வரலாற்றில் “வந்தே மாதரம்” என்ற சொல்லை உருவாக்கிய தேச பற்று மிக்கவரான சட்டர்ஜி மறைந்த தினம்.
வங்கப் பிரிவினையை எதிர்த்து இந்தியாவில் உள்ள இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றிணைந்து எழுப்பிய வலிமை வாய்ந்த போர் முழக்கமாகவே அந்த மந்திரம் இருந்தது. அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போர் குரல் என்றே சொல்லலாம். அந்த மந்திர சொல் ”வந்தே மாதரம்” என்பது ஆகும். இந்த வந்தே மாதரம் உருவான வரலாறு குறித்து பார்க்க இருக்கிறோம். ஒருமுறை கொல்கத்தாவில் இருந்து தனது சொந்த ஊருக்கு 1875ஆம் ஆண்டு ஓர் இளைஞன் இரயில் பயணம் மேற்கொள்கிறான். ஓடும் இரயிலில் உட்கார்ந்து கொண்டு, இருமருங்கும் பார்க்கிறான். பசுமையான வயல்கள், உயர்ந்த மலைகள், ஓங்கி வளர்ந்த மரங்களில் தொங்கும் காய்கள், கனிகள், ஓடும் ஆறுகள், பாயும் அருவிகள், வீசும் தென்றல் இவற்றின் அழகில் மயங்குகிறான். அந்த இனிய மயக்கத்தில் ஒரு பாடல் பாடுகிறான்.
வந்தே மாதரம்
சுஜலாம் சுபலாம் மலயஜ ஷீத்தளாம்!
சஸ்ய ஷ்யாமளாம் மாதரம்…
வந்தே மாதரம் ….தாய்த் திருநாடே! உன்னை
வணங்குகிறேன்!
உன் அழகை ஆராதிக்கிறேன்! உனக்காக என் உயிரையும் தருவேன்!
உன் பாத கமலங்களை முத்தமிடுகிறேன் தாயே!
என்று உணர்ச்சி பொங்க உள்ளம் உருகிப் பாடுகிறான். இந்த பாடல் அந்த இரயிலில் பயணித்த அனைவரையும் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. பின்னர் இந்த பாடலை முழுமையாக இயற்றி ஆனந்த மடம் நூலில் வெளியிட்டார். இதற்கு இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பு இருந்தது. மக்களின் உணர்வு பூர்வமான இந்த கோஷத்தை கண்ட கர்சான் பிரபு, “வந்தே மாதரம்’ என்ற வார்த்தையை உச்சரிக்கக் கூடாது என்று தடியடியும், துப்பாக்கிச் சூடும் நடத்தியது. இத்தகைய சுதந்திர போராட்ட தாரக மந்திரத்தை உருவாக்கிய பங்கிம் சந்திர சட்டர்ஜி இவ்வுலகை விட்டு மறைந்த தினம் வரலாற்றில் இன்று.
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…