ராஜேந்திர சோழன் பிறந்தநாள் : சிறப்பு அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
இராசேந்திர சோழன் உருவாக்கிய அரியலூர் சோழகங்கம் ஏரியில் நீர்வள ஆதார மேம்பாடு, சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘இராசேந்திர சோழன் உருவாக்கிய அரியலூர் சோழகங்கம் ஏரியில் நீர்வள ஆதார மேம்பாடு, சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இராசேந்திர சோழனின் பிறந்தநாளில் இந்த அறிவிப்பை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்வதாக எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் பதிவிட்டுள்ளார். அதில், ராஜேந்திர சோழனின் புகழையும், அவரது ஆட்சியில் சோழப் பேரரசு எட்டிய உச்சத்தையும் பாராட்டி, அவரது பிறந்தநாளை ஆண்டுதோறும் ஆடி திருவாதிரையில் அரசு விழாவாகக் கொண்டாட 2021-ல் திராவிட மாடல் அரசு ஆணையிட்டதாகக் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக தனது பதிவில், “அவரது தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழப் பேரரசின் வரலாற்றுச் சிறப்புகளையும் கடல் கடந்த வணிகத் தொடர்புகளையும் பறைசாற்றும் விதமாக அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்து, அதற்கும் கடந்த ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டினேன். காண்போரைக் கவர்ந்திடும் வண்ணம் அது எழுந்து வருகிறது.
இவற்றின் தொடர்ச்சியாக, இராசேந்திர சோழனின் பிறந்தநாளில், அவர் உருவாக்கிய சோழகங்கம் ஏரியில் நீர்வள ஆதார மேம்பாட்டுப் பணிகளும் – சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் எனப் பெரும்புகழ் எய்திய தமிழ் மாமன்னர் இராசேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரையை அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடிட 2021-ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தது நமது #DravidianModel அரசு!
அவரது தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழப் பேரரசின்… pic.twitter.com/hq6TAzhmmI
— M.K.Stalin (@mkstalin) July 23, 2025
லேட்டஸ்ட் செய்திகள்
INDvsENG : கருண் நாயரை தூக்கிய நிர்வாகம்! காரணம் என்ன?
July 23, 2025