தனிப்பட்ட முறையில் பள்ளிகளை நடத்த இயலவில்லை என்றால் மூடும் அதிகாரம் பள்ளிகளுக்கு இல்லை என்று சிபிஎஸ்இ உள்ளிட்ட தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இது குறித்து மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் அனுப்பிய சுற்றறிக்கையில் ,சிறப்பு அதிகாரி மூடப்படும் பள்ளிகளை நடத்த நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சொந்த ஆதாயத்திற்காக மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை பயன்படுத்தக்கூடாது . கூடுதல் கட்டணம் பெற்றோர் செலுத்தவில்லை என்றால் பள்ளி மூடப்படும் என தனியார் பள்ளி கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பல்வேறு மாற்றங்கள் தமிழக பள்ளிக்கல்வித்துறையில் செய்யப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில் பெற்றோர் புதிய பாடத்திட்டத்தால் அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க முன்வந்துள்ளனர். இலங்கைக்கு ஒரு லட்சம் சிறந்த நூல்களை வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
புதுக்கல்லூரி மாணவர்கள் இடையே சென்னையில் மோதல் ஏற்பட்டுள்ளது. ராயப்பேட்டையில் புதுக்கல்லூரி மாணவர்கள் இடையே மாணவர் மன்ற தேர்தல் நடைபெற்ற போது மோதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.இந்த மோதலில் நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கல்விக்கடன் தொடர்பாக எஸ்.பி.ஐ. வங்கி விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தந்தை வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் மகளுக்கு கல்வி கடன் வழங்க வேண்டாம் என்ற உத்தரவை எதிர்த்து மேல் முறையீட்டு மனு ஒன்றை நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி தீபிகா தாக்கல் செய்தார்.இந்த மனுவிற்கு பதில் மனுவாக எஸ்.பி.ஐ.ஒரு மனுவை தாக்கல் செய்தது.அந்த பதில் மனுவில் கல்விக்கடன் 60% மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே வழங்கப்படும்.நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் சேர்க்கை பெற்றிருந்தால் […]
தாங்கள் நிர்ணயம் செய்த கட்டணத்தை சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள் அறிவிப்பு பலகையில் வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.மேலும் நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஆன்லைன் கலந்தாய்வு பொறியியல் படிப்பில் பொதுப்பிரிவுக்கான தொடங்கியது. முதல் முறையாக பொறியியல் படிப்பு கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் 5 கட்டங்களாக பொறியியல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இன்று முதல் சுற்று மாணவர்களுக்கு தொடங்கிய கலந்தாய்வு 29ம் தேதி வரை நடைபெறுகிறது.முதல் சுற்று கலந்தாய்வில் 190வரை கட் ஆஃப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பங்கேற்று உள்ளனர் . மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
புதிய துணைவேந்தரை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு நியமிக்க கூடாது புதிய துணைவேந்தரை தேர்வு செய்யலாம் ஆனால் நியமிக்கக் கூடாது என்று தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம். துணைவேந்தராக செல்லதுரையை நியமித்தது செல்லாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மேல்முறையீடு செல்லதுரையின் மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு விதித்துள்ளது.ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை புதிய துணைவேந்தரை நியமிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்கள் தெளிவு பெற வேண்டும் என்பதற்காகவே ஆன்லைன் மூலம் கலந்தாய்வு என்று அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும் தனியார் மையத்தை அணுகி ஏமாறாமல் அரசின் பொறியியல் சேவை மையங்களை பயன்படுத்த வேண்டும். கலந்தாய்வுக்கான கட்டணத்தை டிடி மூலமாகவும் ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
புதுக்கோட்டை அருகே ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலில் காயமடைந்த மாணவர் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதலில் ஈடுபட்டதாக 4 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் மேலும் ஒரு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
