முதல்வர் ஸ்டாலினின் உடல் நிலை குறித்து உதயநிதி கொடுத்த அப்டேட்.!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் உள்ளார். அடுத்த இரு நாட்களுக்கு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.

சென்னை : சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் லேசான தலைச்சுற்றல் காரணமாக பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின், மருத்துவமனையில் இருந்தே தனது பணிகளைத் தொடர்வார் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவரது உடல்நலம் கருதி இன்றும் நாளையும் (ஜூலை 22 மற்றும் 23) திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நலமுடன் உள்ளார் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 2-3 மாதங்களாக கட்சி மீட்டிங், ரோடு ஷோ ஆகியவற்றில் தொடர்ச்சியாக பங்கேற்றதால் உடலில் கொஞ்சம் அசௌகரியம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் எனவும் உதயநிதி தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர், 2 நாள்கள் ஸ்டாலின் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பதாகவும், துர்கா ஸ்டாலினின் புத்தக வெளியீட்டு விழாவை நேரலையில் அவர் பார்த்ததாகவும் கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் ஆதார் விவரங்களை வாங்கவில்லை” – மதுரைக்கிளையில் திமுக முறையீடு.!
July 22, 2025
மசோதாக்களுக்கு காலக்கெடு: குடியரசுத் தலைவர் வழக்கில் அனைத்து மாநிலங்களுக்கு நோட்டீஸ் – உச்சநீதிமன்றம் உத்தரவு.!
July 22, 2025