வேலைவாய்ப்பு

மாதம் ரூ.1.2 லட்சம் சம்பளம்..! தேசிய சுகாதார அமைப்பு வள மையத்தில் அருமையான வேலை..!

Published by
செந்தில்குமார்

தேசிய சுகாதார அமைப்பு வள மையம் காலியாக உள்ள பணியை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தேசிய சுகாதார அமைப்பு வள மையம் (NHSRC) என்பது தேசிய ஊரக சுகாதார இயக்கத்திற்கு (NRHM) பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்த தொழில்நுட்ப உதவி மற்றும் திறன் மேம்பாட்டு ஆதரவை வழங்குவதற்காக இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு பதிவுசெய்யப்பட்ட சங்கமாகும்.

தற்பொழுது, இந்த தேசிய சுகாதார அமைப்புகள் வள மையத்தில் காலியாக உள்ள பொது சுகாதார நிர்வாக ஆலோசகர் பதவிக்கு ஒப்பந்த முறையில் பணிபுரிவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் Notification அதிகாரபூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்துவிட்டு விண்ணபிக்கலாம்.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை:

தேசிய சுகாதார அமைப்பு வள மையத்தில் பொது சுகாதார நிர்வாக ஆலோசகர் பதவிக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளது. எனவே, ஆர்வம் மற்றும் தகுதியுள்ளவர்கள் தாமதிக்காமல் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பதாரரின் வயது:

பொது சுகாதார நிர்வாக ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பிப்பவர் வயது 40 அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification அதிகாரபூர்வ அறிவிப்பை அணுகலாம்.

பணியிடம்:

இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர் புதுடெல்லியில் பணியமர்த்தப்படுவார்.

விண்ணப்பதாரரின் தகுதி:

  • விண்ணப்பதாரர் மருத்துவம் அல்லது நர்சிங்கில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • பொது சுகாதாரம், சமூக சுகாதாரம், தடுப்பு மற்றும் சமூக மருத்துவம், சுகாதாரம் அல்லது மருத்துவமனை மேலாண்மை ஆகியவற்றில் முதுகலை பட்டம் அல்லது உயர் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  • தேசிய சுகாதார பணி/ தேசிய சுகாதார திட்டங்கள்/ சுகாதார திட்டமிடல்/ சுகாதார கொள்கை மற்றும் வக்கீல்/ பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்துதல்
  • சுகாதார பராமரிப்பு மேலாண்மை ஆகியவற்றில் முதுகலை படிப்பு முடித்து குறைந்தது 2 ஆண்டுகள் பனி செய்த அனுபவம் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் பொறுப்புகள்:

  • மாநிலங்களில் அமலாக்க முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்ய அவ்வப்போது கண்காணிப்பு வருகைகளை மேற்கொள்ளுதல்.
  • அறிக்கைகளை தயாரித்து, மாநிலங்களின் பரிந்துரைகளை செயல்படுத்துவது குறித்து பின்தொடர்தல்.
  • ஆரோக்கியத்தில் பணிபுரியும் பல்வேறு பணியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கான நிரல் ஆவணங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் மற்றும் பிற திறன்-கட்டுமானப் பொருட்களை ஒருங்கிணைத்தல்.
  • சுகாதார மேலாண்மை மற்றும் தகவல் அமைப்பு, காலாண்டு முன்னேற்ற அறிக்கைகள் போன்ற பல்வேறு தரவு மூலங்கள் மூலம் ஆதாரங்களை உருவாக்குவதற்கான தரவை பகுப்பாய்வு செய்தல்.
  • தேசிய, பிராந்திய மற்றும் மாநில அளவிலான பட்டறைகள் மற்றும் குறிப்பிட்ட தொழில்நுட்பப் பகுதிகளில் மாநிலங்களை நோக்குநிலைப்படுத்துவதற்கான ஆலோசனைகளை அமைப்பதில் பிரிவை ஆதரித்தல்
ஒப்பந்த காலம்:
பொது சுகாதார நிர்வாக ஆலோசகர் பதவிக்காண ஒப்பந்த காலமானது  31 மார்ச் 2025 வரை உள்ளது. இதற்கான நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் மற்ற காலி பணியிடங்களுக்கு பரிசீலிக்கப்படலாம்.
சம்பள விவரம்:
பொது சுகாதார நிர்வாக ஆலோசகர் பதவிக்குத் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.60,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். இந்த பணி குறித்த மேலும் விவரங்களுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
  • விண்ணப்பதாரர்கள் தேசிய சுகாதார அமைப்பு வள மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://nhsrcindia.org உள்ள ஆன்லைன் விண்ணப்பத்தை திறக்க வேண்டும்.
  • விண்ணப்பப் படிவத்தில் கேட்டகப்பட்டுள்ள கல்வித் தகுதி, வயது வரம்பு என அனைத்து அத்தியாவசியத் தகுதிகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • இறுதியாக விண்ணப்பதாரர் பதிவுக் கட்டணம் செலுத்திவிட்டு, சமர்ப்பிக்கப்பட்ட படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  • பரிந்துரைக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
கடைசி தேதி:
விண்ணப்பங்களை சரியாக நிரப்பி ஆன்லைனில் பதிவு செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 13 ஆகும். இது குறித்த மேலும் தகவலுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
Published by
செந்தில்குமார்

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

11 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

11 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

12 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

13 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

13 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

13 hours ago