Kitchen tips : இல்லத்தரசிகளே..! உங்கள் சமையலறையில் இனிமேல் இந்த தவறுகளை செய்யாதீர்கள்..!

kitchen

இல்லத்தரசிகள் தங்களது பெரும்பாலான நேரத்தை செலவிடும் ஒரு இடம் என்றால் அது சமையலறையாக தான் இருக்க முடியும். ஒருநாளில் பெரும்பாலான நேரத்தை அங்கு தான் செலவிடுகின்றனர். இந்த சமையலறையில், தனது குடும்பத்திற்கு தேவையான பிடித்தமான உணவுகளை செய்து கொடுக்கின்றனர்.

ஆனால், பெண்கள் இன்னும் தங்களை அறியாமலேயே பல்வேறு தவறுகளை செய்கின்றனர். தற்போது இந்த பதிவில், பெண்கள் தங்களை அறியாமலேயே என்னென்ன தவறுகள் செய்கிறார்கள் என்றும், அவற்றை எவ்வாறு திருத்திக் கொள்வது என்பது பற்றியும் பார்ப்போம்.

இதையும் படியுங்கள் : உங்க வீட்ல முருங்கைக்காய் இருக்கா..? அப்ப இந்த ரெசிபியை செய்து பாருங்க..!

இல்லத்தரசிகளுக்கான Kitchen tips : 

பொதுவாக பல பெண்களுக்கு அடுப்பில் உணவை வேகவைக்கும் போது அடிக்கடி கிளறிவிடும் பழக்கம் இருப்பதுண்டு. இந்த பழக்கத்தை தவிர்ப்பது நல்லது. இவ்வாறு அடிக்கடி கிளறி விடுவதால், நாம் செய்யும் உணவுகள் உடைந்து போக வாய்ப்புள்ளது. எடுத்துக்காட்டாக, மீன்கள், வடைகள், maggie போன்ற உணவுகள் அடிக்கடி கிடுவதால் இவ்வாறு உடைய வாய்ப்புள்ளது.

பொதுவாகவே கீரைகள் மற்றும் காய்கறிகளை அதிக நேரம் சமைக்க கூடாது. அவற்றை முழுமையாக வைக்காமல், பாதி நிலையில் அவனது சாப்பிடுவது உடலுக்கு நல்லது. அதேபோல் தானியவகைக்களை அவிக்கும் போது, முதல் நாள் இரவே ஊற வைத்து வைத்தால், சீக்கிரமாக வெந்துவிடும்.

நீங்கள் வேலைக்குச் செல்வதற்கு முன் அல்லது வேறு ஏதேனும் வேலைகளுக்குச் செல்வதற்கு முன், உங்கள் உணவை முன்கூட்டியே தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதனால், நீங்கள் வீட்டிற்கு வந்ததும் உடனடியாக சாப்பிடலாம்.

அதேபோல் சமையலறையில் பயன்படுத்தக் கூடிய கத்தி, காய்கறி துருவி போன்ற கருவிகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். அதேசமயம் உங்கள் கருவிகளை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம், அவை நீண்ட காலம் நீடிக்கும்.

சமையலறையில் நாம் நீண்ட காலமாக சமையல் செய்தாலும், சில புதிய தகவல்களை தெரிவித்து வைத்திருப்பது இல்லத்தரசிகளின் சமையலறை பயன்பாட்டிற்கு மிகவும் நல்லது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்