லைஃப்ஸ்டைல்

பெண்களின் கவனத்திற்கு…! உங்களின் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்பட சில டிப்ஸ்..!

Published by
லீனா

பெண்கள் தங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த சில டிப்ஸ். 

பெண்களைப் பொறுத்தவரை காலையில் எழுந்தது முதல் இரவு உறங்க செல்லும் வரை தங்களது பொறுப்பு கடமை என வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருப்பார்கள். ஓய்வில்லாமல் வேலை பார்த்தாலும், குழந்தைகளை, கணவரை சரியான  என்ற ஒரு அழுத்தத்துடன் தான் ஓடிக் கொண்டிருப்பார்கள். பொதுவாக பெண்களுக்கு பல வழிகளில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் செயல்கள் நடப்பதுண்டு.

மன அழுத்தம் 

stress [Imagesource : Representative]

இந்த மன அழுத்தம் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகும் போது, அது உடல் ஆரோக்கியத்தில் சிக்கலை ஏற்படுத்தும். குறிப்பாக அவர்களின் இதய ஆரோக்கியத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம். பெரும்பாலும் மன அழுத்தம் ஏற்பட கடினமான காலக்கெடு, ஒரு பெரிய வாழ்க்கை மாற்றம், நேசிப்பவரின் இழப்பு போன்றவை பெரிய அளவில் மனா அழுத்தத்தை ஏற்படுத்தும்.

மன அழுத்தம் இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று அறியப்படுகிறது. சமீபத்திய கணக்கெடுப்பில், மும்பை மற்றும் டெல்லி போன்ற நகரங்களில், மன அழுத்தம் உள்ள பெண்களில் முறையே 76% மற்றும் 59% இதயப் பிரச்சனைகளால் பாதிக்கப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதய ஆரோக்கியம் 

heart attack [Imagesource : Representative]

கொரோனா காலகட்டத்தில் பல பெண்கள் வீட்டில் இருந்து வேலை மற்றும் வீட்டு வேலைகள் ஆகியவற்றுடன் தங்கள் வாழ்க்கையை கழித்தனர். எடுத்துக்காட்டாக, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது. அந்த சமயங்களில் குழந்தைகளின் பள்ளி விஷயங்களில் தனி கவனம் செலுத்தி, தாய்மார்கள் பள்ளித் திட்டங்களில் மும்முரமாக ஈடுபடுவது மற்றும் அவர்கள் செய்ய வேண்டிய படங்களை சரிபார்ப்பது போன்ற வேலைகளிலும் ஈடுபட வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டனர். இத்தகைய தவிர்க்க முடியாத வேலைகள் பெண்களுக்கு மன அழுத்தத்தை அதிகரித்து, பெண்கள் தங்கள் சொந்த நலனில் கவனம் செலுத்துவதை கடினமாகையாது.

மன அழுத்தத்தால் இதயம் பாதிக்கப்படும் பெண்கள் குறைந்தது எட்டு மணிநேரம் தூங்க வேண்டும். பெண்களின் நல்வாழ்வுக்கு பங்களிக்க, குறைந்தபட்சம் ஏழு முதல் எட்டு மணிநேரம் போதுமான இடையூறு இல்லாத தூக்கத்தைப் பெற அவர்களை ஊக்குவிக்க வேண்டும். விறுவிறுப்பான நடைபயிற்சி, ஜூம்பா, வலிமை பயிற்சி, தியானம் மற்றும் யோகா போன்றவற்றை செய்து 30 நிமிட வழக்கமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுங்கள்.

ஆரோக்கியமான உணவு 

food [Imagesource : Representative]

அதிகமாக தண்ணீர் பருகுங்கள் மற்றும் நன்கு சமநிலையான, ஆரோக்கியமான, சரியான நேரத்தில் உணவை உண்ணுங்கள். இந்த வழிமுறைகள் இதயப் பராமரிப்புக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. குடும்ப உறுப்பினர்கள்  நம் வாழ்வில் பெண்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்கும், வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும், இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுப்பதற்கும் நாம் ஆதரவளித்து ஊக்குவிக்க வேண்டும்.

Published by
லீனா

Recent Posts

“சொந்த வீட்டிலேயே துன்புறுத்தல்” – கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட நடிகை தனுஸ்ரீ தத்தா.!

சென்னை : தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. தனது சொந்த…

2 hours ago

ஆலப்புழா சென்ற அச்சுதானந்தன் உடல்.., இறுதி அஞ்சலிக்கு வழிநெடுக மக்கள்.!

திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் (101) கடந்த ஜூலை 21ம்…

2 hours ago

ராஜேந்திர சோழன் பிறந்தநாள் : சிறப்பு அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு, 'இராசேந்திர சோழன் உருவாக்கிய அரியலூர் சோழகங்கம்…

2 hours ago

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று பிரிட்டன் செல்கிறார்.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி இரண்டு…

3 hours ago

“தனிநபர் வருமானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாம் இடம்” – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்.!

சென்னை : தமிழ்நாடு தனிநபர் வருமானத்தில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் உள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இது…

4 hours ago

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியீடு.! சர்ப்ரைஸ் கொடுத்த ‘கருப்பு’ படக்குழு!

சென்னை : நடிகர் சூர்யா பிறந்தநாளை ஒட்டி சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ‘கருப்பு’ படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. சூர்யாவின்…

4 hours ago