சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘இராசேந்திர சோழன் உருவாக்கிய அரியலூர் சோழகங்கம் ஏரியில் நீர்வள ஆதார மேம்பாடு, சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இராசேந்திர சோழனின் பிறந்தநாளில் இந்த அறிவிப்பை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்வதாக எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் பதிவிட்டுள்ளார். அதில், ராஜேந்திர சோழனின் புகழையும், அவரது ஆட்சியில் சோழப் பேரரசு எட்டிய உச்சத்தையும் பாராட்டி, அவரது பிறந்தநாளை ஆண்டுதோறும் ஆடி திருவாதிரையில் […]