புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?
இந்த சம்பவம் தொடர்பாக உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தற்கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி, சான் ரேச்சல் கருப்பழகி பிரிவில் உலக அழகி பட்டம் வென்றவர். அவர் பேஷன் ஷோக்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இதில், ஏற்பட்ட நஷ்டம் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
நடந்தது என்ன.?
ஒரு பக்கம், அவர் பேஷன் ஷோ நிகழ்ச்சிகளை நடத்துவதில் ஏற்பட்ட நிதி நஷ்டம் தற்கொலைக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மறுபக்கம், சான் ரேச்சல் சிறுநீரக பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக காராமணிகுப்பத்தில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாகவும் எக்ஸ் பதிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இது தொடர்பாக, உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தற்கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. முழுமையான விசாரணை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.