முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்போது வீடு திரும்புவார்? மு.க.அழகிரி கொடுத்த அப்டேட்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமுடன் உள்ளார் எனவும் 2, 3 நாட்களில் வீடு திரும்புவார் எனவும் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை : லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோவில் முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலை 21-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்காக இன்று காலை தேனாம்பேட்டை அப்போலோவுக்கு மாற்றப்பட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. 3-வது நாளாக மருத்துவமனையில் மருத்துவர்களுடைய கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிகிச்சை முழுவதுமாக முடிந்து எப்போது வீடு திரும்புவார் என கேள்விகள் எழும்பியிருக்கும் நிலையில், அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த மு.க.அழகிரி முதல்வரின் உடல் நிலை எப்படி இருக்கிறது அவர் எப்போது வீடு திரும்புவார் என்கிற தகவலை தெரிவித்துள்ளார். காரில் இருந்தபடியே செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது ” முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்போது நலமுடன் இருக்கிறார். அவரை பார்த்துவிட்டு தான் வருகிறேன். உடல்நலம் குணமாகி நன்றாக இருக்கிறார்” என தெரிவித்தார்.
அதன்பிறகு செய்தியாளர் ஒருவர் ” எப்போது வீடு திரும்புவார்? என கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு பதில் அளித்த மு.க. அழகிரி ” இன்னும் 2,3 நாட்களில் வீடு திரும்புவார்” எனவும் மு.க.அழகிரி தெரிவித்தார். மேலும், முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தால் கூட தொடர்ச்சியாக மருத்துவமனையில் இருந்தபடியே ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். மூன்றாவது நாளாக இன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பொதிலும் முதலமைச்சர், ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் காணொலி மூலம் மக்களுடன் கலந்துரையாடினார்.
காணொளி வாயிலாக, மக்களின் கோரிக்கைகள் மற்றும் மனுக்கள் குறித்து விவரங்களை கேட்டறிந்து, அவற்றுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். மேலும், கன்னியாகுமரி, கோவை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்களுடன் இத்திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.