சென்னை : லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோவில் முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலை 21-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்காக இன்று காலை தேனாம்பேட்டை அப்போலோவுக்கு மாற்றப்பட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. 3-வது நாளாக மருத்துவமனையில் மருத்துவர்களுடைய கண்காணிப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிகிச்சை முழுவதுமாக முடிந்து எப்போது வீடு திரும்புவார் என கேள்விகள் எழும்பியிருக்கும் நிலையில், அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த மு.க.அழகிரி […]
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை அடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் அறிவுரைப்படி, அவர் மூன்று நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், மருத்துவமனையில் இருந்தபடியே முதலமைச்சர் ஸ்டாலின், “உங்களுடன் ஸ்டாலின்” திட்டப் பணிகள் உள்ளிட்ட முக்கிய அரசு விவகாரங்கள் குறித்து தலைமைச் செயலாளருடன் ஆலோசனை நடத்தினார். மக்களிடமிருந்து பெறப்படும் […]
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை அடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தேவையான பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனை நிர்வாகத்தின் அறிக்கையின்படி, முதலமைச்சரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது, மேலும் அவர் விரைவில் முழு நலம் பெற்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அவரது உடல்நலம் கருதி, அடுத்த இரண்டு நாட்களுக்கு […]
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை அடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தற்போது மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து, அவரது உடல்நலம் கருதி, அடுத்த இரண்டு நாட்களுக்கு (ஜூலை 22 மற்றும் 23) திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் ஸ்டாலின், ஜூலை 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூர் மற்றும் […]
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், மக்களுடன் கலந்துரையாடவும், திட்டங்களைத் தொடங்கி வைக்கவும் பல்வேறு மாவட்டங்களுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்கிறார். அதன் ஒரு பகுதியாக நாளை (ஜூலை 22) மற்றும் ஜூலை 23 தேதிகளில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். நாளை காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவையில் 15 வேலம்பாளையத்தில் புதிய மருத்துவமனை […]
திருப்பூர் : மாவட்டம் அவிநாசியில் புதுமணப் பெண் ரிதன்யா (27) தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கைது செய்யப்பட்ட அவரது மாமியார் சித்ராதேவியின் ஜாமின் மனுவை திருப்பூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் 2025 ஜூலை 11 அன்று தள்ளுபடி செய்தது. ரிதன்யாவின் பெற்றோர், ஜாமின் வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர், இது நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டது. இதற்கு முன்னர், ரிதன்யாவின் கணவர் கவின்குமார் மற்றும் மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரின் ஜாமின் மனுக்களும் ஜூலை 7 […]
திருப்பூர் : மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன் 28, 2025 அன்று பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பேசுபொருளாக வெடித்துள்ளது. தற்கொலை செய்துகொள்வதற்கு முன் அவர் பேசிவிட்டு சென்ற அந்த ஆடியோ இன்னும் தீராத ஒரு சோகமான விஷயமாக இருந்து வருகிறது. மேலும், இந்த சம்பவம் வரதட்சணை கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வை மீண்டும் வலியுறுத்தியது. ரிதன்யாவின் […]
பெங்களூர்: பெங்களூரின் எம். சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துமாறு பெங்களூர் மின்சார விநியோக நிறுவனம் (BESCOM) கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு (KSCA) முன்னர் உத்தரவிட்டிருந்தது. இதற்காக கால அவகாசமும் வழங்கப்பட்டது. ஆனால், ரசிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படாததால், 2025 ஜூலை 1 அன்று மைதானத்திற்கு மின்சார விநியோகம் திடீரென துண்டிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை, 2025 ஜூன் 4 அன்று மைதானத்தில் நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் […]
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த நிலையில், திருப்பூர் குமாரானந்தபுரம் காமராஜர் வீதியில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதல் திடீரென நடந்ததாகவும், முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலையின் முழு பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், காவல் துறையினர் மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். […]
திருப்பூர் : பல்லடம் நால்ரோடு சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து லாரியின் அதிக வேகம் அல்லது ஓட்டுநரின் அஜாக்கிரதையால் ஏற்பட்டிருக்கலாம் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், சாலையோரமாக நின்று கொண்டிருந்த பெண்கள் மீது கண்டைனர் லாரி விழுந்ததில் கண்டனர் லாரிக்கு அடியில் சிக்கி உள்ள பெண்களைமீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. விபத்து நிகழ்ந்தவுடன், உள்ளூர் காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, லாரியின் […]
