உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி, சான் ரேச்சல் கருப்பழகி பிரிவில் உலக அழகி பட்டம் வென்றவர். அவர் பேஷன் ஷோக்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இதில், ஏற்பட்ட நஷ்டம் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. […]