nose white heads
Whiteheads-மூக்கில் உள்ள வெள்ளை அரும்புகள் மற்றும் கருப்பு அரும்புகளை நீக்க எளிமையான வீட்டுக்குறிப்புகளை காணலாம்.
சுடு தண்ணீரில் ஒரு துணியை நனைத்து மூக்கின் மீது ஒத்தடம் கொடுக்கவும், இவ்வாறு செய்யும்போது மூக்கில் உள்ள சிறு துளைகள் திறக்கப்பட்டு இறந்த செல்கள் வெளியேறி நாம் பயன்படுத்தும் குறிப்புகள் நன்கு வேலை செய்யும்.
தேங்காய் எண்ணெயுடன், அரிசி மாவு கலந்து மூக்கில் மசாஜ் செய்யவும். கீழ் உதட்டின் கீழ்பகுதியிலும் ஒரு சிலருக்கு வெள்ளை அரும்புகள் இருக்கும், அங்கும் தடவி மசாஜ் செய்து கொள்ளவும் .சிறிது நேரம் கழித்து அதை கழுவி விட்டு, ஒரு துணியால் துடைத்து எடுத்தால் வெள்ளை அரும்புகள் வெளியேறிவிடும்
தேங்காய் எண்ணெயில் வேப்பிலையை சேர்த்து காய்ச்சி ஆற வைத்து அந்த எண்ணெயை மூக்கில் போட்டு வந்தால் நாளடைவில் வெள்ளை அரும்புகள், கருப்பு அரும்புகள் குறையும்.
தினமும் குளித்து முடித்த பிறகு ஒரு துணியால் மூக்கு பகுதியை சுத்தம் செய்தால் இதுபோல் வராது.
மூக்கின் தோல் பகுதியில் சிறு சிறு துளிகள் உண்டாகி அதை சுத்தம் செய்யாவிட்டால் அதிலிருந்து வெள்ளை அரும்புகள் தோன்றும். அது நாளடைவில் மாறி கரும்புள்ளிகளாகி முக அழகையே கெடுத்து விடும்.
ஆரஞ்சு தோல் பவுடர் மற்றும் முல்தானி மெட்டி, ரோஸ் வாட்டர் ஆகியவற்றை சேர்த்து அடிக்கடி தடவி வர இவ்வாறு ஏற்படுவதை தடுக்கலாம்.
அரை கப் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை மற்றும் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்க வைத்து கெட்டி பதத்திற்கு வந்ததும் இறக்கி, ஆற வைத்து வெதுவெதுப்பாக இருக்கும் போது மூக்கில் தடவி ஒரு சிறிய காட்டன் துணியை அதன் மீது ஒட்டி விடவும்.
பிறகு ஐந்து நிமிடம் கழித்து எடுத்தால் கரும்புள்ளிகள் மற்றும் அழுக்குகள் நீங்கிவிடும், இந்த முறையை வாரத்தில் இரண்டு நாட்கள் செய்யலாம்.
ஆகவே மூக்கின் வெள்ளை அரும்புகள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்க இந்த எளிய வீட்டு குறிப்புகளை பயன்படுத்தி பயன்பெறுங்கள்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…