சமூகப்பணியில் மாஸ்டர் டிகிரி முடிச்சுடீங்களா..? 22,000 சம்பளத்தில் மூத்த ஆலோசகர் வேலை ..!

Published by
பால முருகன்

இராணிப்பேட்டை :  மாவட்ட சமுக நலத்துறையின் கீழ், வாலாஜா அரசு மருத்துவமனையில் இயங்கவிருக்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் (ONE STOP CENTRE) என்ற திட்டத்திற்கு ஒரு மூத்த ஆலோசகர் (Senior Counselor) மற்றும் 2 வழக்கு பணியாளர் (Case Worker) பணிக்கு ஆட்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு எவ்வளவு சம்பளம் எப்படி விண்ணப்பம் செய்யவேண்டும் என்ற விவரம் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

காலியிட விவரங்கள் 

பதவியின் பெயர் காலியிட விவரங்கள்
மூத்த ஆலோசகர் 1
வழக்கு பணியாளர் 2

கல்வி தகுதி 

  • விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் B.Sc , M.Sc முடித்திருக்க வேண்டும்.

மூத்த ஆலோசகர் பணிக்கு : இரண்டு வருட அனுபவம் மற்றும் வளர்ச்சி மேலாண்மை, ஆலோசனை உளவியல் அல்லது சமூகப் பணிகளில் முதுகலைப் பட்டம்

வழக்கு தொழிலாளி பணிக்கு : வளர்ச்சி மேலாண்மை, ஆலோசனை உளவியல் அல்லது சமூகப் பணி ஆகியவற்றில் இளங்கலைப் பட்டத்துடன் இணைந்த ஒரு வருட அனுபவம் வேண்டும்.

சம்பள விவரம் 

மூத்த ஆலோசகர் ரூ.22,000
வழக்கு பணியாளர் ரூ.18,000

முக்கிய நாட்கள் 

விண்ணப்பம் தொடங்கிய தேதி 09/07/2024
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி 23/07/2024

விண்ணப்பம் செய்வது எப்படி? 

  • மூத்த ஆலோசகர் (Senior Counselor) மற்றும் 2 வழக்கு பணியாளர் பணிக்கு வேலையில் சேர உங்களுக்கு விருப்பம் இருந்தது என்றால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ranipet.nic.in/ இணையதளத்திற்கு சென்று வேலைவாய்ப்பு பிரிவை க்ளிக் செய்யவேண்டும்.
  • பின் அதில் இந்த வேலை சம்பந்தமாக கொடுக்கப்பட்டு இருக்கும் அதிகாரப்பூர்வ விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவேண்டும்.
  • பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை சரியான ஆவணங்களை வைத்து விண்ணப்பம் செய்யவேண்டும்.
  • பிறகு அந்த படிவத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலம் அனுப்பவேண்டும்.

அனுப்பவேண்டிய முகவரி 

மாவட்ட சமூகநல அலுவலகம்,

4வது தளம், “C” பிளாக்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

இராணிப்பேட்டை மாவட்டம்

முக்கிய விவரம் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு க்ளிக் PDF
விண்ணப்ப படிவம் க்ளிக்
Published by
பால முருகன்

Recent Posts

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

26 minutes ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

1 hour ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

2 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

17 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

18 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

18 hours ago