சிபிஎஸ்இ +2 மாணவர்களுக்கான மதிப்பெண்களை மதிப்பீடு செய்ய 12 பேர் கொண்ட குழுவை சிபிஎஸ்இ நிர்வாகம் அமைத்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்து இருந்தார். ஆனால், 12-ம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்விக்கு செல்வதற்கு எவ்வாறு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால்,பெற்றோர்களும் மாணவர்களும் குழப்பத்தில் உள்ளனர்.இந்த நிலையில்,உச்சநீதிமன்ற நீதிபதிகள்,மத்திய அரசு பொதுத்தேர்வை […]
ப்ளஸ் 2 தேர்வு குறித்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகளிடம் நாளை நன்பகல் 12 மணிக்கு காணொளிமூலம் கருத்துக்கேட்பு நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிகாரிகளுடனான சந்திப்பிற்கு பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிளஸ் டூ தேர்வு விவகாரத்தில் முதன்மை கல்வி அலுவலர்கள் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளனர். பிளஸ் டூ தேர்வு குறித்து மருத்துவ நிபுணர்கள், உளவியல் நிபுணர்களுடன் ஆலோசனை பெற உள்ளது. ப்ளஸ் […]
தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் அரிசி,பருப்பு உள்ளிட்ட உலர் பொருட்களுடன் 10 முட்டைகளை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பரவலானது அதிகரித்ததை தொடர்ந்து,கொரோனா பரவலை கட்டுபடுத்த தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக,மாணவர்கள் வீட்டிலிருந்து ஆன்லைன் மூலம் பாடம் பயின்று வருகின்றனர்.இதனால்,அரசு பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் மூலம் பயனடைந்து வந்த 34 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். […]
சென்னை தலைமை செயலக கூட்டரங்கில் +2 பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் 12 வகுப்பு தேர்வு மதிப்பெண்களை வைத்து தான் மாணவர்களின் எதிர்கால நிர்ணயிக்கப்படும் என்பதால் அரசு தேர்வை ரத்து செய்யுமா..? அல்லது மீண்டும் ஒத்திவைக்கப்படுமா..? என்ற கேள்வி எழுந்த நிலையில், கல்வியாளர்கள், பெற்றோர்கள் ஆகியோரிடம் கருத்துக்கேட்பு நடத்த அரசு திட்டமிட்டது. அதன்படி, […]
கொரோனா பாதிக்காத வகையில் மூலிகைகளுடன் கூடிய புதிய வகையிலான முகக்கவசத்தை தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் கண்டுபித்து,மக்கள் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமடைந்துள்ள நிலையில்,அதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட அரசு சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.அந்த வகையில்,வெளியில் சென்றால் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில்,தனியார் கல்லூரியில்,பொறியியல் ரசாயனம் பிரிவில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும்,ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டையைச் சேர்ந்த சஜித் என்ற மாணவர்,அதிமதுரம் உள்ளிட்ட […]
சிபிஎஸ்இ வாரியத்தில் படிக்கக்கூடிய பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் எப்படி வழங்க வேண்டும் என முடிவு செய்து வருவதாகவும் மாணவர்கள் பீதியடைய வேண்டாம் எனவும் சிபிஎஸ்இ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்து இருந்தார். ஆனால், 12-ம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்விக்கு செல்வதற்கு எவ்வாறு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால், பெற்றோர்களும் […]
சென்னையை அடுத்த புதுப்பாக்கத்தில் செயல்படும் சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது முன்னாள் மாணவி ஒருவர் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். சென்னையில் PSBB மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் எழுந்தையடுத்து,இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.அதில்,PSBB பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து,தமிழ்நாடு பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி என்ற பெயரில் விளையாட்டு பயிற்சி மையம் நடத்தி வரும் தடகள பயிற்சியாளர் நாகராஜன் […]
