லைஃப்ஸ்டைல்

Halwa : வாயில் போட்டவுடன் கரையக்கூடிய பேரீச்சம் பழ அல்வா செய்வது எப்படி..?

Published by
லீனா

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பேரீச்சம் பழத்தை அப்படியே சாப்பிடுவதுண்டு. பேரீச்சம் பழத்தை பொறுத்தவரையில், அதில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. இந்த பழத்தில், கால்சியம், இரும்பு, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம், வைட்டமின்கள் ஏ, சி, கே மற்றும் பி போன்ற சத்துக்கள் உள்ளது.

பேரீச்சம் பழத்தில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது, இது உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது. அதே போல் இதில் உள்ள நார்சத்து மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. தற்போது இந்த பதிவில், பேரீச்சம் பழத்தை வைத்து அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை 

  • பேரீச்சம் பழம் – 2 கப் (கொட்டையில்லாதது)
  • நெய் – 3 ஸ்பூன்
  • ஸ்பூன் பாதாம் – 5
  • முந்திரி – 5
  • சோள மாவு – 2 ஸ்பூன்
  • நாட்டுச்சக்கரை – 4 ஸ்பூன்
  • ஏலக்காய் தூள் – சிறிதளவு

Halwa செய்முறை 

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் ஒரு பவுலில் இரண்டு கப் கொட்டை இல்லாத பேரிச்சம் பழத்தை எடுத்து அதனுள் ஒன்றரை கப் வெந்நீரை ஊற்றி 15 நிமிடம் ஊற விட வேண்டும். அதன் பின் ஒரு மிக்ஸியில் தண்ணீரை வடித்து விட்டு பேரிச்சம் பழத்தை உள்ளே போட்டு சிறிது சிறிதாக வடித்து எடுத்த தண்ணீரை ஊற்றி மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின் ஒரு கடாயில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி அதில் பாதாம் மற்றும் முந்திரி இரண்டையும் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி அதில் அரைத்து வைத்துள்ள பேரிச்சம்பழக் கலவையை உள்ளே ஊற்ற வேண்டும். அதனுடன் நாட்டு சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் பொரித்து வைத்துள்ள முந்திரி பாதாம் ஆகியவற்றை போட்டு நன்கு கிளற வேண்டும்.

இதற்கு இடையில் ஒரு பவுலில் சோளமாவு இரண்டு ஸ்பூன் போட்டு அதில் தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக இந்த சோள மாவு கலவையை அதில் ஊற்றி பாத்திரத்தில் ஒட்டாத அளவுக்கு வரும் வரை கெட்டியாக கிளறி எடுத்து, நெய் தடவிய ஒரு பாத்திரத்தில் அதனை ஊற்றி வைத்து சில மணி நேரங்களுக்கு பின்பு எடுத்து வெட்டி பரிமாறலாம்.

நாம் கடைகளில் விலை கொடுத்து அல்வா வாங்குவதற்கு பதிலாக வீட்டிலேயே இப்படிப்பட்ட சத்தான அல்வாவை செய்து சாப்பிடலாம். இந்த அல்வா உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உடல் மெலிந்த நிலையில் உள்ளவர்கள் இந்த அல்வாவை சாப்பிட்டு வந்தால் விரைவில் பருமன் ஆவார்கள்.

Published by
லீனா

Recent Posts

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

12 minutes ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

1 hour ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

2 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

10 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

10 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

12 hours ago