ஒரு ஸ்பூன் சியா விதையில் ஓராயிரம் நன்மைகளா?

Published by
K Palaniammal

Chia seed-சியா விதைகளின் நன்மைகள் மற்றும் சாப்பிடும் முறை பற்றி இப்பதிவில் காணலாம்.

சியா விதைகள் சால்வியா என்னும் தாவரத்தின் விதையாகும். இந்த விதை புதினா குடும்பத்தைச் சார்ந்தது .பழங்காலத்தில் அரசர்களும் வீரர்களும் போருக்குச் செல்லும் போது இந்த விதைகளை எடுத்துக்கொண்டு செல்வார்கள்  என பல வரலாற்று பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த விதைகளில் ஒரு நாளைக்கு தேவையான ஆற்றல் கிடைத்து விடுகிறது.

சியா விதையில் உள்ள சத்துக்கள்:

சியா விதையில் நார்ச்சத்து, புரதச்சத்து, ஒமேகா 3 பேட்டி ஆசிட் போன்ற 24 அமினோ அமிலங்கள் உள்ளது, மேலும் மல்டி விட்டமின்ஸ், ஆன்ட்டி ஆக்சிடென்ட் ,மைக்ரோ சத்துக்கள், துத்தநாகம் ,அயன், பொட்டாசியம் போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளது.

சியா விதையின் நன்மைகள்:

சியா விதையில் கலோரிகள் குறைவாகவும், ஊட்டச்சத்து அதிகமாகவும் உள்ளதால் உடல் எடை குறைப்பிற்கு உதவியாக இருக்கும். மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் ஒரு ஸ்பூன் எடுத்துக் கொண்டாலே வயிறு நிரம்பிய உணர்வை கொடுத்து விடும். இதனால் பசி அடிக்கடி ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

இதில் உள்ள ஒமேகா 3 அமிலங்கள் உடலில் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது. குறிப்பாக சால்மன் வகை மீன்களை விட சியா விதையில் ஒமேகா 3 அதிகம் உள்ளது.

2 ஸ்பூன் விதையில் ஒருநாளைக்கு நம் உடலுக்கு தேவையான பொட்டாசியதில் 60 சதவிகிதமும்  மெக்னீசியம் 31 சதவிகிதம், புரோட்டின் 20 சதவீதம்,நார்சத்து 40 % உள்ளது. கீரையை விட மூன்று மடங்கு இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. இதில் ஆல்பா லினோலினிக் ஆசிட்  இருப்பதால் இதய ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.

துத்தநாக  சத்து இருப்பதால் பற்களில் படிந்துள்ள கரைகளைப் போக்கி மீண்டும் வராமலும் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தையும் போக்குகிறது.பெண்களுக்கு கருவுறுதலுக்கு முக்கியமான ஓவுலேஷன் காலங்களை சீராக்குகிறது .

சியா விதைகள் சரும ஆரோக்கியத்திற்கும் பயன்படுகிறது. இதில் அதிகமான ஆன்டி ஆக்சிடென்ட்கள் இருப்பதால் சருமத்தில் சேதமான செல்களை சரி செய்து மீண்டும் சேதம் அடையாமல் பாதுகாக்கிறது ,இதனால் சருமம் பளபளப்பாகவும் காணப்படும்.

சியா விதையை எடுத்துக் கொள்ளும் முறை:

சியா விதைகளை கட்டாயமாக நீரில் ஊற வைத்து தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாள் ஒன்றுக்கு இரண்டு ஸ்பூன் போதுமானதாகும் .முதல் முதலில் எடுத்துக் கொள்ளும் போது ஒரு ஸ்பூன் அளவில்  இருந்து தொடங்க வேண்டும்.

குழந்தைகளுக்கு கொடுக்கும்போது கட்டாயம் ஊற வைத்து தான் கொடுக்க வேண்டும். கர்ப்பிணிகள் மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் எடுத்துக் கொள்ளலாம். மேலும் இந்த சியா விதைகளை ஜூஸ் ,சாலட் போன்றவற்றில் கலந்தும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது இந்த விதைகளை வறுத்து பொடி செய்து இட்லி மாவு ,சப்பாத்தி மாவு போன்றவற்றில் கலந்தும் எடுத்துக் கொள்ளலாம்.

சியா விதையின் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் அதை தினமும் பயன்படுத்தி நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 days ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

2 days ago