண்டு துவங்கியது. உள்ளூர் பக்தர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் தமிழகத்தை சேர்ந்த சிற்ப மற்றும் ஒவியக்கலைஞர்களும் ஈடுபட்டனர்.சீரமைப்பு பணிகள் […]
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அம்மனும், சுவாமியும் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார்கள். நேற்று சுந்தரேசுவரர் தங்க ரிஷப வாகனத்திலும், மீனாட்சி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் 4 மாசி வீதிகளில் வலம் வந்தனர். அப்போது திரளான பக்தர்கள் மத்தியில் கோவில் ஓதுவார்கள் சைவ சமய வரலாற்றை பாடினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி […]
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி திருக்கல்யாணத்தின் முதல் நாளான 26-ந்தேதி மாலை 5 மணிக்கு முருகப்பெருமான் அருள் ஆட்சி புரியும் அறுபடைவீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தில் இருந்து மதுரைக்கு பவளக்கனிவாய் பெருமாள் புறப்பட்டு செல்லுகிறார். அதேவேளை திருமணத்தில் பங்கேற்பதற்காக தெய்வானையுடன் முருகப்பெருமானும் மதுரைக்கு செல்லுகிறார். இதையொட்டி திருப்பரங்குன்றத்தில் இருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வரை உள்ள சுமார் 125-க்கும் […]
திருப்பதி திருமலையில் நன்கொடையாளர்களுக்கு வழங்கப்படும் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதியில் உள்ள திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு ஒரு லட்சத்திற்கு மேல் நன்கொடை அளிப்பவர்க்கு தேவஸ்தானம் ஆண்டிற்கு ஒருமுறை தரிசனம் வசதியை அளித்து வந்த நிலையில் தற்போது திருமலையில் கோடை விடுமுறை என்பதால் பக்தர்களின் வருகை அதிகமாகி வருகிறதால் தரிசனத்திற்கு நெடுநேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் கோடை விடுமுறை முடியும் வரை நன்கொடையாளர்களுக்கு வழங்கும் தரிசனத்தை ரத்து செய்துள்ளது தேவஸ்தானம் இதே போல் […]
கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.அறுபடை வீடுகளில் முருகனின் 4ஆம் படை வீடான சுவாமிமலையில் ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான சித்திரைப் பெருந்திருவிழா தொடக்க நிகழ்வில் விநாயகர், சண்டிகேஸ்வரர் சகிதம் சுப்ரமணியர் வள்ளி தெய்வானையுடன் உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் கொடிமரத்திற்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கஜ வாகனம் பொறிக்கப்பட்ட கொடி வேத மந்திரங்கள், மங்கல வாத்தியங்கள் […]
சேலம் மாவட்டம் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு, தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். குடமுழுக்கை முன்னிட்டு நேற்றிரவு தொடங்கி இன்று காலை வரை எட்டுகால பூஜை நடத்தப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் ரோகினி, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் […]
சென்னை எண்ணூர் கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள சூசையப்பர் ஆலயத்தில் 57-வது ஆண்டு ஆசீர்வாத பெருவிழா நடந்து வருகிறது. கடந்த 12-ந்தேதி கொடியேற்றுத்துடன் திருவிழா நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன. தினமும் மாலை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 18-ந்தேதி தேவ அழைத்தல் தினம் மேற்கொள்ளப்பட்டது. நேற்று மாலை இளையோர் தினத்தை இளைஞர் இயக்கத்தினர் கொண்டினர்.நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நற்கருணை தினம் கொண்டாடப்பட்டது. இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு தேர் திருவிழா நடைபெற உள்ளது. நாளை சிறப்பு திருப்பலிகள் நடைபெற உள்ளன. […]
சித்திரை திருவிழா நாகர்கோவில் கிருஷ்ணசாமி கோவிலில் தொடங்கியது இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வருகிற 29-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. இதையொட்டி நேற்று அதிகாலையில் கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் காலை 9.15 மணிக்கு திரளான பக்தர்களுக்கு மத்தியில் திருக்கொடியேற்றம் நடந்தது. அதன்பிறகு அன்னதானம் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு உணவு அருந்தினர். இரவில் பக்தி இன்னிசையை தொடர்ந்து புஷ்பக வாகனத்தில் சாமி எழுந்தருளினார். திருவிழாவின் […]
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் ஆயிரங்கால் மண்டபம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதில், கோவிலில் உள்ள வீர வசந்தராயர் மண்டபம் மற்றும் ஆயிரங்கால் மண்டப முகப்பு சேதமடைந்தது. புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது ஆயிரம்கால் மண்டபத்திற்குப் போகும் வழி சீரமைக்கப்பட்டுள்ளது. அதனால் 77 நாட்களுக்குப் பிறகு, ஆயிரங்கால் மண்டபம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
கருணைக் கொலை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள, சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானை ராஜேஸ்வரியின் உடல் நிலை குறித்து கால் நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மருத்துவர் ஜெய தங்கராஜ் தலைமையில் மருத்துவர்கள் ஆய்வு செய்து வருந்தனார் இந்த நிலையில் சேலம் சுகவஸ்வரர் திருக்கோவிலின் யானை ராஜேஸ்வரி இன்று இயற்கையாக உயிரிழந்தது உயிருக்கு போராடிய கோவில்யானை கருனைகொலைசெய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது.உயர்நீதிமன்றஉத்திரவை அடுத்து சிகிச்சை நிறுத்தப்பட்ட நிலையில் பரிதபமாக யானை உயிரிழந்தது மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
தஞ்சையில் காஞ்சிசங்கர மடத்திற்கு சொந்தமான கோவில் உண்டியலை மர்மநபர் ஒருவர் தூக்கிச் செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகியுள்ளது. தஞ்சை மேலவீதியில் பங்காரு காமாட்சியம்மன் கோவில் உள்ளது, காஞ்சி சங்கரமடத்திற்கு சொந்தமான இந்த கோவிலை இன்று காலையில் திறந்த போது உண்டியல் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆராய்ந்த போது, நள்ளிரவு 12.30 மணியளவில் லுங்கி சட்டை அணிந்த நபர் ஒருவர், கோவிலுக்குள் வந்து உண்டியலை தூக்கிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. மேலும் செய்திகளுக்கு […]