தேனாம்பேட்டை சென்று மீண்டும் கிரீம்ஸ் ரோடு அப்போலோவுக்கு முதலமைச்சர் மாற்றம்.! காரணம் என்ன.?
தேனாம்பேட்டை மருத்துவமனையில் பரிசோதனை முடிந்த நிலையில், கிரீம்ஸ் ரோடு அப்போலோவுக்கு மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.

சென்னை : லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோவில் முதல்வர் ஸ்டாலின் நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக இன்று காலை தேனாம்பேட்டை அப்போலோவுக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், பரிசோதனை முடிந்து மீண்டும் கிரீம்ஸ் சாலை அப்போலோவிற்கு ஸ்டாலின் திரும்புவார் என்று தகவல் வெளியானது. அதன்படி, இன்று காலை சில பரிசோதனைகளுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேனாம்பேட்டை அப்போலோவிற்கு சென்று தற்போது மீண்டும் கிரீம்ஸ் ரோடு திரும்பியுள்ளார்.
முன்னதாக, முதல்வருக்கு ஒய்வு தேவை என்றும், மருத்துவமனையில் இருந்தே தனது பணிகளைத் தொடர்வார் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 2-3 மாதங்களாக கட்சி மீட்டிங், ரோடு ஷோ ஆகியவற்றில் தொடர்ச்சியாக பங்கேற்றதால் உடலில் கொஞ்சம் அசௌகரியம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் எனவும் உதயநிதியும் தகவல் தெரிவித்திருந்தார்.