ECIL Recruitment 2023 [Image Source : BankersAdda]
எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (Electronics Corporation of India Limited – ECIL) ஒரு முன்னணி பொதுத்துறை நிறுவனமாகும். ECIL நிறுவனம் ஹைதராபாத்தில் உள்ள அலுவலகத்தில் காலியாக உள்ள சிஎஸ் பயிற்சியாளர் (CS Trainee) பதவிக்கு ஆள்சேர்ப்புக்கான ECIL Recruitment 2023 அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர் வயது :
சிஎஸ் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவரின் அதிகபட்ச வயது வரம்பு 27 ஆக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் தகுதி :
சிஎஸ் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர் ஐசிஎஸ்ஐ எக்ஸிகியூட்டிவ் ப்ரோக்ராம் தேர்வில் தேர்ச்சி, எக்சிகியூட்டிவ் புரோகிராம் மற்றும் எக்ஸிகியூட்டிவ் டெவலப்மென்ட் ப்ரோக்ராம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனம்/கல்லூரி/பல்கலைக்கழகத்திலிருந்து இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.ecil.co.in சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
சிஎஸ் பயிற்சியாளர் பதவியில் சேர ஆர்வம் மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர் ஆன்லைன் விண்ணப்பங்களை ஜூன் 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
தேர்வு முறை:
ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவுசெய்து சமர்ப்பித்தபின், விண்ணப்பதாரர்கள் தகுதி அடிப்படையில் 1:10 விகிதத்தில் பட்டியலிடப்படுவார்கள்.
சம்பள விவரம் :
சிஎஸ் பயிற்சியாளர் பதவிக்காக தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.15,000 ஊதியமாக வழங்கப்படும் என்று ECIL Recruitment 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…