Dark circles : கருவளையம் உங்கள் அழகை கெடுக்கிறதா..? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்..!

Dark circle

இன்று பெரும்பாலானோர் சரும அழகை கருவளையம் கெடுக்கிறது. கருவளையம்  என்பது கண்களின் கீழ் காணப்படும் கருப்பு நிறத் தோல் பகுதியாகும். இந்த பிரச்னை தூக்கமின்மை, அதிகப்படியான வேலைப்பளு, ஹார்மோன் மாற்றங்கள், ஒவ்வாமை போன்ற பிரச்னைகளால் ஏற்படுகிறது.

கருவளையம் (Dark circles) ஏற்படக் காரணம் 

கருவளையம் இரவு முழுவதும் தூங்காவிட்டால், கண்களின் கீழ் உள்ள தோல் தளர்வடைந்து, கருப்பு நிறமாக மாறுகிறது. அதிகப்படியான வேலைப்பளு, மன அழுத்தம் போன்றவை கண்களின் கீழ் உள்ள தோலில் இரத்த ஓட்டத்தைக் குறைப்பதாலும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

கர்ப்பம், மாதவிடாய், மாதவிடாய் நிறுத்தம் போன்ற காலங்களில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். இதன் காரணமாகவும் கருவளையம் ஏற்படக்கூடும்.  சில மருந்துகள் பயன்படுத்துவதாலும் கருவளையம் ஏற்படுகிறது. கருவளையம் ஏற்படுவதற்கான காரணத்தைப் பொறுத்து, அதை குணப்படுத்த பல்வேறு சிகிச்சைகள் உள்ளன.

இதையும் படியுங்கள் : இனிமே கருப்பா இருக்கேன்னு கவலைப்படாதீங்க..! இந்த இரண்டு பொருள் போதும்..! சூப்பர் டிப்ஸ் இதோ ..!

கருவளையத்தைக் குறைக்க சில டிப்ஸ் 

கருவளையம் பிரச்சனை உள்ளவர்கள், இந்த பிரச்னையில் இருந்து விடுபட, கண்களுக்கு தேவையான தூக்கத்தை கொடுங்கள். மன அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் உங்களது மன அழுத்தத்தை குறைக்க முயற்சி செய்யுங்கள். சத்தான உணவு சாப்பிடுங்கள். தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை அதிகமாக்குகள். புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால், அதை தவிர்த்து விடுங்கள்.

மேலும் , அதிகமாக மொபைல், லேப்டாப், டிவி போன்றவற்றை பார்ப்பதை தவிர்த்து விடுங்கள். கருவளையம் என்பது ஒரு பொதுவான பிரச்சினை தான். இதனை சரி செய்ய  மேற்கண்ட சில வழிமுறைகளை கடைபிடித்து வந்தாலே சரியாகிவிடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்