இன்று மார்ச் 19 கிரிகோரியன் ஆண்டின் 78 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 79 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 287 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1279 – யாமென் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் மங்கோலியாவின் வெற்றியுடன் சீனாவில் சோங் அரச பரம்பரை முடிவுக்கு வந்தது. 1861 – நியூசிலாந்தில் முதலாவது தரனாக்கி போர் முடிவுக்கு வந்தது. 1915 – புளூட்டோவின் ஒளிப்படம் முதற்தடவையாக எடுக்கப்பட்டது. ஆனாலும் அது கோளாக கருதப்படவில்லை. 1918 – நேர […]
1913 ஆம் ஆண்டு கிறீஸ் நாட்டில் 50 வருடங்களாக ஆட்சியிலிருந்த மன்னர் முதலாம் ஜோர்ஜ் படுகொலை செய்யப்பட்டார். 1921 ஆம் ஆண்டு போலந்துக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையில் இரண்டாவது சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது, 1922 ஆம் ஆண்டு இந்தியாவில் மகாத்மா காந்திக்கு சிவில் ஒத்துழையாமை நடவடிக்கை காரணமாக 6 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 1937 ஆம் ஆண்டு லண்டன் பாடசாலை குண்டுவெடிப்பொன்றில் சுமார் 300 பேர் பலி. 1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலக யுத்தத்தில் பேர்லின் மீது 1250 அமெரிக்க விமானங்கள் குண்டுத் தாக்குதல் […]
பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்பிறப்பு:14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) இந்திய விடுதலைக்கு பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். ‘திராவிட புத்தம்’ என்ற பெயரில் […]
வானிலையை சீராக வைப்பதற்கு உரிய வழிமுறைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக வானிலை தினம் மார்ச் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. “வாழ்க்கையையும் பொருட்களையும் பாதுகாக்க வானிலையை கண்காணிப்போம்’ என்பது இந்தாண்டு இதன் மையக்கருத்தாக உள்ளது. தற்போதைய காலநிலை மாற்றம் மற்றும் வெப்பமயமாதலால் மனிதர்கள் மட்டுமின்றி,மற்ற உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது இன்றைய தலைமுறைக்கு, சவாலாக திகழ்கிறது… தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு அதிகரிப்பதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. ஓசோன் பாதிப்புக்குள்ளாகி, பூமியில் வெப்பம் அதிகரிக்கிறது இதில் வளரும் […]
மார்ச் 23, 1931 பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் – இந்தியாவின் மூன்று வீரமிக்க தியாகிகள் தூக்கிலிடப்பட்ட நாள். தூக்கு தண்டனை மார்ச் 24 தான் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது . எனினும் மக்களின் கடும் எதிர்ப்புக்களை, எழுச்சி மிக்க ஆர்ப்பாட்டங்களை தவிர்க்கும் நோக்கோடு மார்ச் 23ம் நாள் மாலையே தூக்கு தண்டனையை நிறைவேற்றிட சிறை அதிகாரிகள் முடிவு செய்தனர். சிறைக் காவலர்கள் பகத்சிங்கை அழைத்துச்செல்ல நெருங்கினார்கள் அப்போது அவன் மெய்மறந்து ஒரு நூலை வாசித்துக் கொண்டிருந்தான். அது […]
மார்ச் 22-ந் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நீர் இன்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப, நீரின்றி நாம் வாழ இயலாது என்பதும் நன்கு அறிந்ததே. பூமியில் 30 விழுக்காடு மட்டுமே நிலப்பரப்பாகும். மீதமிருக்கும் 70 விழுக்காடும் நீர்பரப்புதான். ஆனால், இன்று அந்த 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான நீரை அளிக்கும் போதிய வசதியை பூமி இழந்து வருகிறது. அதற்கும் மனித இனம்தான் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.1993ஆம் ஆண்டு முதல் […]
மார்ச் 22- இன்று தமிழ் திரைப்படத்துறையில் காதல் மன்னன்’ என்று அழைக்கப்பட்ட புகழ்பெற்ற நடிகர் ஜெமினி கணேசன் அவர்கள் நினைவு நாள். எம்.ஜி.ஆர், சிவாஜி எனத் தமிழ் திரையுலகை ஆட்சி செய்துகொண்டிருந்த காலககட்டத்தில், தன்னுடைய அழகிய தோற்றத்தாலும், இயற்கையான நடிப்பாலும் தனக்கென ஒரு தனி பாணியை ஏற்படுத்திக்கொண்டு, முற்றிலும் மாறுபட்ட நடிப்பில் தமிழ் சினிமாவை ஆட்சிசெய்த அற்புதக் கலைஞன் ஆவார்.. தமிழ் மொழியில் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் எனப் பிற இந்திய மொழிகளிலும் நடித்துள்ள […]
ஆண்டு தோறும் மார்ச் 21ஆம் தேதி உலக வன நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. காடு என்பது நிறைய மரங்கள் இருக்கக் கூடிய ஓர் பகுதி என்று மட்டும் கருதக்கூடாது. மரங்கள், விலங்குகள் மற்றும் அங்கு வாழும் பூர்வீக வாசிகளும் சேர்ந்த தொகுப்பாகும். விலங்குகள் மற்றும் மரங்களை ஒருங்கிணைத்து வளர்ப்பதற்கு, வனத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. பெருமளவு அதிகரித்துவரும் பாலீத்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களினால் பொருள் கழிவுகளினாலும் மனிதர்களின் ஆக்கிரமிப்பாலும் காடுகள் அழிந்து வருகின்றன. […]
உலகப் புகழ்பெற்ற ஷெனாய் இசை மேதை ‘பாரத ரத்னா’ உஸ்தாத் பிஸ்மில்லா கான் (Ustad Bismillah Khan) பிறந்த தினம் இன்று 21 மார்ச், 1916 -பிஹார் மாநிலம் தும்ரான் கிராமத்தில் (1916) பிறந்தார். பெற்றோர்கள் வைத்த பெயர் கமருதீன். குழந்தையைப் பார்க்க வந்த தாத்தா ‘பிஸ்மில்லா’ என்று அழைத்தார். அந்த பெயரே நிலைத்து விட்டது. கல்யாண வீடுகளில் மட்டுமே இசைக்கப்பட்ட ஷெனாய் இசைக் கருவியை சாஸ்திரீய கச்சேரி மேடைக்கு கொண்டுவந்து உலகப்புகழ் பெறவைத்தார். உலகம் முழுவதும் […]
மார்ச்21 ஆம் நாளை ஆண்டுதோறும் உலக கவிதை தினமாக (World Poetry Day) ஐக்கிய நாடுகள்கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்புஅறிவித்துள்ளது. 1999ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அறிவித்தாலும் சில நாடுகள் மட்டுமே இதனை செயல்படுத்தி இன்று உலகம் முழுக்க படிப்படியாக கவிதை நாளை கொண்டாடி வருகின்றன. இலக்கிய அமைப்புகளின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், கவிதை எழுதுவதை ஆர்வப்படுத்தும் நோக்கிலும் அனைத்து நிலை இலக்கிய அமைப்புகள் இவ்விழாவை நடத்த யுனெஸ்கோ கேட்டுக் கொண்டுள்ளது. சர்வதேச கவிதை இயக்கங்களுக்குபுதிய அங்கீகாரம் […]
வரலாற்றில் இன்று – மார்ச் 20, 1992 – உலகப் புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இயக்குநர் சத்யஜித்ரேவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. உலக திரைப்பட அரங்கில் அவர் தனக்கென்று தனி முத்திரை பதித்ததோடு, இந்திய திரைப்படங்களுக்கும் கவுரவத்தைத் தேடிக்கொடுத்தார். திரைப்பட டைரக்ஷன் மட்டுமின்றி, இசை அமைப்பு, ஓவியம் தீட்டுதல், குழந்தைகளுக்கான கதைகள் எழுதுதல் ஆகியவற்றிலும் சத்யஜித்ரே வல்லவர். சத்யஜித்ரே தயாரித்து டைரக்டு செய்த படங்களில் பெரும்பாலானவற்றுக்கு அவரே இசை அமைத்தார். இந்திய சினிமாத்துறையில் “ஆஸ்கார் […]
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம் மற்றவர்களை சந்தோஷப் படுத்துவதுதான் . இன்றேனும் மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துங்கள்.ஐ.நா. சபையின் கீழ் இயங்குகிற ‘சஸ்டைனபிள் டெவலப்மென்ட் சொல்யூஷன்ஸ் நெட்வொர்க்’ என்ற அமைப்பு உலகிலேயே மகிழ்ச்சிகரமான 158 நாடுகளை வரிசைப்படுத்தி உள்ளது. தனிநபர் வருமானம், மனிதர்களின் ஆரோக்கியமான ஆயுட்காலம், சமூக ஆதரவு, ஊழல் மற்றும் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை தேர்வு செய்வதில் சுதந்திரம் ஆகியவை மகிழ்ச்சிக்கான அடிப்படை அம்சங்களாக கருதப்படுகின்றன. இவற்றின் அடிப்படையில் மகிழ்ச்சிகரமான நாடுகளைப் பட்டியலிட்டுள்ளது இந்த அமைப்பு.இப்பட்டியலில் இந்தியா 137 ஆவது […]
மார்ச் 20 – இன்று உலக சிட்டுக் குருவிகள் தினம் சிட்டுக்குருவி இனம் அழியாமல் காப்பாற்று வதற்காக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆண்டு தோறும் மார்ச் 20ஆம் தேதியை உலக சிட்டுக்குருவி தினமாக அறிவித்து அவற்றை பாதுகாக்க போராடி வருகின்றனர் சிட்டுக்குருவிகள் பொதுவாக மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே கூடுகட்டி வாழ விரும்புகின்றன. இதனால், வீட்டு மாடம், பரண், ஓடுகளின் இடைவெளி போன்ற இடங்களில் கூடுகட்டி வசித்து வந்த இந்த சின்னஞ்சிறு பறவை கான்கிரீட் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகரிப்பால் […]
மார்ச் 20, 2003 வரலாற்றில் இன்று – பேரழிவு ஆயுதங்களை ஈராக் வைத்திருப்பதாக அமெரிக்க உளவுத்துறை கண்டுபிடித்திருப்பதாக பொய்யான காரணங்களைக் கூறி அமெரிக்க அதிபர் ஜார்ஜ் W புஷ் ஈராக்கின் மீது ஆக்கிரமிப்பு போரை துவக்கிய நாள் இன்று அப்படிப்பட்ட பேரழிவு ஆயுதங்கள் ஒன்றைக்கூட அவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை. பல ஆயிரம் அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இப்போரின் காரணமாக உலகில் கச்சா எண்ணையின் விலை பல மடங்கு அதிகரித்து இந்தியா போன்ற நாடுகளில் கடும் பொருளாதார நெருக்கடி […]
தோழர் ஈ.எம். எஸ்….. கம்யூனிஸ்ட்கள், இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் என்று, வரலாற்றை வளைப்பவர்களுக்கு ஒரு சேதி. அதைத் தெரிந்து கொள்ள, கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டம், புலாமந்தோள் என்ற ஊருக்கு சென்றால் போதும். அங்கே, வானுயர நிற்கும், ஒரு பள்ளி வாசல், கதை சொல்லும். அப்பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு, உங்களோடு பகிர்ந்து கொள்ள, ஒரு, வரலாற்று நிகழ்வு இருக்கிறது. ஈ.எம். எஸ். என்று, வாஞ்சையுடன்,இன்னும் நினைவு கூரப்படும், தோழர் ஈ.எம். எஸ். அவர்களின், முடிவெடுக்கும் திடமும், சிறுபான்மை மக்கள் மீது […]
மார்ச் 19, 1998 – இன்று மாமனிதர் தியாகத் தலைவர் ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட் நினைவு தினமாகும். சிலர் வரலாற்றில் இடம்பெறுவார்கள், சிலர் வரலாற்றை உருவாக்குவார்கள். இதில் இரண்டாம் வகையைச் சார்ந்தவர்தான் ஈ.எம்.எஸ். ஒரு சனாதன ஜமீன் குடும்பத்தில் 1909-ல் பிறந்தவர் அவ்வளவு சொத்துகளையும் கட்சிக்குக் கொடுத்துவிட்டு, கட்சி கொடுத்த ஓர் அறையில் காலமெல்லாம் வாழ்ந்து மறைந்தார் அந்த மா மனிதர். ஈ எம்.எஸ்தான் விரும்பும் மாற்றத்தை தன்னிடத்திலிருந்து தொடங்கியவர் . . தன் பள்ளிப் பருவத்தில் குடுமியை […]
சீனர்கள் கண்டுபிடித்த “பறக்கும் காசு” என அழைக்கப்பட்ட நாணயத் தாள். கடதாசியில் அச்சிடப் பட்ட நாணயத் தாள்கள், பண்டைய மொங்கோலிய சாம்ராஜ்யத்தில் புழக்கத்தில் விடப் பட்டிருந்தது. அப்போது சீனாவை ஆண்ட மொங்கோலிய கான் சக்கரவர்த்தியின் அரசுப் பிரதிநிதிகள், இந்த நாணயத் தாளை அச்சிட்டு கையொப்பமிட்டு கொடுத்தனர். அதில் கான் சக்கரவர்த்தியின் முத்திரை பொறிக்கப் பட்டிருந்தது. அதன் பிறகு அந்த நாணயத் தால் சாம்ராஜ்யத்தின் எந்த மூலையிலும் செல்லுபடியானது. அந்த நாணயத் தாள் கொடுத்து எந்தப் பொருளும் வாங்க முடிந்தது. […]
பண்டைய காலத்து ஈரானியர்களின் குளிரூட்டும் பொறிமுறை. இன்று AC என அழைக்கப்படும் Aircondition வசதி பண்டைய ஈரானில் (அத்துடன் ஆப்கானிஸ்தானில்) இருந்துள்ளது. இது குறித்து மார்கோ போலோ தனது பயணக் குறிப்புகளில் எழுதியுள்ளார். நீண்ட காலத்திற்குப் பிறகு, இருபதாம் நூற்றாண்டில் தான் ஐரோப்பியர்கள் மின்சாரத்தில் இயங்கும் குளிரூட்டியை கண்டுபிடித்தனர். பண்டைய ஈரானியர்களின் AC பொறிமுறை சிறந்த தொழில்நுட்பத்துடன் கட்டப் பட்டது. ஒரு கட்டிடத்திற்கு மேலே உள்ள கோபுரங்களில் காற்று செல்வதற்கான சாளரங்கள் இருக்கும். அதே நேரம் கட்டிடத்தின் […]
உலக வரலாற்றில் மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி ஆண்டவர்கள் மொங்கோலியர்கள் தான். அது பற்றிய எதிர்மறையான தகவல்களே வரலாற்று நூல்களில் பதிவுசெய்யப் பட்டுள்ளன. இருப்பினும், மொங்கோலிய சாம்ராஜ்யத்தில் இருந்த சமூக, பொருளாதார, தொழில்நுட்ப வளர்ச்சிகள் ஐரோப்பாவுக்கு வருவதற்கு நீண்ட காலம் எடுத்தன. பதின்மூன்றாம் நூற்றாண்டில், உலகில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி ஆள்வது இலகுவான காரியம் அல்ல. அதை நடைமுறைப் படுத்துவதற்காக தபால் சேவை கொண்டுவரப் பட்டது. மேற்கே கருங்கடலில் இருந்து கிழக்கே பசுபிக் சமுத்திரம் வரையில், தபால் […]
இன்று மார்ச் 18ம் தேதி 1965ம் ஆண்டு இதே நாளில் சோவியத் விண்வெளி வீரர் அலெக்சி லியோனொவ் வாஸ்கோத் – 2 என்ற விண்கலத்தின் வெளியே சுமார் 12 நிமிடங்கள் நடமாடி விண்வெளியில் நடந்த முதல் மனிதன் என்ற பெயரை பெற்றார். இவர் தற்போது பணி ஓய்வில் இருக்கிறார். இவரது சாதனையை பாராட்டி சோவியத் ஒன்றிய அஞ்சல் தலையில் இவர் விண்வெளியில் நடந்த உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இரண்டு தடவை சோவியத் ஒன்றியத்தின் ஹீரோ என்ற விருதையும், லெனின் […]