லைஃப்ஸ்டைல்

Brawn Pickle : இறால் மீனில் ஊறுகாய் செய்யலாமா..? வாங்க எப்படினு பார்ப்போம்..!

Published by
லீனா

நம் அனைவருக்கும் மீன், நண்டு, கனவா, இறால் போன்ற மீன்களை வைத்து செய்யக்கூடிய உணவுகள் அனைத்தையும் பிடிக்கும். அந்த வகையில் இந்த கடல் உணவுகள் பல விதமான சுவையில் செய்யப்படுகிறது. அந்த வகையில், இறாலை வைத்து ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

நாம் அனைவருமே பல வகையான ஊறுகாய்களை சாப்பிட்டிருப்போம். ஊறுகாயில் பல வகைகள் உள்ளது. எலுமிச்சை, மாங்காய், பூண்டு, மிளகாய் என பல வகை உண்டு. அந்த வகையில், இறால் ஊறுகாய் செய்வது எப்படி என்பதையும் பார்ப்போம்.

தேவையானவை 

  • இறால் – 1 கப்
  • புளி -1/2 கப்
  • உப்பு – 1/2 கப்
  • மிளகு – 1 தேக்கரண்டி
  • வெங்காயம் – 1
  • பூண்டு – 4 பல்
  • கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி – 1 கப்
  • எண்ணெய் – தேவையான அளவு

Brawn Pickle செய்முறை : 

 

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கிலோ இறாலை சுத்தம் செய்து எடுத்து, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள், உப்பு ஆகியவற்றை போட்டு கலந்து அரை மணி நேரம் காற்றில் காய வைக்க வேண்டும். பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் இறாலை போட்டு பொரித்தெடுக்க வேண்டும்.

பின் ஒருகடாயில் கடுகு, உளுந்து, வெந்தயம் இரண்டையும் லேசாக வறுத்து அதை மிக்சியில் போட்டு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் இறால் பொறித்த எண்ணெயில், மேலும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, வரமிளகாய் , அரைத்து வைத்துள்ள கடுகு, வெந்தயம், சிறிதாக வெட்டிய இஞ்சி பூண்டு ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கி கொள்ள வேண்டும்.

அது சற்று வதங்கிய பின் அதில் பொரித்த இறாலை போட்டு, வினிகர் 3 டேபிள் ஸ்பூன் வினிகர் ஊற்றி லெமன் சால்ட் அரை ஸ்பூன், சாதாரண உப்பு 1 ஸ்பூன், கடைசியாக மிளகாய் தூள் 10 கிராம் தூவி கிளறி இறக்கி கொள்ள வேண்டும். இப்பொது சுவையான இறால் ஊறுகாய் தயார்.

இந்த இறால் ஊறுகாயை, சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றுடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இந்த ஊறுகாயை கைபடாமல் வைத்திருந்து 3 மாதங்கள் வரை பாட்டிலில் அடைத்து வைத்து சாப்பிடலாம்.

Published by
லீனா

Recent Posts

தேனாம்பேட்டை சென்று மீண்டும் கிரீம்ஸ் ரோடு அப்போலோவுக்கு முதலமைச்சர் மாற்றம்.! காரணம் என்ன.?

சென்னை : லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோவில் முதல்வர் ஸ்டாலின் நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில்,…

2 hours ago

முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் மறைவு.., கேரளாவில் இன்று பொது விடுமுறை.!

திருவனந்தபுரம்: கேரளாவின் முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI(M)) மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் நேற்று (ஜூலை 21) திருவனந்தபுரத்தில்…

2 hours ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழை வெளுக்கும் – வானிலை மையம்.!

சென்னை : தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய…

3 hours ago

விஜய் – சீமானுக்கு அதிமுக கூட்டணிக்கு நேரடி அழைப்பு விடுத்தார் இபிஎஸ்.!

சென்னை : வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆளும் திமுகவை எதிர்க்கும் அனைத்து கட்சிகளையும் கூட்டணிக்கு அழைத்தார். இதில்,…

3 hours ago

அவதார் 3வது பாகம் ‘ Avatar: Fire and Ash’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு.!

அமெரிக்கா : உலக சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி, உலக அளவில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதல்…

4 hours ago

முதல்வர் ஸ்டாலினின் உடல் நிலை குறித்து உதயநிதி கொடுத்த அப்டேட்.!

சென்னை : சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் லேசான தலைச்சுற்றல் காரணமாக பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின்,…

4 hours ago