அரசு கருணை மதிப்பெண் விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் ,அதிக கட்டணம் திரையரங்குகளில் ஸ்நாக்ஸ், வாகன நிறுத்துமிடத்திற்கு வசூலிப்பதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவிற்கான பிரச்னையை முன் வைத்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படவில்லை என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பொறியியல் படிப்புகளில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது .இன்று முதல் ஜூலை 25ஆம் தேதி தொடங்கும் கலந்தாய்வுக்கு கட்டணம் செலுத்தலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பள்ளிக் கல்வித்துறை 67 அரசுப் பள்ளிகளில் திறன் சார்ந்த தொழிற்கல்வி அறிமுகம் செய்து அரசாணை பிறப்பித்துள்ளது.மேலும் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பம் இருந்தால் தொழிற்கல்வியை தேர்வு செய்து படிக்கலாம். மாணவர்களுக்கு தொழில் நிறுவனங்கள் மூலம் திறன் பயிற்சி அளிக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தொல்காப்பியருக்கு மெரினா கடற்கரையில் சிலை அமைக்கப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில், திருக்குறல் புத்தகத்தை Book Of the World என்ற அந்தஸ்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதால் மீண்டும் தஞ்சை நெற்களஞ்சியமாக மாறும் என்றும் கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கூடுதல் கட்டணம் தனியார் பள்ளிகளில் வசூலித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில்,தமிழகம் மருத்துவத்துறையில் இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறது. விளையாட்டு மைதானம் இல்லாத பள்ளிகளில் மைதானம் அமைக்க நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கருணை மதிப்பெண் தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தர இடைக்கால தடை விதிப்பு வேதனை அளிக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில், மத்திய, மாநில அரசுகள் மாணவர்களுக்கு துரோகம் இழைத்துள்ளது.மாநில அரசு மாணவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் உரிய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கடந்த மே 6 ஆம் தேதி தமிழகத்தில் 170 மையங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வெழுதினர்.பின்னர் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதன் பின் கடந்த ஜூலை 10 ஆம் தேதி வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாராணைக்கு வந்தது.இந்த வழக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.கே. ரெங்கராஜன் எம்.பி சார்பில் வழக்கறிஞர்கள் ஷாஜி செல்லன்,சீனிவாசராகவன் ஆகியோர் நீட் வினாத்தாள் குளறுபடியால் 196 மதிப்பெண்கள் கருணை மதிப்பெண்ணாக வழங்க வேண்டும் என்று தொடர்ந்தார். பின்னர் இதை விசாரித்த நீதிமன்றம், […]
நீட் தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது . தமிழில் நீட் தேர்வு எழுதிய 24000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது . பின்னர் கடந்த ஜூலை 16 ஆம் தேதி சிபிஎஸ்இ நீட்- கருணை மதிப்பெண் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது . தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண் தர வேண்டும் […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.கே. ரெங்கராஜன் எம்.பி ,நீட் வினாத்தாள் குளறுபடி வழக்கில் 196 மதிப்பெண்கள் கருணை மதிப்பெண்ணாக வழங்க வேண்டும் என்று தொடர்ந்தார்.இதனிடையில் நீட் தேர்வு எழுதிய 24000 மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது . நீட் தேர்வுக்கான வினாத்தாள்கள் தமிழில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தது குறித்து மாநிலங்களவையில், அதிமுக உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் கேள்வி எழுப்பினார். தமிழகத்தைச் சேர்ந்த சில மாணவர்கள், வெளிமாநிலத்திற்கு சென்று தேர்வுஎழுதுவதை […]
தமிழக அரசு சார்பில் கல்வித்துறை சிறப்பாக செயல்படுவதாக கூறிய ரஜினிக்கு நன்றி என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் . மேலும் அவர் கூறுகையில், வேலைவாய்ப்பை பெறும் வகையில் 12-ம் வகுப்பு முடித்தவுடன் சிறப்பு திறன் பயிற்சி அளிக்கப்படும். ஐஏஎஸ் (IAS) அகாடமிகள் தமிழகத்திலுள்ள 32 மாவட்ட நூலகங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் . சி.ஏ முடிப்பதற்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு 12-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் ஸ்கில் டிரயெ்னிங் பாடம் கொண்டு வரப்பட உள்ளது என்று […]
சிபிஎஸ்இ நீட்- கருணை மதிப்பெண் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது . தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண் தர வேண்டும் என்ற உயர்நீதிமன்ற கிளை உத்தரவு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. முன்னதாக தமிழில் நீட் தேர்வு எழுதிய 24000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.