வேலைவாய்ப்பு

சென்னை மக்களுக்கு அரிய வாய்ப்பு..! திட்ட பயிற்சியாளர் பணிக்கு ஆட்கள் தேவை..! உடனே அப்ளை பண்ணுங்க..

Published by
செந்தில்குமார்

ஐஐஐடிடிஎம் காஞ்சிபுரம், திட்ட பயிற்சியாளர் (Project Intern) பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம், காஞ்சிபுரம் (IIITDM Kancheepuram) என்பது இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் 2007 இல் நிறுவப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனமாகும். இது சென்னையின் புறநகரில் அமைந்துள்ளது.

தற்போது, ஐஐஐடிடிஎம் காஞ்சிபுரம், 1000 ஹெச்பி மோட்டாருக்கு காற்றோட்டத்தை வழங்கக்கூடிய விசிறியை வடிவமைத்து உருவாக்கும் திட்டத்தில் பணியாற்ற, திட்ட பயிற்சியாளர் (Project Intern) பணிக்கான வேலைவாய்ப்பு Notification அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அறிவிப்பை முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பதவி விவரம் மற்றும் காலியிடங்கள்:

ஐஐஐடிடிஎம்-ல் திட்ட பயிற்சியாளர் பணிக்கு 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் தாமதிக்காமல் விண்ணப்பிக்கலாம்.

IIITDM Kancheepuram [Image Source: IIITDM Kancheepuram]

கல்வித்தகுதி:

  • இறுதியாண்டு பி.டெக் படிக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அல்லது,
  • இயந்திரவியல் அல்லது உற்பத்திப் பொறியியலில் இரட்டைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது,
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் பி.டெக் அல்லது அதற்கு சமமான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரரின் வயது வரம்பு குறித்து அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ https://www.iiitdm.ac.in/ இணையதளம் அல்லது Notification அறிவிப்பை அணுகலாம்.

சம்பளம்:

திட்ட பயிற்சியாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு மாதம் ரூ.8,000 சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு முறை:

  • 1000 ஹெச்பி மோட்டாருக்கு காற்றோட்டத்தை வழங்கக்கூடிய விசிறியை வடிவமைத்து உருவாக்கும் திட்டத்தில் பணிபுரிவதற்கு, நேர்காணல் முறைப்படி விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆவணங்கள் மற்றும் சுயவிவரப்படிவத்தைக் (Resume) கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் முடிவுகள் தெரிவிக்கப்படும்.

நேர்காணல் தேதி:

  • ஆர்வமுள்ள தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஜூலை 5ம் தேதி காலை 10 மணிக்கு நேரடி நேர்காணலுக்கு வரவேண்டும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஆரம்பத்தில் ஆறு மாத காலத்திற்கு நியமிக்கப்படுவார்கள்.

நேர்காணல் இடம்:

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி, காஞ்சிபுரம்
வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில், மேலக்கோட்டையூர்,
சென்னை-600127
தொடர்பு எண்: 044-27476393 / 044-27476351
மின்னஞ்சல்: sricce@iiitdm.ac.in / ppthevan@iiitdm.ac.in

IIITDM Kancheepuram [Image Source: IIITDM Kancheepuram]
Published by
செந்தில்குமார்

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

4 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

5 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

5 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

6 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

6 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

7 hours ago