கோவிலில் பிரார்த்தனையை இந்த இடத்தில் தான் சொல்ல வேண்டுமா? அட இது தெரியாம போச்சே….!

Hindu Prayers in Places of Temples

ஒரு கோவில் என்று எடுத்துக் கொண்டால் எல்லா இடத்திலேயும் வேண்டுதல் பண்ணலாம் என்று நினைப்பது தவறு. விழுந்து வணங்குவதற்கு என்று ஒரு இடமும் இருக்கு, பிரார்த்தனைகளை சொல்வதற்கு என்று ஓர் இடம் இருக்கு, நன்றி தெரிவிப்பதற்கு என்று ஓரிடம் இருக்கு இவ்வாறு அது என்னவென்று தெரிந்து கொண்டு வழிபாட்டை மேற்கொள்ளும்போதுதான் 100% வழிபாடு பலனுள்ளதாக  இருக்கும் அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

முதலில் ஒரு கோவிலுக்கு சென்றால் விநாயகர் சன்னதிக்கு சென்று நம் வேண்டுதலை கூறுவோம் பிறகு முருகப்பெருமான் சன்னதிக்குச் சென்று அங்கும் நம் வேண்டுதலை கூறுவோம் பிறகு அம்மன் சன்னதிக்கு சென்று அங்கும் நம் வேண்டுதலை கூறுவோம்  இப்படி விநாயகர் தொடங்கி பலிபீடம் வரை நம் வேண்டுதலை கூறிக் கொண்டே போவோம் இது அவரவர் மனப்பக்குவத்தை பொறுத்து அமையம் .

இறைவன் சன்னதி :

இறைவன் சன்னதி அல்லது மூலவர் சன்னதி இங்கு சென்று அன்றாடம் வாழ்வில் நமக்கு கிடைக்கும் ஒவ்வொன்றும் இந்த தெய்வீக அருளால் கிடைத்தது தான் அதற்காக நன்றி கூறலாம் இரவில் தூங்கி காலையில் கண் விழிக்கின்றோம் அது எந்த நம்பிக்கையில் நாம் தூங்க செல்கிறோம். ஒவ்வொரு முறையும் இறைவன் நமக்கு அரணாக இருந்து நம்மை காப்பாற்றுவதற்காக நன்றி செலுத்த வேண்டும் கண்களை மூடிக்கொண்டு இறைவனை தரிசனம் செய்யக்கூடாது. இறைவனை கண்ணார பார்த்து நெஞ்சார வாழ்த்துங்கள் இறைவன் சன்னதியில் உள்ள அலங்காரத்தை தரிசித்து அவர் முன் நிற்கும் அந்த நொடி, எவ்வளவு தான் வாய் வார்த்தையில் நான் விளக்கினாலும் அந்த தெய்வீக ஆற்றலை உணர்வு பூர்வமாகத்தான்  அனுபவிக்க முடியும் .அந்த உணர்வு தான் பக்தி. பக்தி என்பது ஒவ்வொருவரும் உணர்வு பூர்வமாக மட்டும்தான் தெரிந்து கொள்ள முடியும்.

பிரார்த்தனை சொல்லும் இடம் :

ஒரு கோவிலின் பிரதானம் கொடிமரம். கொடி மரத்திற்கும் மனிதனின் முதுகுத்தண்டிற்கும் நிறைய சம்பந்தம் உண்டு. ஒரு மனிதன் நிமிர்ந்து நிற்பதற்கு காரணம் முதுகுத்தண்டு. யோக சாஸ்திரத்தில் மேலே ஏறக்கூடிய குண்டலி யோக காற்றானது வளைந்து வளைந்து மேலே செல்லும். அது போல் கொடி மரத்தில் கொடி ஏற்றும் போதும் கொடியை வளைத்து வளைத்து தான் ஏற்றுவார்கள். இதுதான் கோவிலின் கொடி மரத்திற்கும் மனிதனின் முதுகுத்தண்டிற்கும் உள்ள ஒற்றுமையாகும். இந்த கொடிமரம் முன்புதான் நாம் பிராத்தனையை தெரிவிக்க வேண்டும் இங்குதான் விழுந்து வழிபட வேண்டும்

பலிபீடம் :

பலிபீடம் என்பது ஏதேனும்  உயிரை பலி விடுவது இல்லை. நம்மில் இருக்கும் கெட்ட குணங்களை அந்த இடத்தில் பலியிட்டு விட்டு கொடி மரத்தில் பிரார்த்தனை செய்ய வேண்டும் சன்னதியில் நாம் பார்த்த அந்த இறைவனை கண் முன் நிறுத்தி கண்களை மூடி தான் கொடிமரம் முன்பு பிரார்த்தனை செய்ய வேண்டும்.

கொடிமரம் இல்லாத கோவில்களில் பலிபீடம் இருக்கும் அங்கு சின்னதாக இறைவனின் வாகனமும் இருக்கும் அந்த இடத்தில் பிரார்த்தனையை தெரிவிக்கலாம்.கொடிமரம் உள்ள கோவில்களில் கொடிமரத்தில் இல்லாத எனவே  இந்த முறைகளை மேற்கொண்டு நாம்  பிரார்த்தனைகளை செய்யும் போது நிச்சயம் 100% நமக்கு பலனும் இறைவனின் ஆசியும் கிடைக்கும்  .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 05122024
Maharashtra cm
Somanath
colours (1) (1)
Tughlaq AliKhan
rinku singh kkr Sunil Narine