#HBDSuriya : “கருப்பன் வரான் வழி மறிக்காதே”..அப்டேட் கொடுத்த ஆர்ஜே பாலாஜி!
கருப்பு திரைப்படத்தின் டீசர் வரும் 23-ஆம் தேதி நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

சென்னை : தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கன் என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கும் சூர்யா நாளை தன்னுடைய 50-வது பிறந்த நாளைகொண்டாடவிருக்கிறார் . எனவே, ரசிகர்கள் இப்போவே அவருடைய பிறந்த நாளை கொண்டாட தொடங்கிவிட்டார்கள். சமூக வலைத்தளங்களில் Happy Birthday Suriya என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து சூர்யாவை பிடித்த காரணங்களை கூறி தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அவர் கமிட் ஆகியிருக்கும் படங்களின் அப்டேட்டுகளும் வெளியாக தொடங்கியுள்ளது. ஏற்கனவே, சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு காமன் டிபி ஒன்றை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டு இருந்தார். அதனைத்தொடர்ந்து அவர் அடுத்ததாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்து வரும் கருப்பா படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அது மட்டுமின்றி நாளை படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருப்பா படத்திலிருந்து இதுவரை சூர்யாவின் லுக் எந்த மாதிரி இருக்க போகிறது என்கிற எதிர்பார்ப்புகள் உச்சத்தில் இருந்தது என்றே சொல்லலாம். ஆனால், படக்குழு அவருடைய லுக்கை வெளியே காட்டாமல் மிகவும் சர்ப்ரைஸாக வைத்திருந்தது. நாளை சூர்யாவின் பிறந்த நாள் என்பதால் இந்த நல்ல நாளில் லுக்கின் புகைப்படத்தை வெளியிட திட்டமிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த படத்தின் லுக்கை பொறுத்தவரையில் படம் முழுக்க சூர்யா ஒரு கிராமத்து மனிதர் போல வருவார் என தெரிகிறது. கருப்பு நிற வேட்டி சட்டையில் அவர் இருப்பதையும் பின்புறம் கருப்பசாமி வேடங்கள் அணிந்தவர்கள் நிற்பதை வைத்து பார்க்கையில் படம் சாமி படம் கொண்ட ஒரு நல்ல கமர்ஷியல் கிராமத்து படமாக இருக்கும் என தெரிகிறது. அதே போல நாளை படத்தின் டீசர் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
See you tomorrow!#கருப்பு #Karuppu @trishtrashers @dop_gkvishnu #VikramMor @kalaivananoffl #ArunVenjaramoodu @SaiAbhyankkar @RJ_Balaji @prabhu_sr @KaruppuMovie @DreamWarriorpic pic.twitter.com/669hC0rFN4
— Suriya Sivakumar (@Suriya_offl) July 22, 2025