நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதற்காக கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டு கோவில் உள்பிரகாரம், வெளி பிரகாரம், ராஜகோபுரம், விமானங்கள் ஆகியவற்றில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு உள்ளன. கும்பாபிஷேக பூஜை நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு அனுக்ஞை மற்றும் விக்னேசுவர பூஜையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து புண்யாகவாசனம், தனபூஜை உள்ளிட்டவை நடக்கின்றன. 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) யாகசாலை பூஜை தொடங்குகிறது. இதையொட்டி நெல்லையப்பர் கோவிலின் வடக்கு புறத்தில் உள்ள நின்றசீர்நெடுமாறன் […]
தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் சித்திரை தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த 19-ந்தேதி மாலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், வாஸ்து பூஜையும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நேற்று மாலை தாயுமானசுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் சித்திரை தேர் திருவிழா தொடங்கியது. பின்னர் இரவு சுவாமி அம்பாள் கேடயத்தில் புறப்பாடு நடைபெற்றது. 2-ம் நாளான இன்று(சனிக்கிழமை)இரவு சுவாமி கற்பகத்தரு வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் புறப்பாடு நடைபெறுகிறது. தொடர்ந்து 22-ந் […]
தஞ்சை நீதிமன்றம் பழனி கோவில் உற்சவர் சிலை மோசடியில் கைது செய்யப்பட்ட தலைமை ஸ்தபதி முத்தையாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. உடல் நலக்குறைவு என நாடகாமாடியும் ஜாமீன் கிடைக்காத பின்னணி. முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பழம்பெருமையும் மூலிகை சக்தியும் கொண்ட நவபாசான உற்சவர் சிலை உள்ளது. இதற்கு தினமும் 6 கால பூஜை செய்யப்பட்டு வருகின்றது. அந்த சிலை சேதம் அடைந்து விட்டதாக கூறி கடந்த 2004 ஆம் ஆண்டு புதிதாக […]
மீனாட்சி அம்மன் கோவிலில் செல்போன் கொண்டு செல்ல செய்தியாளர்களுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டதுள்ளது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்குள் செய்தியாளர்கள் மட்டும் செல்போன் எடுத்து செல்ல அனுமதி ஒரு தொலைக்காட்சி 2 நபர் மட்டும் செல்போன் கொண்டு செல்ல அனுமதி சித்திரை திருவிழாவை நேரடி ஒளிபரப்பு செய்ய வசதியாக செல்போன் கொண்டு செல்ல அனுமதி கோரி தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற […]
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில், ஜியாகுடா என்ற இடத்தில், புகழ்பெற்ற ரங்கநாதர் கோவில் உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்தவர், சி.எஸ்.ரங்கராஜன், 60; தெலுங்கானா மாநில கோவில் பாதுகாப்பு கமிட்டித் தலைவர் மற்றும் ஆன்மிக பேச்சாளர். தெலுங்கு, தமிழ்மொழிகளில், பல கோவில்களில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்துபவர். இவர் தாழ்த்தப்பட்ட மக்களும் ஆன்மிக பணியில் ஈடுபட வேண்டும் என்ற கொள்கை உடையவர். தலித் பக்தரை தோளில் சுமந்து கருவறைக்குள் செல்ல திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியிருந்தார். இந்நிலையில் தலித் இளைஞர் ஆதித்யா […]
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நகர் முடப்புளிக்காட்டில் உள்ளது ஏந்தல் அருள்மிகு நீலகண்டப்பிள்ளையார் திருக்கோவில். இந்த கோவிலில் நடக்கும் சித்ரா பவுர்ணமி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த கோவில் திருவிழாவிற்கு பல்வேறு கிராமங்களில் இருந்து மக்கள் திரளாக வந்து கலந்து கொண்டு வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 20-ம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி மே மாதம் 1-ம் தேதி செவ்வாய்கிழமை முடிய 13 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கோவில் சித்ரா பவுர்ணமி திருவிழா […]
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தெப்பத்திருவிழா, 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான சித்திரை தெப்பத்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று காலை 6 மணிக்கு தம்பையா ஓதுவாரின் திருமறை பாராயணம் நடந்தது. தொடர்ந்து காலை 7.45 மணிக்கு கொடிப்பட்டத்தை மேளதாளத்துடன் ரதவீதிகள் வழியே கொண்டுசென்றனர். 8.25 மணியளவில் கொடியேற்றம் நடந்தது. தெற்குமண் மடம் ஆதிஷேசன் நம்பூதிரி கொடியேற்றி வைத்தார். பின்னர் […]
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். விழா நாட்களில் காலை, மாலை, இரவு ஆகிய மூன்று வேளைகளிலும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வருவது வழக்கம். இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாளை காலை 5.30 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் சங்கரலிங்க சுவாமி சன்னதி முன்பு […]
சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 7 மணியளவில் கொடி பவனி தொடங்கி ரதவீதிகள் வழியே வலம் வந்து சன்னதியை அடைந்தது. அதனைத்தொடர்ந்து 8 மணியளவில் கும்ப ஹோமம் மற்றும் நந்தி, அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 9.30 மணியளவில் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, நந்தி உருவம் வரையப்பட்ட வெண்கொடி ஏற்றப்பட்டது. அதன்பிறகு அலங்கார தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 10 மணியளவில் அனைத்து சுவாமிகளுக்கு காப்பு கட்டுதலும், […]
