வேலைவாய்ப்பு

தேசிய புலனாய்வு முகாமையில் பல்வேறு வேலைவாய்ப்புகள்.! 10ஆம் வகுப்பு முதல் மருத்துவ படிப்பு வரை…

Published by
மணிகண்டன்

தேசிய புலனாய்வு முகாமையான NIA-வில் பல்வேறு பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

நாட்டிற்குள் தீவிரவாத /பயங்கரவாத செயல்பாடுகளை எதுவும் நடக்காமல் முன்கூட்டியே தடுக்க செயல்பட்டு வரும் தேசிய புலனாய்வு முகாமையானது தற்போது காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. 10 ஆம் வகுப்பு முதல் மருத்துவப்படிப்பு வரை படித்தவர்கள் வரையில் பலருக்கும் வேலை வாய்ப்புகளை NIA அறிவித்துள்ளது.

நர்சிங் அதிகாரி, மறுந்தகர், மருத்துவ பதிவாளர், கணக்காளர், துணை நிலை உதவியாளர், ரேடியோ கதிர்வீச்சு உதவியாளர் என பல்வேறு பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த வேலை வாய்ப்புகள் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் பணியமர்த்தப்படுவார்கள்.

அறிவிப்பு வெளியான தேதி : மே 25, 2023.

பதவியிடங்கள். – MTS (பல்வேறு அலுவல் பணிகள்), நர்சிங் பணி, மருந்தகர், மருத்துவ பதிவாளர், கணக்காளர், ரேடியோ கதிர்வீச்சு அலுவலர், துணை நிலை உதவியாளர் என பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

காலியிடங்கள் – மொத்தமாக 30 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்வித்தகுதி –  10, 12, B.Sc, Ph.D, M.Sc, M.D.

சம்பளம் விவரம் – மாதம் 18,000 ருபாய் முதல் அதிகபட்சமாக 1,77,500 ருபாய் வரையில் ஊதியம் அளிக்கப்படும்.

வயது வரம்பு – 25 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும் எனவும், 56 வயது வரை உள்ளவர்கள் இதில் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம்  – ராஜஸ்தான் , ஜெய்ப்பூர்.

தேர்வு செய்யப்படும் முறை : 

திரையிடல் சோதனைகள், விளக்கமான சோதனைகள் மற்றும் நேர்காணல்.

விண்ணப்பக் கட்டணம் – இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 05 ஜூலை 2023.

விண்ணப்பிக்கும் முறை : 

  • தேசிய புலனாய்வு முகமையின்அதிரபூர்வமான தளமான www.nia.gov.in -க்கு சென்று Recruitment & Training எனும் லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதனை தொடர்ந்து, Recruitment நோட்டீசை கிளிக் செய்ய வேண்டும். அதில் மேற்கண்ட பல்வேறு பணிகளுக்கான தரவுகள் இருக்கும் அதில் தேவையான குறிப்பிட்ட லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில் பெயர் , முகவரி உள்ளிட்ட அத்தியாவச தகவல்களை குறிப்பிட்டு அதற்கான உறுதியான ஆதாரங்களையும் பதிவேற்ற வேண்டும்.
  • இறுதியாக தேவை இருப்பின் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். இல்லையெனில், இறுதி நகலை பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ள வேண்டும்.
  • பின்னர் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் பயனர்களின் இணையதள முகவரி மூலம் அழைக்கப்படுவர்.
Published by
மணிகண்டன்

Recent Posts

விம்பிள்டன் 2025 : சாம்பியன் பட்டம் வென்ற ஜானிக் சின்னர்! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…

32 minutes ago

நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (14-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

1 hour ago

ஆந்திராவில் கோர விபத்து : மாம்பழ லாரி கவிழ்ந்து 9 தொழிலாளர்கள் பலி!

ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர…

1 hour ago

ஆக்சியம் 4 திட்டம்: இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 14…

2 hours ago

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கு: இன்று முதல் தரிசனத்துக்கு அனுமதி!

மதுரை : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், இன்று (ஜூலை 14) ஆம் தேதி காலை 5:25 முதல் 6:10…

2 hours ago

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

14 hours ago