ஸ்பெயினில் ஆண் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சகிப்புத்தன்மையை வளர்க்க வகுப்பிற்கு பாவாடை அணிந்து பாடம் எடுப்பு… ஸ்பெயினில் ஆடைகளுக்கு பாலினம் இல்லை என்பதை மாணவர்களுக்கு உணர்த்துவதற்காக ஆண் ஆசிரியர்கள் இணைந்து பள்ளிக்கு பெண்கள் உடுத்தும் பாவாடையை அணிந்து பாடம் எடுக்கும் காட்சி தற்போது சமூக வளை தளத்தில் வைரலாகியுள்ளது. ஏனெனில் மைக்கேல் கோமஸ் என்ற மாணவர் பாவாடை அணிந்ததற்காக பில்பாவோவில் உள்ள ஒரு பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து, 2020 அக்டோபர் 27 அன்று முதல் ஆடைகளுக்கு பாலின பாகுபாடு […]
சென்னை தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது மேலும் 7 மாணவிகள் வாட்ஸ்-அப் மூலமாக புகார் அளித்துள்ளனர். தமிழ்நாடு பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி என்ற பெயரில் விளையாட்டு பயிற்சி மையம் நடத்தி வரும் தடகள பயிற்சியாளர் நாகராஜன், விளையாட்டு வீராங்கனைகளிடம் பயிற்சியின் போது பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், ஆபாசமாக பேசி வந்ததாகவும் சமூகவலைதளத்தில் புகார்கள் வந்தன. மேலும்,கடந்த பல ஆண்டுகளாக தன்னை பாலியல் தொந்தரவு செய்ததுடன், தனது குடும்பத்திற்கும் கொலை மிரட்டல் விடுத்தார் என்று 19 வயது இளம்பெண் […]
தேசிய நல்லாசிரியர் விருது பெற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆசிரியராக இருந்து நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் தேதியானது ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமல்லாமல்,நாட்டில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு அந்நாளில் மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில்,மத்திய அரசு வழங்கும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு இன்று […]
இந்தியாவில்,மதிய உணவு திட்டத்தின் மூலமாக 11.8 கோடி மாணவர்களுக்கு,அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது தீவிரமடைந்த நிலையில்,பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதன்காரணமாக,பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தினால் பயனடையும் கோடிக்கணக்கான மாணவர்கள் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில்,மாணவர்களின் கவலையை போக்கும் வகையில்,தற்போது மத்திய அரசு ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது.அதாவது,நாடு முழுவதும் உள்ள 11.8 கோடி மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடி பணப் பறிமாற்ற […]
பழைய முறைபடியே பொறியியல் தேர்வுகள் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் மாணவர்களுக்கு கொரோனா தொற்றுக்கு முந்தைய காலங்களில் நடத்தப்பட்டது போலவே நேரடி எழுத்துத் தேர்வு நடத்தப்படும். அதன்படி,நடப்பு செமஸ்டருக்கான வினாத்தாள் வடிவமைப்பு பழைய எழுத்துத் தேர்வு அடிப்படையிலேயே இருக்கும் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து,தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியலை வருகின்ற ஜூன் 7 ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கல்லுரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும்,மேலும்,ஜூன் 12ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்த […]
ஹரியானவில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு. கடந்த சில மாதங்களாக ஹரியானவில் கொரோனா பெருந்தொற்றானது நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வந்தது, உயிர்பலி எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே இருந்தது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக ஹரியானவில் பள்ளிக் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதனையடுத்து ஹரியான பள்ளிக் கல்வித்துறை இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஹரியானாவில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் […]
வருகின்ற கல்வியாண்டு முதல் பொறியியல் (BE) பாடங்களை தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் படிக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. பொதுவாக கல்லூரிகளில் பொறியியல் (BE) பாடங்கள் அனைத்தும் ஆங்கில மொழியில் மட்டுமே நடத்தப்படுகின்றன.இதனால்,பள்ளிகளில் தாய் மொழியில் கல்வி பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே பொறியியல் படிக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாகவே,கிராமப்புற மாணவர்கள் பொறியியல் (BE) படிப்பில் சேர ஆர்வம் காட்டுவதில்லை.இந்நிலையில்,அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்(AICTE),ஒரு முக்கிய அறிவிப்பை […]
