சென்னை :திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்புக்கு மக்களிடம் OTP பெறுவதற்கு ஐகோர்ட் மதுரை கிளை தடை விதித்துள்ளது. சட்டவிரோதமாக ஆதார் விவரங்களை சேகரிப்பதை தடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், ஓரணியில் தமிழ்நாடு மூலம் உறுப்பினர் சேர்க்கையை நடத்தலாம்.
ஆனால், OTP கேட்கக்கூடாது என உத்தரவிட்டு, டிஜிட்டல் முறையில் தனிநபர் தரவுகள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன என்பது குறித்து திமுக அரசு நேற்றைய தினம் விளக்கமளிக்கமாறு அறிவுறுத்தியது. இந்த நிலையில், இன்றைய தினம் அந்த குற்றச்சாட்டுகளை திமுக தரப்பு மறுத்து, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன் முறையீடு செய்துள்ளார்.
இது தொடர்பாக, சிவகங்கையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், ஆதார் விவரங்களை சட்டவிரோதமாக சேகரிப்பது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது எனக் கூறி, திமுக மீது நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் திமுக தரப்பு, ”உறுப்பினர் சேர்க்கை சம்மதம் பெறவே, செல்போன் எண் கேட்டு OTP பெறப்பட்டது. வேறு எந்த ஆவணமும் வாங்கவில்லை” எனவும் வாதிட்டுள்ளது. மனுவாக தாக்கல் செய்தால், நாளைக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
