சென்னை : ஃபெஞ்சல் புயல் இன்று சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கவுள்ளது. இதனால், வட மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றும், அதிகனமழையும் பெய்யும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதன்படி, ‘ஃபெஞ்சல்’ புயல் எதிரொலியாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி.நகர், அடையாறு, சாந்தோம், மயிலாப்பூர், திருவான்மியூர், கோடம்பாக்கம், வடபழனி, தி.நகர், மந்தவெளி, கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. […]
டெல்லி : பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை முதலிடம் பிடித்துள்ளன. நாடு முழுவதும் செயல்படும் பல்கலைக்கழகங்கள், மருத்துவ கல்லூரிகள், கல்லூரிகள் என பலவேறு கல்வி அமைப்புகளின் செயல்பாடுகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் மத்திய கல்வி அமைச்சகம் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. கடந்த 2023-2024 கல்வியாண்டில் கல்லூரிகளின் செயல்பாடுகளை கொண்டு தற்போது மத்திய அமைச்சகம் தரவரிசை பட்டியலை வெளியிடுள்ளது. இந்த தரவரிசையில் […]
சென்னை : தமிழகத்தில் இயங்கும் பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கடுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. மொத்தம் 450க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இணைப்பில் உள்ளது. இந்த இணைப்பை பெறுவது தொடர்பாக பல்வேறு கல்லூரிகள் சட்டவிரோதமாக பேராசியர்கள் கணக்கு காட்டி வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக தன்னார்வ அமைப்பான அறப்போர் இயக்கம் முன்னதாக நடத்திய ஆய்வறிக்கையில் தமிழகத்தில் உள்ள 224 தனியார் சுயநிதி கல்லூரிகளில் சுமார் 350க்க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், வெவ்வேறு காலகட்ட போட்டோக்கள், […]
Anna University : அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த உதவி பேராசிரியர் பணிக்கு 88 காலியிடங்கள் உள்ளன . இந்த உதவி பேராசிரியர் பணிக்கு நீங்கள் ஆன்லைனிலும் மற்றும் ஆஃப்லைனிலும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை : ஆஃப்லைனில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க உள்ளோர், தங்களது விண்ணப்பங்களில் விண்ணப்பப் படிவத்துடன் தேவையான அனைத்து ஆவணங்களின் நகலையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லனில் விண்ணப்பிப்போர் எல்லா ஆவணங்களையும் டிஜிட்டல் முறையில் எடுத்து வைத்து […]
மிக்ஜாம் புயல் காரணமாக நாளை முதல் வரும் சனிக்கிழமை (டிச.09) வரை நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் தீவிர புயலாக வலுவடைந்து, சென்னைக்கு கிழக்கே 90 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. மிக்ஜாம் புயல் எதிரொலியால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்து வருகிறது. 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் புயல், மேலும் வலுப்பெற்று வடக்கு திசையில், தெற்கு ஆந்திரா பகுதிக்கு நகரக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. புயல் காரணமாக […]
Anna University: வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் 24 மணி நேரத்தில் புயல் (மிக்ஜாம் Michaung) உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்திற்கும் இடையே டிசம்பர் 5-ம் தேதி கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் (Michaung) புயல் கரையை கடக்கும்போது, தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும் என்றும் நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதி கனமழை […]
அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த இறுதி செமஸ்டர் பொறியியல் தேர்வுகள் ஒத்திவைப்பு. மாண்டஸ் புயல் எதிரொலியால் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், நேற்று மற்றும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த இறுதி செமஸ்டர் பொறியியல் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணாபல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
பதக்கம் வென்ற 283 பேரில் 117 பேர் ஆண்கள், 166 பேர் பெண்கள் இருந்தனர். இதுதான் திராவிட மாடல். – அமைச்சர் பொன்முடி. சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் உறுப்பு கல்லூரிகளின் 17வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு மாணவர் மாணவிகளுக்கு பதக்கங்களை வழங்கினார். அதன் பிறகு மேடையில் பேசிய அமைச்சர், ‘ அந்த ஒரு காலத்தில் பெண்கள் உயர் கல்வி பயிலாத காலமாக […]
தமிழக பொறியியல் கல்லூரிகளின் தலைமை கல்லூரியாக செயல்படும் சென்னை அண்ணா பல்கலைகழகமானது, கடந்த 2016ஆம் ஆண்டு மாணவர்களின் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்குவது, வெற்று சான்றிதழ் அச்சடிப்பது தொடர்பாக கொடுக்கப்பட்ட காண்டிராக்ட் விவகாரத்தில் சுமார் 77 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக தணிக்கை குழு அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு, அண்ணா பல்கலைகழக கட்டுப்பாட்டின் கீழ் பயிலும் மாணவர்களின் சான்றிதழ்கள், தரவரிசை சான்றிதழ்கள் ஆகியவற்றை டிஜிட்டல் மயமாக்குவதற்கு 2தனியார் நிறுவனங்களுடன் அண்ணா பல்கலை கழகம் 11 […]
ஆயுதபூஜையை முன்னிட்டு பொறியியல் கல்லூரிகளுக்கு இன்று முதல் 5-ம் தேதி வரை விடுமுறை அறிவித்தது அண்ணா பல்கலைக்கழகம். சரஸ்வதி பூஜை, விஜயதசமியையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு இன்று முதல் 5-ம் தேதி வரை 5 நாட்களுக்கு தொடர் விடுமுறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அக்.3-ம் தேதிக்கு பதில் 8-ம் தேதி வேலை நாளாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
