”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

இந்தியாவின் 15 இடங்களில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சித்தது; அனைத்தும் இந்திய படைகளால் முறியடிக்கப்பட்டன என்று விங் கமாண்டர் வியோமிகா சிங் டெல்லியில் பேசியிருக்கிறார்.

Sophia Qureshi - Vyomika Singh

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண் அதிகாரிகளான கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங், மே 7/8 இடைப்பட்ட இரவில் பாகிஸ்தானின் தாக்குதலை, இந்திய பாதுகாப்பு அமைப்பால் எவ்வாறு முறியடிக்கப்பட்டன என்பது குறித்து இன்று பத்திரிகைகள் முன் உரையாற்றினர்.

இது தொடர்பாக பேசிய விங் கமாண்டர் வியோமிகா சிங், ”’ எல்லையில் பாகிஸ்தானின் தொடர்ச்சியான போர்நிறுத்த மீறல்கள் மற்றும் கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஓசி) அதிகரித்த துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் தாக்குதல்கள் குறித்து விளக்கினார்.
பாகிஸ்தானின் ஆத்திரமூட்டல்களுக்கு இந்திய இராணுவம் பதிலடி கொடுத்து வருவதாகவும், இந்திய தரப்பில் பதினாறு உயிர்கள் பலியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா, பாரமுல்லா, உரி, பூஞ்ச், மெந்தர் மற்றும் ரஜோரி பகுதிகளில் பாகிஸ்தான் தனது துப்பாக்கிச் சூட்டின் தீவிரத்தை அதிகரித்து, மோட்டார் குண்டுகள் மற்றும் கனரக பீரங்கிகளைப் பயன்படுத்துகிறது. பாகிஸ்தானில் இருந்து மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதலை நிறுத்த இந்தியா பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது” என்றார்.

இதையடுத்து  பேசிய கர்னல் சோபியா குரேஷி, ”மே 07-08 இரவு நேரத்தில் சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவ நிலைகள் குறிவைக்கப்படவில்லை. வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் பல இராணுவ இலக்குகளை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்க முயன்றது.

இதனை இந்திய படைகள் தடுத்து நிறுத்தின. இன்று காலை, இந்திய ராணுவம், பாகிஸ்தானின் பல இடங்களில் வான் பாதுகாப்பு ரேடார்கள் மற்றும் அமைப்புகளைக் குறிவைத்தன. லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்