லைஃப்ஸ்டைல்

Apple : உங்கள் குழந்தை பழங்கள் சாப்பிட மறுக்கிறார்களா..? அப்ப இப்படி ஆப்பிள் கீர் செய்து கொடுங்க..!

Published by
லீனா

குழந்தைகளுக்கு 6 மாதம் முதலே துணை உணவுகள் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தாலும், குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில், பழங்கள், காய்கறிகள், புரத சத்துக்கள் நிறைந்த உணவுகளை கொடுக்கலாம்.

அந்த வகையில், குழந்தைகளுக்கு கொடுக்க மிகசிறந்த பழம் ஆப்பிள். ஆப்பிள் சுவையாக இருப்பதுடன், உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. ஆப்பிளில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது.

ஆப்பிளை குழந்தைகளுக்கு கொடுக்கும் போது, அது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. இதில் உள்ள நார்சத்து செரிமான பிரச்னைகளை போக்கி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. குறிப்பாக ஆப்பிளில் உள்ள கார்போஹைட்ரேட் குழந்தைகளுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.

 6 முதல் ஒரு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பெரும்பாலும் ஆப்பிளை கழுவி அதனை சாறு பிழிந்து கொடுக்கலாம் அல்லது ஆப்பிளை அவித்து அதனை குழந்தைகளுக்கு ஊட்டி விடலாம். ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு துண்டுகளாக வெட்டி கொடுக்கலாம்.

அதேபோல் ஆப்பிளை வேறு பழங்கள் காய்கறிகளுடன் சேர்த்து சாலட் செய்து கொடுக்கலாம்.  இந்த பதிவில்  குழந்தைகளுக்கு கொடுக்க கூடிய வகையில் ஆப்பிள் கீர் செய்வது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள் 

  • பால் – அரை லிட்டர்
  • ஆப்பிள் – ஒன்று
  • சர்க்கரை – 5 டேபிள்ஸ்பூன்
  • முந்திரி –  பத்து
  • ஏலக்காய் 2
  • நெய் – 2 ஸ்பூன்

செய்முறை 

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். ஆப்பிளை தோல் நீக்கி, துருவி வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி தண்ணீர் விடாமல் கெட்டியாக காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி அடுப்பில் இருந்து பாலை இறக்கி விட வேண்டும்.

பின்பு கடாயில் நெய் விட்டு முந்திரி மற்றும் ஏலக்காயை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதே கடாயில் நெய்யை விட்டு துருவிய ஆப்பிளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். ஆப்பிளில் உள்ள நீர் வற்றி நன்கு சுருண்டு வந்த பின், ஆப்பிள் மற்றும் ஆறிய பாலுடன் கலந்து,  பின் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் ஏலக்காயை தூவி பரிமாறலாம்.

இதனை குளிர்சாதன பெட்டியில் வைத்து சாப்பிடலாம். இதனை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்றால் குளிர்சாதன பெட்டியில் வைக்காமல் கொடுக்க வேண்டும். ஆப்பிள் சாப்பிடாத குழந்தைகளுக்கு இவ்வாறு கொடுக்கும்போது அவர்கள் இதனை விரும்பி சாப்பிடுவார்கள்.

Published by
லீனா
Tags: Applejuice

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

3 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

4 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

4 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

5 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

5 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

6 hours ago