வாக்குப்பதிவு நாளில் நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகளை தள்ளிவைப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ஆம் தேதி நடைபெறும் எனவும்வேட்பு மனுத்தாக்கல் இன்று முதல் பிப்ரவரி 04-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் […]
ஆன்லைனில் நடைபெறும் செமஸ்டர் தேர்வு பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கி மார்ச் முதல் வாரம் நிறைவடைகிறது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. B.E, B.Tech, மற்றும் B.Arch மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி 1 முதல் மார்ச் முதல் வாரம் வரை காலை, மாலை என இருவேளைகளிலும் தேர்வுகள் நடைபெறும். பிப்ரவரி 1 முதல் தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், பாடவாரியாக அட்டவணையை வெளியிட்டுள்ளது. இறுதியாண்டு மாணவர்கள் தவிர்த்து, மற்ற […]
2021-22ம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம். UG & PG பொறியியல் படிப்புகளில் தொடக்கம் முதல் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. பிரிவு வாரியாக முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் & சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. வழக்கம் போல் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களே அதிகளவில் தரவரிசையில் இடம்பிடித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
எம்.இ, எம்.டெக் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு 18% ஜிஎஸ்டி வரி கட்டாயம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. முதுகலை பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு கட்டணத்திற்கு 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் M.E., M.Tech., M.Plan., M.Arch., படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வில் பங்கேற்கும் பொதுப்பிரிவினருக்கு 18% GST வரியாக ரூ.54-ம், இதர பட்டியலின மாணவர்களுக்கு ரூ.27-ம் வசூலிக்கப்பட உள்ளது. M.E, M.Tech, M.Plan, M.Arch படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு வரும் […]
பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஜனவரி 21 முதல் மார்ச் 2 வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறும் என அறிவிப்பு. ஜனவரி 21-ஆம் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வை அறிவித்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம். நவம்பர் – டிசம்பர் மாதம் நடைபெற இருந்த தேர்வுகள் ஜனவரி முதல் மார்ச் வரை நடைபெறும் என அறிவித்துள்ளது. அதன்படி, M.E., M.Tech., M.Arch., மாணவர்களுக்கும் ஜனவரி 21 முதல் பிப்ரவரி இறுதி வரை தேர்வு நடைபெற […]
ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு. ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என மாணவரும், பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆன்லைனில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. www.antiragging.in என்ற இணையதளத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். மேலும். www.amanmovement.org என்ற இணையதளத்திலும் தாக்கல் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது. மேற்கண்ட இணையதளங்களில் பதிவு செய்து பல்கலைக்கழகம் சிறப்பு அலுவலருக்கு அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது. அண்ணா […]
சான்றிதழ்களுக்கான 18% ஜிஎஸ்டி வரி மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் தலையில் விழாதவாறு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகம் தனது கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் கல்லூரிகள் தங்களிடம் பயிலும் மாணவர்களிடமிருந்து இடமாற்று சான்றிதழுக்கான கட்டணம், உண்மை தன்மை சரிபார்ப்பு சான்றிதழுக்கான கட்டணம் ஆகியவற்றின் மீது 18% ஜிஎஸ்டி வரியும், மதிப்பெண் பட்டியல், ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியல், தற்காலிக பட்டச் சான்றிதழ், பட்டச் சான்றிதழ் ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்வதற்கான கட்டணத்தில் 18% ஜிஎஸ்டி வரியும்,தொலைந்துபோன சான்றிதழ்களை […]
அண்ணா பல்கலைக்கழகத்தில் 2, 3ம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. நேரடி எழுத்துத் தேர்வுக்கு கூடுதல் அவகாசம் கேட்ட பொறியியல் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று செமஸ்டர் தேர்வுகள் டிச.13 ஆம் தேதிக்கு பதில் டிச.27 இல் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.மேலும்,பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு,எழுத்துத் தேர்வாகவே நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் முன்னதாக உறுதி அளித்திருந்தது. இந்நிலையில்,அண்ணா பல்கலைக்கழகத்தில் 2 மற்றும் 3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் […]
பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு டிசம்பர் 13-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் வரும் டிசம்பர் 13-ம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும். தேர்வுக்கான விரிவான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் இன்டெர்னல், வைவா, செமஸ்டர் என அனைத்து தேர்வுகளும் நேரடியாகவே நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலையொட்டி பொறியியல் கல்லூரிகளுக்கு நாளை மற்றும் 9-ஆம் தேதி விடுமுறை தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற நாளை மற்றும் வரும் 9-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. நாளை கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலையொட்டி பொறியியல் கல்லூரிகளுக்கு நாளை மற்றும் 9-ஆம் தேதி […]