பெங்களூர் : பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் ஐபிஎல் 2025 வெற்றி விழாவில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில், திருப்பூரை சேர்ந்த 25 வயது காமாட்சி உயிரிழந்தார். இந்த துயரத்தில் 11 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 18 ஆண்டு காத்திருப்புக்குப் பிறகு ஆர்சிபி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற மகிழ்ச்சியைக் கொண்டாட லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடியதால் இந்த அவலம் நிகழ்ந்தது. இந்த […]
திருப்பூர் : ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த பெண் கணவர் மற்றும் குழந்தையுடன் வேலை தேடி தமிழகத்திற்கு வந்துள்ளார். அங்கு வேலை கிடைக்காததால், அவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடிவு செய்து, திருப்பூர் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, பீகாரைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள்—முகமது நதீம் (24), முகமது டேனிஷ் (25), மற்றும் முகமது முர்ஷித் (19)—அவர்களை சந்தித்து, வேலை வாய்ப்பு […]
கோவை : அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்றைய தினம் புயலாக வலுப்பெற்று நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி- கல்லூரிகளுக்கு (23-10-2024) இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் கோவை, திருப்பூரில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் […]
திருப்பூர் : காங்கேயம் அடுத்த எல்லப்பாளையம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி சாமி. இவரது மகள் அம்பிகாவின் கணவர் ராஜ்குமாருக்கும் இவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இது கைகலப்பு வரை சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கம்போல் பழனிசாமி மாடு மேய்ப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது அங்குச் சென்ற ராஜ்குமார், அவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு திடீரென கையில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து பழனிசாமியைச் சரமாரியாகச் சுட்டுள்ளார். சுமார் 5 முறை துப்பாக்கி குண்டுகள் பழனிசாமியின் […]
சென்னை : விஜய் வந்தால், எங்க கூட்டணி மாமன் மச்சான் கூட்டணி தான், பங்காளி கூட்டணி வேணாம் என்று அண்ணாமலை கூறிஉள்ளார். தி.மு.க அரசு சார்பில் நடத்தப்பட்ட கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவில், பா.ஜ.க தலைவர்கள் கலந்துகொண்டது, தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது. அது குறித்து அதிமுக பொதுச்செயலார் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். இது தொடர்பாக, தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, திருப்பூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர், […]
திருப்பூர் : நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். 2026ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடும் என்றும் அறிவித்தனர். அதற்கான வேலைகளை கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் கழக நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்று திருப்பூர் முத்தன்னம்பாளையத்தில் தமிழக வெற்றிக் கழகம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் தோழர்கள்,தோழிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து […]
Tiruppur : திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை அருகே 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் 9 பேர் போக்சோ வழக்கில் கைது. திருப்பூர் மாவட்டத்தில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் 9 பேர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அந்த சிறுமி கருவுற்று 4 மாதங்கள் கடந்த பிறகே உறவினர்களுக்கு தெரிய வந்த நிலையில் காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். […]
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்-ஐ அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக எம்.பி ஆ.ராசாவைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். அப்போது, ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் 30 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி அதிமுக தான். இந்த 30 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தான் தமிழ்நாடு […]
அண்ணாமலையின் யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக பிப்ரவரி 18ஆம் தேதி தமிழகத்திற்கு வரும் மோடி, பாஜக பொதுக் கூட்டத்தில் உரையாற்ற இருக்கிறார். சமீபத்தில், கேலோ இந்தியா தொடக்க விழாவிற்காக அவர் சென்னை வந்திருந்தார். பின்னர் திருச்சி, ராமேஸ்வரம் ஆகிய இடங்களும் சென்றார். ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு, இங்குள்ள கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு, அதன் பின் 3நாள் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார். இந்த நிலையில், மீண்டும் பிரதமர் தமிழகம் வருகைக்கான ஏற்பாடுகள் […]
வழக்கத்துக்கு மாறாக ஜனவரியில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றும், நாளையும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை. விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 7-ல் கடலூர், விழுப்புரம், புதுச்சேரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் […]