”2026 தேர்தலில் விஜய் தலைமையில் வெற்றியைப் பெற்று புதிய வரலாறு படைக்கும்” – தமிழக வெற்றிக் கழகம்.!!

2026 தேர்தலில் தலைவர் விஜய் தலைமையில் தவெக வெற்றி பெறும் என்று தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.

TVK Vijay

சென்னை : விஜய் தலைமையில் 2026 தேர்தலில் தவெக மிகப்பெரிய வெற்றியை பெற்று புதிய வரலாறு படைக்கும் என அக்கட்சி தெரிவித்துள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க விஜய், சீமானுக்கு இபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். ஒத்த கருத்துடைய கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் என்பது விஜய்க்கும் பொருந்தும் என இபிஎஸ் கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த அழைப்பை நிராகரிக்கும் வகையில் தவெக பதில் அளித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட பதிவில், ”மாற்றத்தை விரும்பும் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர், வெற்றித் தலைவர் விஜய் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம், மிகப் பெரிய வெற்றியைப் பெற்று, புதிய வரலாறு படைக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அதிமுக கூட்டணிக்கு தவெக வர வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பிற்கு, தவெக கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளர் அருண்ராஜ் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்கம் கொடுத்தார்.

அருண்ராஜ் கூறியதாவது, ”எங்களுடைய முதல்வர் வேட்பாளர் எங்கள் தலைவர் விஜய்தான் என்பதைச் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டோம். எங்கள் கூட்டணியில் யாரைச் சேர்பது, தவிர்ப்பது என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம். டிசம்பருக்கு பிறகுதான் அதுகுறித்து முடிவு எடுப்போம்” என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்