ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!
ஜம்மு காஷ்மீர் மீது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதையடுத்து, எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டு வருகிறது.

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான சத்வாரி கண்டோன்மென்ட்டில் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. சர்வதேச எல்லைக்கு அருகில் பல இடங்களில் குறிவைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைதொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் விமான நிலையத்தைச் சுற்றி அவசரகால சைரன்கள் ஒலிக்க தொடங்கியது. தாக்குதல்களுக்குப் பிறகு அந்தப் பகுதியில் முழுமையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது, மொபைல் சேவைகளும் செயல்படவில்லை.
ஆனால், இந்தியாவை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களை, இந்தியாவின் எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக இடைமறித்து அழித்து பதிலடி கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டள்ளது. பதான்கோட் விமான தளத்தில் தாக்குதல் நடத்த 8 டிரோன்கள் பறந்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Indian media says Pakistan has launched drones in Jammu and Pathankot airbase but #Pakistan military resources deny..#IndiaPakistanWar #IndianArmy #OperationSindhoor pic.twitter.com/yWe03UZM9k
— Abdul R@him (@AbdulRahim9890) May 8, 2025
ஆனால், இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அந்த 8 ஏவுகணைகளையும் வெற்றிகரமாக இடைமறித்து சுட்டு வீழ்த்தியுள்ளன. இதனால் சேதம் மற்றும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது. மேலும், கட்ரா, வைஷ்ணவி தேவி கோயிலை குறி வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இவை அனைத்தும் முறியடிக்கப்பட்டதாகவும் ராணுவம் அறிவித்துள்ளது. ஜம்மு முழுவதும் மின்சாரத்தை நிறுத்தி வைத்துள்ளதுடன், மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அரசு எச்சரித்துள்ளது.