பொறியியல் படிப்புகளுக்கான 2ஆம் சுற்றுக் கலந்தாய்வில் தகுதிபெற்ற 18,513 பேரில் 12,206 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான 3ஆம் சுற்றுக் கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியின் முதல்வர் பொறுப்பில் இருந்து விஜயகுமார் விடைத்தாள் மறுமதிப்பீடு முறைக்கேடு விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விடைத்தாள் மறுமதிப்பீடு முறைக்கேடு விவகாரத்தில் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உமா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு விவகாரத்தில் உமா முறைகேட்டில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டது .சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள உமா தற்போது அண்ணா பல்கலைக்கழக பேராசிரியையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
லஞ்ச ஒழிப்புத்துறையினர் அண்ணா பல்கலைகழக தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டு முறைகேடு தொடர்பாக மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 1 ஆம் தேதி ) அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் உமா உட்பட 10பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.2017 ஏப்ரலில் நடைபெற்ற தேர்வில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தோரிடம் லஞ்சம் பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. பின்னர் இவரிடம் நடத்திய விசாரணையில், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா, 2016 மே மாதம் முதல் 2018 ஏப்ரல் மாதம்வரை துணைவேந்தர் இல்லாத […]
லஞ்ச ஒழிப்புத்துறையினர் சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் முறைகேடு தொடர்பாக 50க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
வரும்14ம் தேதி வரை மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் கைதான பேராசிரியை நிர்மலாதேவிக்கு நீதிமன்ற காவலை நீட்டித்து விருதுநகர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் ஆக.14 வரை உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் நீதிமன்ற காவல் நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. 32 மாவட்ட நூலகங்களில், ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்புகள்,13 மாவட்டங்களில் நடமாடும் நூலகங்கள் ,நூலகங்கள் மூலம் சிவில் சர்வீஸ் தேர்விற்கு பயிற்சி ,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டயக் கணக்காளர் பயிற்சி ,அடுத்த கல்வி ஆண்டு முதல், அரசு பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் […]
பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், அரசுப்பேருந்துகளில் மாணவர்களை அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து அடையாள அட்டைகள் இன்னும் 2 மாதத்தில் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் உமா உட்பட 10பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.2017 ஏப்ரலில் நடைபெற்ற தேர்வில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தோரிடம் லஞ்சம் பெற்றதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் அறிவிப்பு ஓன்று தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், 17 லட்சத்திற்கும் அதிகமானோர் குரூப் 4 தேர்வை எழுதியுள்ளனர்.இதுதான் நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய தேர்வு. ஆகஸ்ட் 30வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இன்று பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றது. இன்று பிற்பகல் முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை http://www.dge.tn.nic.in இல் பதிவிறக்கம் செய்யலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சிபிஎஸ்இ 2018 ஜூலை 8ஆம் தேதி நடந்த UGC NET தேர்வு முடிவுகளை வெளியிட்டது.இந்த முடிவில் 8,59,498 பேர் எழுதிய தேர்வில் 55,872 பேர் உதவிப்பேராசிரியர் பணிக்கு தேர்வாகியுள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நாளை பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றது. நாளை பிற்பகல் முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை http://www.dge.tn.nic.in இல் பதிவிறக்கம் செய்யலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் குரூப்-2 தேர்வு அறிவிப்பு வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு 2018 பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெற்ற நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தமிழகத்தில் 11 போலி பொறியியல் கல்லூரிகள் உள்ளது என்று மத்திய அமைச்சர் சத்யபால் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தலைமை செயலர்களுக்கு யுஜிசி எழுதிய கடிதத்தில்,இந்தியா முழுவதும் 277 போலி பொறியியல் கல்லூரிகள் உள்ளது .டெல்லியில் அதிகபட்சமாக 66 போலி பொறியியல் கல்லூரிகள் உள்ளது.தமிழகத்தில் 11 போலி பொறியியல் கல்லூரிகள் உள்ளது.மேலும் போலி பல்கலைகழகம் மற்றும் கல்லூரிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க கோரி கடிதம் அனுப்பியுள்ளதாக மத்திய அமைச்சர் சத்யபால் சிங் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் […]
சிபிஎஸ்இ நீட் அகில இந்திய கலந்தாய்வுக்கு தடை விதித்த நாக்பூர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. சிபிஎஸ்இயின் கோரிக்கையை ஏற்று அவசர வழக்காக உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெறுகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
6,768 இடங்கள் பொறியியல் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வில் நிரம்பியுள்ளது.மேலும் பொறியியல் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு இறுதி முடிவுகள் அறிவிப்பு வெளியாகியுள்ளது.இன்று பொறியியல் படிப்புகளுக்கான 2ஆவது சுற்று கலந்தாய்வு தொடங்கியது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
உறுப்பு கல்லூரிகளுக்கு இன்று (30-07-2018) விடுமுறை என பரவிய தகவலுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் சரி இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் சமூக வலைதளங்களில் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளுக்கு இன்று (ஜூலை 30) விடுமுறை விடப்பட்டதாக தகவல்கள் பரவியது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கணேசன் கூறுகையில், உறுப்பு கல்லூரிகளுக்கு விடுமுறை என்ற தகவலை யாரும் நம்ப வேண்டாம். இது வெறும் வதந்தி தான் என தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு […]