மார்ச் 17, 1920 – வங்கதேசத்தின் முதல் அதிபர் ‘வங்கபந்து’ ஷேக் முஜிபுர் ரஹ்மான் (Sheikh Mujibur Rahman) பிறந்த தினம் இன்று. கிழக்கு வங்கப் பகுதியின் (பின்னர் கிழக்கு பாகிஸ்தான்) டோங்கிபுரா கிராமத்தில் (1920) பிறந்தவர். வறுமை, வேலையின்மை, மோசமான வாழ்க்கைத்தரம் இவற்றுக்கு சோஷலிஸம் தீர்வு தரும் என்று நம்பினார். தான் ஒரு வங்காளி என்பதை பெருமையாகக் கருதியவர். பாகிஸ்தானில் உருது மட்டுமே தேசிய மொழி என்று 1949-ல் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு […]
மை லாய் படுகொலைகள் (My Lai Massacre) என்பது தெற்கு வியட்நாமில் மார்ச் 16, 1968 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கப் படைகளினால் 504 அப்பாவி பொது மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிப்பதாகும். இந்த படுகொலை சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த பெரும்பாலானோர் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டோ அல்லது அடிக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டோ கொல்லப்பட்டனர். பெரும்பாலானோரின் உடல்கள் பெரும் சிதைவுக்குள்ளாகிக் கண்டுபிடிக்கப்பட்டன. இப்படுகொலைகள் வியட்நாம் போரின் போது சோன் மை […]
இன்று மார்ச் 16ம் நாள் தியாகி பொட்டி ஸ்ரீராமுலு பிறந்த நாள் ஆந்திர மாநிலத்தின் பிதா பொட்டி ஸ்ரீராமுலு. சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரப் பிரதேசம் பிரிந்து தனி மாநிலமாக அமைவதற்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தத் தியாகி. இவருடைய உயிர்த்தியாகம்தான் ஆந்திரா உருவாகக் காரணமாக இருந்தது. ஆகவே ஆந்திர தெலுங்கு மக்கள் போற்றும் தியாகியாக இவர் விளங்குகிறார் அவ்வாறு ஆந்திர மாநிலம் பிறந்தபோது அம்மாநிலத்தின் தலைநகரமாக மதராஸ் அறிவிக்கப்படவெண்டுமென்ற அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை. ஏனெனில் மக்கள் தொகைக் […]
வரலாற்றில் இன்று – உலகின் முதலாவது சர்வதேச கிரிக்கெட் போட்டி 140 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற நாள் இன்று ஆகும். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இப்போட்டி 1877 ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. மார்ச் 15 துவங்கி 19 ம் நாள் முடிவுற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வென்றது. முதலாம் படத்திலிருப்பது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணி. […]
மார்ச் 15, ஒவ்வோரு ஆண்டும் மார்ச் மாதம் 15 ஆம் தேதி உலக நுகர்வோர் உரிமை தினமாகும். நாம் உபயோகிப்பதற்காக விலை கொடுத்து வாங்கும் ஒவ்வொரு பொருளும் அதன் உரிய பலனைத் தருகின்றதா; நாம் கொடுக்கும் விலைக்கு உரியதுதானா; நாம் ஏமாற்றப்பட்டுள்ளோமா என்பனவற்றை அறியும் உரிமை நமக்கு இருக்கிறது. தரம் குறைந்த சாமான்களை நமக்குத் தந்து விட்டு, அதன் தயாரிப்பாளரோ கடைக்காரரோ நம்மை ஏமாற்றுவது குற்றம். நுகர்வோராகிய நமக்குப் பல உரிமைகள் இருப்பதைப் போன்றே கடமைகளும் இருக்கின்றன. […]
மார்ச் 14, 1879 – ஆல்பர்ட் ஐன்ஸ்டின் என்ற இயற்பியல் மேதை சென்ற நூற்றாண்டின் மிகச்சிறந்த விஞ்ஞானி ஆவார். இவர் 1879 – ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 – ஆம் நாள் ஜெர்மனி நாட்டில் பிறந்தார். இவர் தனது மூன்று வயது வரை பேசாதவராகவே இருந்தார். ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்து யூதர்களை கொடுமைப்படுத்தத் துவங்கியதும் ஐன்ஸ்டின் அமெரிக்காவிற்கு தப்பிச் சென்றார். இவரின் புவியீர்ப்பு தத்துவம், சார்பியல் கொள்கை, ஒளிமின் விளைவிற்கு இவர் அளித்த […]
இன்று காலத்தை வென்ற மார்க்சிய தத்துவத்தை உலகுக்கு அளித்த மாமேதை கார்ல் மார்க்ஸ் நினைவு நாள் – மார்ச் 14, 1883. உலக வரலாற்றில் அழியாத புகழுடன் தலைநிமிர்ந்து நிற்கிறது மாமேதை கார்ல் மார்க்சின் பெயர். அவர் தன் அருமை நண்பர் பிடெரிக் ஏங்கல்சுடன் சேர்ந்து கம்யூனிச லட்சியத்தைப் பிரகடனம் செய்தார். அதன் மூலம் உலகப் பாட்டாளி மக்களுக்கு வழிகாட்டும் தத்துவத்தைத் தந்தார். தலைசிறந்த புரட்சிக்காரராக, உலகப் பாட்டாளி வர்க்க லட்சியத்தின் உறுதியான போராளியாக அவர் தன் […]
மார்ச் 13, 1781 – வரலாற்றில் இன்று இங்கிலாந்தை சேர்ந்த சர் வில்லியம் செர்சல் என்ற வானியலாளரால் யுரேனஸ் கொள் கண்டறியப்பட்டது. யுரேனஸ் சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து ஏழாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். விட்டத்தின் அடிப்படையில் இது மூன்றாவது பெரிய கோளாகும். இக்கோள் கிரேக்கக் கடவுள் யுரேனசின் நினைவாக பெயரிடப்பட்டது. கண்ணுக்குப் புலப்படும் கோளாயினும், அதன் மிகுந்த மெதுவான கோளப்பாதையாலும் மங்கலான தோற்றத்தாலும் பண்டைய கால மக்கள் அதனை ஒரு கோளாக கருதவில்லை.
மார்ச் 13, 1940 வரலாற்றில் இன்று– இந்திய விடுதலைப் போராட்ட வீரர் உத்தம் சிங் லண்டனில் காக்ஸ்டன் ஹால் என்ற இடத்தில் இடம்பெற்ற்ற பொதுக்கூட்டத்தில் வைத்து இந்தியாவின் ஜாலியன்வாலா பாக் படுகொலைகளுக்கு காரணமான பஞ்சாப் மாநில முன்னாள் ஆளுநர் மைக்கேல் டயர் என்பவரை சுட்டுக் கொன்றார். குறிபார்த்து ஆறு முறை சுட்டார். இறந்து போனான் டயர் . அந்த வேலை முடிந்ததும் ஓடாமல் கம்பீரமாக அங்கேயே நின்ற உத்தம் சிங் “என்னுடைய வேலை முடிந்தது ; என் […]
வரலாற்றில் இன்று மார்ச் 12, 1993ஆம் ஆண்டு இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையை நிர்மூலமாக்கும் வகையில் பல இடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இதில் 257 பேர் உயிரிழந்தனர். 713 பேர் படுகாயமடைந்தனர் மதியம் 1.33 மணியில் இருந்து 3.40 மணிவரை அடுத்தடுத்து இந்த குண்டு வெடிப்புகள் நடந்து மும்பையை அதிர வைத்தது. மும்பை ஸ்டாக் எக்சேஞ்ச், கதா பஜார், சேனாபவன், செஞ்சுரி பஜார், மாகிம், ஏர் இந்தியா கட்டிடம், ஜவேரி பஜார், ஓட்டல் சீராக், பிளாசா தியேட்டர், […]
வரலாற்றில் இன்று மார்ச் 12, 1930. மகாத்மா காந்தி வெள்ளையரின் உப்பு சட்டத்தை முறியடிக்கும் நோக்கோடு தண்டி யாத்திரையை துவக்கிய நாள் உப்பு சத்தியாகிரகம் அல்லது தண்டி யாத்திரை (Salt March) என்பதுகாலனிய இந்தியாவில் ஆங்கிலேயர் இந்தியர்கள் மீது விதித்த உப்பு வரியை அறவழியில் எதிர்க்கும் திட்டமிட்ட போராட்டமாகும். மார்ச்சு 12, 1930 இல் குஜராத் மாநிலத்திலுள்ள தண்டியில் தடையை மீறி உப்பெடுக்கும் நடைப்பயணமாகத் துவங்கியது. 1930 ஜனவரி 30 ஆம் நாள் இந்திய தேசிய காங்கிரசு அறிவித்த […]
மார்ச் 11, 1918 – வரலாற்றில் இன்று– ரஷ்யாவின் தலைநகரம் பெத்ரொக்ராட் எனப்படும் சென் பீட்டர்ஸ்பர்க் நகரிலிருந்து இருந்து மாஸ்கோவுக்கு மாறியது. அதற்கு முன்னர் ரஷ்யாவின் ஜார் மன்னர்கள் 1712 ல் சென் பீட்டர்ஸ்பேர்க்கை தலைநகராக்கும் வரை இதுவே தலைநகராக இருந்தது. 1918 ல் மீண்டும் ரஷ்யாவின் தலைநகராக்கப்பட்டது. 1917 ஆம் ஆண்டு நடைபெற்ற ரஷ்யப் புரட்சியின் வெற்றிக்குப் பின்னர் ரஷ்ய குடியரசின் தலைவர் பொறுப்பேற்ற விளாடிமிர் லெனின் மாஸ்கோவை மீண்டும் ரஷ்யாவின் தலைநகராக்கினார்.
வரலாற்றில் இன்று – மார்ச் 10, 1982 – சூரியக் குடும்பத்திலுள்ள எட்டு கோள்கள் அனைத்தும் தத்தம் சுற்றுப்பாதையில் சூரியனின் ஒரே பக்கத்துக்கு வந்தன. 3000 ஆண்டுகளுக்கு ஒருமுறை இதுபோல நடக்கும் என ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வரலாற்றில் இன்று – மார்ச் 10, 1876 உலகின் முதலாவது தொலைபேசி அழைப்பு பேசப்பட்ட தினம் – அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதல் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார். தன் உதவியாளரை தொலைபேசி மூலம் அழைத்து “மிஸ்டர் வட்ஸன் இங்கே வாருங்கள்” என்றார். அவைதான் தொலைபேசியில் பேசப்பட்ட முதல் வார்த்தைகள். அமெரிக்காவில் ஏறக்குறைய ஒரே காலத்தில் மூன்று படைப்பாளிகள் தொலைபேசியை ஆக்க முற்பட்டனர் யார் முதலில் படைத்தவர் என்ற வழக்குப் போட்டியில் பெல் ஒருவரே வெற்றி பெற்றார். […]
மார்ச் 8 – சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பல நாடுகள் சிறப்பு அஞ்சல் தலைகளை வெளியிட்டுள்ளன. அவற்றுள் சில மட்டும் இங்கே தரப்பட்டுள்ளன. பழைய சோவியத் யூனியன்தான் தற்போதைய ரஷ்யா ஒன்றியம் மிக அதிகமான (17 ) அஞ்சல் தலைகளை வெளியிட்டது.
மார்ச் 8 – இன்று உலக மகளிர் தினம் (International Women’s Day). ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தினம் மார்ச் மாதம் 8 -ம் தேதி கொண்டாடப்படுகிறது. அது வந்த வரலாற்றை சற்று பின்னோக்கி பார்ப்போம். வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள், தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர் என்றால், அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றியே இந்த மகளிர் தினமாகும். இந்த உலக மகளிர் தினம் கொண்டாடுவதற்கு காரணமான போராட்டத்திற்கான வெற்றிகள் அவ்வளவு எளிதாக கிட்டவில்லை. […]
மார்ச் 6, 1967 – வரலாற்றில் இன்று – மூன்றாவது தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஆளும் கங்கிரஸ் கட்சியை தோற்கடித்து தி.மு.க. எனப்படும் திராவிட முன்னேற்றக் கழகம். 138 இடங்களை வென்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. அக்கட்சிப் பொதுச்செயலர் சி.என் அண்ணாதுரை தமிழ்நாட்டின் முதல்வரானார். அப்போதைய “சென்னை மாகாண” கவர்னர் சர்தார் உஜ்ஜல் சிங் அண்ணாதுரைக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சட்டமன்ற தேர்தலுடன் நடைபெற்ற பாராளுமன்ற (லோக்சபை) தேர்தலில் தி.மு.க 36 இடங்களிலும் கங்கிரஸ் […]
மார்ச் 6,, 1790.- வரலாற்றில் இன்று. மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்டது – ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியாரின் நிர்வாகத்தில் பெரும்பான்மையான தமிழகம் இருந்தபோது அவர்கள்தான் நிர்வாக வசதிக்காக இதுபோல் மாவட்டங்களை உருவாக்கினார்கள். அவ்வாறே மதுரை மாவட்டமும் உருவாக்கப்பட்டது. இது தற்போது மதுரையை சுற்றியுள்ள திண்டுக்கல், தேனி, விருதுநகர்,ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது. தற்போதைய மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி தவிர, 5 நகராட்சிகள், 12 பேரூராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்கள், இந்த ஊராட்சி ஒன்றியங்களின் […]
வரலாற்றில் இன்று – மார்ச் 4, 1882 – இங்கிலாந்தின் முதலாவது மின்சார டிராம் வண்டி கிழக்கு லண்டனில் ஓடவிடப்பட்டது. அது ஒரு பரிசோதனை முயற்சியே – சோதனை ஓட்டம் . 1883ம் ஆண்டுதான் மின்சார டிராம் எஞ்சின்கள் மூலம் பயணிகள் சேவை துவங்கி நடைபெற்றன.ரயில் வண்டியின் முன்னோடிதான் டிராம் வண்டிகள். தண்டவாளங்கள் பொருத்தப்பட்ட பாதையில், குதிரைகள் பெட்டிகளை இழுத்துச் செல்லும். பின்னர் குதிரைகளுக்கு பதில்,. நீராவி இழுவைகள் பொருத்தப்பட்ட டிராம் வண்டிகள் பயன்பாட்டுக்கு வந்தன. 1895-ல் […]
வரலாற்றில் இன்று – மார்ச் 4, 1861 – அமெரிக்காவின் 16-வது அதிபராக ஆபிரஹாம் லிங்கன் பொறுப்பேற்றார். அடிமைத்தனத்தை எதிர்த்து ஆரம்ப காலத்திலிருந்து முழங்கி வந்த லிங்கன் அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் ஆனதும் உள்நாட்டுக் களவரங்கள் ஏற்பட்டன. ‘அடிமைத்தனம் தொடர வேண்டும் அது ஆண்டவனால் தீர்மானிக்கப்பட்டது. அதை அகற்ற ஆபிரகாம் லிங்கன் யார்?’ என்று அடிமைத்தனத்தால் பயன் பெறுபவர்கள் தூண்டிவிட்டனர். அமெரிக்காவின் தெற்கில் உள்ள சில சில மாநிலங்கள் தனியே பிரிந்து செல்ல வேண்டும் என விரும்பின. […]