ஆன்மீகம்

இன்று தன்வந்திரி தீபாவளி கொண்டாட்டம்… உருவான வரலாறும்.. வழிபாட்டு முறைகளும்….

Published by
மணிகண்டன்

தீபாவளி பண்டிகையானது தமிழகத்தில் ஒருநாள் பண்டிகையாக கொண்டாடப்பட்டாலும், வடமாநிலங்களில் இன்று முதல் புதன் கிழமை வரையில் 5 நாள் தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது.

தீபாவளி பண்டிகையின் முதல் நாளான இன்று (வெள்ளி  – நவம்பர் 10, 2023 ) தந்தேராஸ் எனப்படும் தன்வந்திரி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளியை ஆயுர்வேத தீபாவளி என்றும் மக்கள் அழைக்கின்றனர்.

வடமாநிலங்களில் கொண்டாடப்படும் 5 நாள் தீபாவளி கொண்டாட்டம்.!  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதம்…

தீபாவளி தினங்கள் :

அதே போல, நாளை சனிக்கிழமை  (நவம்பர் 11, 2023) ஜோதி தீபாவளி என்றும்,  அடுத்த நாள் ஞாயிறு ( நவம்பர் 12, 2023) தீபாவளி என்றும்,  செவ்வாய் ( நவம்பர் 14, 2023) – கோவர்தன் தீபாவளி என்றும், புதன் (நவம்பர் 15, 2023)- சகோதர தீபாவளி என்றும் கொண்டாடப்படுகிறது.

தனத்ரயோதசி தீபாவளி :

தனத்ரயோதசி தீபாவளி நாளில் திருமால் அவதாரமான தன்வந்திரி மற்றும் லட்சுமி தேவிக்கு பூஜை செய்யப்படுகிறது. மேலும் இந்த நாளில் தங்கம், வெள்ளி, சொத்துக்கள், வாகனங்கள் போன்றவற்றை வாங்குவதற்கு ஏற்ற நாளாக கருதப்படுகிறது. இதற்கு ஏற்ற நேரம் காலை 6.20 முதல் இரவு 8.19 வரை ஆகும்.

உருவான வரலாறு :

பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி கடைந்த போது , பாற்கடலில் அமிர்த கலசத்தோடு தோன்றிய திருமால் அவதாரம் தான் தன்வந்திரி. மருத்துவ கடவுளாக போற்றப்படும் தன்வந்திரியை ஆராதிக்கும் வகையில் இன்று கொண்டாடப்படும் பண்டிகை தான் தன்வந்திரி தீபாவளி.

இன்று தன்வந்திரி பகவானை நினைத்து பூஜை செய்து வழிபட்டால் , தீராத நோய்கள் தீரும் என்பது ஐதீகம். இன்றைய நாளில் தன்வந்திரி பகவானுக்கு மருத்துவர் உடை அணிவித்து கூட பூஜைகள் நடைபெறும் .

மருந்தில் தன்வந்திரி :

தீபாவளி தினத்தில் எப்படி எண்ணெயில் லட்சுமி, சீயக்காயில் சரஸ்வதி, சந்தனத்தில் பூமாதேவி, குங்குமத்தில் கவுரி, மலர்களில் மோகினி, தண்ணீரில் கங்கை, இனிப்பு பலகாரத்தில் அமிர்தம், புத்தாடையில் மகாவிஷ்ணு ஆகியோர் உறைவதாகச் சொல்கிறோமோ, அதுபோல் தீபாவளி மருந்தில் தன்வந்திரி பகவான் இருக்கிறார் என்பதும் ஐதீகம்.

Published by
மணிகண்டன்

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

1 hour ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

2 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

2 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

3 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

4 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

4 hours ago