சிபிஎஸ்இ நிர்வாகம் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தொடர்பான கேள்விகளை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்ததை கருத்தில்கொண்டு,சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.இதனால்,மாணவர்களுக்கு பள்ளிகளால் நடத்தப்படும் உள் மதிப்பீட்டின் அடிப்படையில் நடப்பு ஆண்டிற்கான மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மதிப்பெண்களை அட்டவணைப்படுத்துவதற்கான கொள்கை குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ளது. முன்னதாக அட்டவணைப்படுத்தல் செயல்முறையை நிறைவு செய்வதற்கான […]
AICTE ஆல் அங்கீகரிக்கப்பட்ட பல புதிய பிஜி படிப்புகள் தொடக்கம்.இந்திய பொறியியல் பணியாளர்கள் கல்லூரி அறிவிப்பு. இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ் இந்தியா இன் ஒரு அங்கமான இன்ஜினியரிங் ஸ்டாஃப் காலேஜ் ஆப் இந்தியா, ஏ.ஐ.சி.டி.இ அங்கீகரித்த பல புதிய பி.ஜி படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் சிவில், பவர், டெலிகாம், போக்குவரத்து, நிதி, எச்.ஆர்.எம், மார்க்கெட்டிங், பிசினஸ் அனலிட்டிக்ஸ் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற ஏ.ஐ.சி.டி.இ ஆல் அங்கீகரிக்கப்பட்ட 2 ஆண்டு முழுநேர பிஜிடிஎம் படிப்புகளை தொடங்கியுள்ளது. அதில்vபிஜிடிஎம் உள்கட்டமைப்பு, […]
டெல்லி பல்கலைக்கழகம் இறுதி ஆண்டு, செமஸ்டர் தேர்வுகளை ஜூன் 7 க்கு ஒத்திவைப்பு. டெல்லியில் கொரோனா தொற்று கோரத்தாண்டம் ஆடிய நிலையில், மிகுந்த பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் அனைத்து விதமான கல்வி சார்ந்த அமைப்புகள் தொடர்ந்து நடைபெற டெல்லி அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். பலர் வேலையிழந்து தவித்து வருகின்றனர். அரசு தேர்வெழுதும் மாணவர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் சோகத்தில் உள்ளனர். இதனையடுத்து, நேற்று டில்லி பல்கலைக்கழகம் இறுதி செமஸ்டர் / […]
வகுப்புகள் தொடங்கினாலும் அமெரிக்காவிற்குள் வர அனுமதி இல்லை. ஐதராபாத்தில் உள்ள யு.எஸ். துணைத்தூதரக அலுவலகம் செவ்வாயன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதன்படி கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக மாணவர் விசா உள்ள எவரும் தங்கள் வகுப்புகள் ஆகஸ்ட் அல்லது அதற்குப் பிறகு தொடங்கினால் அமெரிக்காவில் நுழைய முடியும். மேலும், குறிப்பிட்ட தேதிக்கு முன்பே வகுப்புகள் தொடங்கும் என்றால் மாணவர்களுக்கும், எஃப்-1 விசா வைத்திருப்பவர்களுக்கும் தூதரகத்தால் விதிவிலக்குகளை அங்கீகரிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளது. இதனால் மாணவர்கள் ஆகஸ்ட் 1 […]
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் இரண்டாம் நிலை மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிகளுக்கான நேர்காணல் தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் இரண்டாம் நிலை மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிகளுக்கான நேர்காணலானது வருகின்ற ஜூன் மாதம் 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து,டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் கூறுகையில்,”தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தால் 2013 முதல் 2018 […]
ஒடிசா மருத்துவமனையில் சி.ஏ தேர்வுக்கு தயாராகும் கொரோனா பாதித்த மாணவன். இந்தியாவில் கொரோனா தொற்று 2-வது அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏறப்படுத்தியுள்ளது, இதன்விளைவாக இந்தியா முழுவதும் தொற்று எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது, இப்பபடிப்பட்ட அழுத்தமான சூழ்நிலையில் அரசு தேர்வு எழுதும் மாணவர்கள் தொடர்ந்து தேர்விற்காக படித்து வருகின்றனர். ஒடிசாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள மாணவன் அச்சூழலிலும் சிஏ பட்டய கணக்காளர் தேர்விற்கு தொடர்ந்து படிக்கும் ஒரு புகைப்படம் சமூக […]