தேனி மாவட்டம் வீரபாண்டியில் புகழ்பெற்ற கவுமாரியம்மன் கோவிலின் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது. இக்கோவிலின் சித்திரைத் திருவிழா வரும் மே 8 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா மே 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு இன்று நடைபெற்ற கொடியேற்றத்திற்காக உப்பார்ப்பட்டி அருகே தோட்டத்தில் இருந்து புனித அகத்தி முக்கொம்புமரத்தை வெட்டி, கோவிலுக்கு கொண்டுவந்த முக்கொம்பை கன்னீஸ்வரமுடையார் கோவிலுக்குக் கொண்டு சென்று சிறப்பு பூஜை […]
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் நடைபெறும் பூச்சொரிதல் மற்றும் தேர்த்திருவிழாக்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சமயபுரம் மாரியம்மன், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எந்தவிதமான நோய்களும், தீவினைகளும் அணுகாமல் தடுத்து சகல சவுபாக்கியங்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காக அம்மன் மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருந்து பக்தர்களின் துயரை துடைப்பார் என்பது ஐதீகம். இந்த நாட்களில் […]
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா மிகவும் புகழ்பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கொடியேற்றத்தையொட்டி சன்னதியில் உள்ள கம்பத்தடி மண்டபம் அழகிய மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு பட்டர்கள் யாகம் வளர்த்து சிறப்பு பூஜை செய்தனர். சித்திரை திருவிழாவிற்காக காப்பு கட்டிய பட்டர்கள் காலை 10 மணியளவில் 66 அடி உயர கொடிக்கம்பத்தில் கொடிப் பட்டத்தை ஏற்றினார். பின்பு கொடிமரத்திற்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் […]
சாமியார் ஆசாராம் மீதான பாலியல் வழக்கில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வெளியாகிறது. தமது ஆசிரமத்தில் பெண்களை மயக்கி பாலியல் ரீதியாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு ஜோத்புர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வெளியாகும் நேரத்தில் சீடர்களால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் சிறையை விட்டு நீதிமன்றத்திற்கு ஆசாராம் அழைத்து வரப்பட மாட்டார் என்றும் சிறை வளாகத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் போனபோது அவர்களுக்கு சூரிய பகவான் ஒரு அட்சய பாத்திரத்தைக் கொடுத்தார் என்று மகாபாரதம் சொல்கிறது. அள்ள அள்ள உணவைக் கொடுக்கும் இந்தப் பாத்திரத்துக்கு அமுத சுரபி என்ற பெயரும் உண்டு. இந்தப் பாத்திரத்தை திரௌபதி ஒரு நாளுக்கு ஒரு முறைதான் பயன்படுத்த வேண்டும் என்பது விதி. முடிந்ததும் கழுவி, கவிழ்த்துவிடுவார். ஒருநாள் மதியம் கிருஷ்ண பரமாத்மா பசியால் வருகிறார். பாத்திரத்தைக் கழுவி, கவிழ்த்துவிட்ட திரௌபதிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மகாவிஷ்ணுவைப் பிரார்த்தனை […]
தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும்.முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை ஆகும். காக்கும் கடவுளான திருமாலால் ஆளப்படுவதாகும். மேலும் இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் முனிவரான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது, அவர் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறார். இந்து இதிகாசங்களின்படி, அட்சய திருதியை நாளில் திரேதா யுகம் தொடங்கியது. மேலும் பகீரதன் தவம் செய்து இந்தியாவின் மிகப் புனிதமான புண்ணிய நதியாக போற்றப்படும் கங்கை நதியை சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வரவழைத்தது இந்த நாளில்தான் […]
திருச்சியை அடுத்த பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரைத் தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. சித்திரை பெருந்திருவிழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் இன்று நடைபெற்ற தேரோட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். பால்குடம், காவடி, அக்னி சட்டி, குழந்தைகளுக்கான கரும்பு தொட்டில், முளைப்பாரி, கரகம், பறவைக் காவடி எடுத்தும் அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். தேரோட்டத்தின் போது வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக பக்தர்கள் மீது […]
உண்டியல் பணம் எண்ணும் பணியின் முதல் நாளில் பழனி முருகன் கோவில் காணிக்கை 2 கோடி ரூபாயை தாண்டியது. பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு பழனி கோவில் உண்டியல்கள் 21 நாட்களில் நிறைந்தன. இதை அடுத்து உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கப்பட்டு, கோவில் அலுவலர்கள், பள்ளி மாணவிகள் என ஏராளமானோர் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முதல் நாளில் இரண்டு கோடியே 7 இலட்சத்து 24 ஆயிரம் ரூபாய் காணிக்கை பணம் எண்ணப்பட்டது. ஒரு கிலோ தங்கத்தினாலான […]